இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்கள் சமீபத்திய வாரங்களில் ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறைந்துவிட்டதைக் காட்டுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 94% செயல்திறனுடன் ஒப்பிடும்போது, தற்போது அறிகுறியுடன் கூடிய தொற்றுநோயைத் தடுப்பதில் இரண்டு டோஸ்கள் 64% மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது. இதேபோல் மருத்துவமனையில் சேர்ப்பதைத் தடுப்பதில் முந்தைய 97% இலிருந்து குறைந்து 93% பயனுள்ளதாக இருக்கிறது.
டெல்டா இணைப்பு
டெல்டா மாறுபாடு இஸ்ரேலில் சமீபத்திய 90% பாதிப்புகளுக்கு காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது, இஸ்ரேல் ஜூன் மாதத்தில் கட்டுப்பாடுகளை நீக்கியது. இருப்பினும் அங்கு 57% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
டெல்டாவுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி 70% பயனுள்ளதாக இருப்பதாக ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கண்டறிந்ததையடுத்து இந்த புதிய தகவல்கள் வந்துள்ளன. கடந்த மாதம், தி லான்செட்டில் ஒரு ஆய்வில், தடுப்பூசியின் ஒரு டோஸ் டெல்டாவிற்கு எதிராக 32% பாதுகாப்பை மட்டுமே அளிக்கிறது, அதேநேரம் அசல் திரிபுக்கு எதிராக 79% பாதுகாப்பை அளிக்கிறது. இரண்டு டோஸ்களுக்குப் பிறகும், ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குவது, டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக அசல் திரிபுக்கு எதிரான அளவை விட ஐந்து மடங்கு குறைவாக இருந்தது.
ஆனால் ஜூன் மாதத்தில் பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்தின் பகுப்பாய்வு உட்பட பிற ஆய்வுகள், ஃபைசர் தடுப்பூசி டெல்டாவுக்கு எதிராக கூட மருத்துவமனையில் அனுமதிப்பதில் இருந்து அதிக பாதுகாப்பை வழங்குகிறது என்பதை ஒப்புக்கொள்கிறது.
ஃபைசர் & டெல்டா
இஸ்ரேலின் தரவு ஜூன் 6 முதல் ஜூலை தொடக்கத்தில் சேகரிக்கப்பட்ட “முதற்கட்ட” புள்ளிவிவரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. கொரோனாவுக்கான இஸ்ரேலின் தேசிய நிபுணர் குழுவின் தலைவரான ரான் பாலிசர், டெல்டாவுக்கு எதிரான செயல்திறனை இப்போது துல்லியமாக மதிப்பிட முடியாது என்று கூறியுள்ளார்.
ஃபைசர் செய்தித் தொடர்பாளர் டெர்விலா கீன் இஸ்ரேலில் இருந்து வரும் இந்த தரவைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்று ஒரு ப்ளூம்பெர்க் அறிக்கை கூறியது. ஆனால் இதுவரையிலான சான்றுகள் ஃபைசர் தடுப்பூசி “டெல்டா வகைகளுக்கு எதிராக தொடர்ந்து பாதுகாக்கும்” என்று கூறுகிறது.
ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு தடுப்பூசி போடப்பட்டவர்கள் குறித்து விரிவான ஆய்வை இஸ்ரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஃபைசரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா, இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட 12 மாதங்களுக்குள் மக்களுக்கு மூன்றாவது டோஸ் தேவைப்படலாம் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil