அரசியல் கட்சிகள் பெரும்பாலும் தங்கள் கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்த துணை முதல்வர்களை நியமிக்கும் நடைமுறையை பின்பற்றுகின்றன. ஆனால், அரசியலமைப்பு ரீதியாக பார்த்தல் , ஒரு மாநிலத்தின் துணைமுதல்வர் பதவி அம்மாநிலத்தின் ஒரு அமைச்சரவை மந்திரி பதவிக்கு சமமாகத் தான் கருதப்படுகிறது. 1966-67 ஆம் ஆண்டில் ராவ் பிரேந்தர்சிங் தலைமையிலான அரசாங்கத்தில் ஜாட் பிரிவின் தலைவரான சவுத்ரி சந்த் முதன் முதலில் ஹரியானாவின் துணை முதலவர் பதவி வகித்தார். அதுமுதல், துணை முதல்வர் பதவி ஹரியானாவின் பாரம்பரியாமாக இருந்து வருகிறது.
ஜனாயகம் ஜனதா கட்சித் தலைவர் , துஷ்யந்த் சவுதலா தற்போது ஹரியானாவின் துணை முதல்வராக பதவியேற்க விருக்கிறார். 2005 முதல் 2008 வரை, முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகனான சந்தர் மோகன் அம்மாநிலத்தின் துணை முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
துணை முதல்வர் என்றால் என்ன அர்த்தம்?
இந்தியாவின் அரசியலமைப்பு ; அமைச்சரவை, முதல் அமைச்சர் பற்றியே பேசுகிறது. துணை முதல்வர் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. எனவே, துணை முதல்வர் பதவி அரசியலைப்பு பதவி இல்லை. பெயர் குறிப்பிடுவது போல, அமைச்சரவைக் குழுவில் முதல்வருக்கு அடுத்தபடியாக துணை முதல்வர் இருப்பார்.
அரசாங்கத்தின் செயல்பாட்டில் துணை முதல்வரின் பங்கு என்ன?
ஒரு மாநில அரசாங்கத்தின் பொதுநிர்வாகம், எப்போதுமே முதல் அமைச்சர் கையில் இருக்கும். அதையும் தாண்டி லஞ்ச ஒழிப்பு , உள்துறையை முதல்வர் முதன்மையாக வைத்துக் கொள்வார். மேலும், பிரிவு (கிளாஸ் ) I அதிகாரிகளை (ஐ.ஏ.எஸ் ) பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் முதல் அமைச்கருக்கே உரித்தான அதிகாரமாகும். எனவே, இது இல்லாத துறைகள் துணை முதல்வருக்கு ஒதுக்குவது வழக்கம். துணை முதல்வருக்கு மற்ற அமைச்சர்கள் போல் இரண்டு மூன்று துறைகளும் ஒதுக்கப்படலாம்.
பிரதானக் கட்சியாகவோ அல்லது மாநிலத்தின் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகவோ இருந்தால், துணை முதல்வராக இருக்கும் நபர் நிதி மற்றும் வருவாய்த் துறையைத் தக்க வைத்துக் கொள்ளலாம் . சிறிய கட்சியில் இருந்து துணை முதல்வர் ஆகும் ஒருவருக்கு விவசாயம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள், பெண் மற்றும் குழந்தை முன்னேற்றம் போன்ற துறைகளைப் பெறுவார்கள். எனவே, துணை முதல்வரின் உண்மையான முக்கியத்துவம் அவருக்கு ஒதுக்கப்பட்ட போர்ட்ஃபோலியோவைப் பொறுத்தது.
துணை முதல்வரிடம் ஏதேனும் குறிப்பிட்ட நிதி அதிகாரங்கள் உள்ளனவா?
இல்லை, துணை முதல்வர் எந்த குறிப்பிட்ட நிதி சக்தியையும் அனுபவிப்பதில்லை. இந்த விசயங்களில் மற்ற அமைச்சர்களைப் போலவே துணை முதல்வரும் செயல்படுவார். தனது சொந்த துறைக்கு கூட, பட்ஜெட்டில் ஒத்துக்கப்பட்ட நிதியை விட கூடுதலாக செலவு செய்ய வேண்டும் என்றால் கூட முதல்வரின் அனுமதியை துணை முதல்வர் வாங்கியாக வேண்டும்.
முதல்வருக்குச் செல்லும் அனைத்து உத்தியோகபூர்வ கோப்புகளும் துணை முதல்வர் மூலம் அனுப்பப்படும் என்று அர்த்தமா?
இல்லை, முதல்வருக்கான உத்தியோகபூர்வ கோப்புகள் துணை முதல்வர் மூலமாக அனுப்பப்படுவதில்லை. முதல்வர் பணியில் எந்த தலையீடும் துணை முதல்வரால் செய்யப்படாது. முதல்வரின் உத்தியோகபூர்வ கோப்புகளை துணை முதல்வர் பார்வையிடவோ, மாற்றியமைக்கவோ முடியாது.
ஹரியானாவின் துணை முதல்வருக்கு எந்த துறை வழங்கப்படும் ?
ஏற்கனவே சொன்னது போலவே , ஒதுக்கப்பட்ட துறையைப் பொறுத்த வரையில் துணை முதல்வரின் தாக்கம் தீர்மானிக்கப்படும். நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஐந்து மாநில அமைச்சர்கள் தோல்விகளை சந்தித்தனர். இவற்றில் நிதி, வருவாய், கலால் மற்றும் வரிவிதிப்பு, விவசாயம், மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துகள், சுரங்கங்கள் மற்றும் புவியியல் போன்ற அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளதால் துஷ்யந்த் சவுதலாக்கு இதில் ஏதாவது கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.