அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை உத்தரவிட்டது, ஆளுநரின் அதிகாரம் மீதான அரசியலமைப்பு வரம்புகளை சோதித்து, ராஜ்பவனின் அறியப்படாத அரசியல் எல்லைக்குள் தள்ளுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் 164 (1) வது பிரிவு, முதலமைச்சரை ஆளுநர் நியமிக்க வேண்டும் என்றும் மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள் என்றும், ஆளுநரின் விருப்பத்தின் பேரில் அமைச்சர்கள் பதவி வகிப்பார்கள் என்றும் கூறுகிறது
இருப்பினும், ஆளுநரின் அதிகாரம் முதன்மையாக அமைச்சர்களின் "உதவி மற்றும் ஆலோசனையில்" இருந்து பாய்கிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் ஒரு வரி விளக்குகிறது.
ஷம்ஷேர் சிங் vs பஞ்சாப் மாநிலம் என்ற வழக்கில், "உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் 1974 இல் அளித்த தீர்ப்பில், ஒரு ஆளுநர் தனது முறையான அரசியலமைப்பு அதிகாரங்களை அமைச்சர்களின் உதவி மற்றும் ஆலோசனையின்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்று கூறியது.
ஆளுநரின் விருப்பம் என்பது சட்டமன்றத்தில் அரசாங்கம் பெரும்பான்மையை அனுபவிப்பதில் இருந்து பாய்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
மக்களவை முன்னாள் பொதுச்செயலாளர் பி.டி.டி ஆச்சாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், "முதல்வரின் அனுமதியின்றி ஒரு அமைச்சரை கவர்னர் பதவி நீக்கம் செய்வது இதுவே முதல் நிகழ்வாகும். இதுபோன்ற எந்த நிகழ்வும் இதற்கு முன்பு நடந்தது இல்லை. முதலமைச்சரின் ஆலோசனையின்றி, ஒரு ஆளுநரால் அமைச்சரை நியமிக்கவோ அல்லது பதவி நீக்கம் செய்யவோ முடியாது" என்று ஆச்சாரி கூறினார்.
கடந்த ஆண்டு, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில நிதியமைச்சர் கே.என் பாலகோபால் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் விருப்பம் திரும்பி பெறப்படும் எனவும் எச்சரிக்கும் வகையிலும் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த விஜயன், "இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் மிகவும் குறைவாகவே உள்ளன" என்று கூறினார்.
மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்கில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் போட்டியை தீர்க்க ஆளுநர் தலையிடுவதை எச்சரித்தது.
"அரசியலமைப்புச் சட்டம் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டத்தால் அவருக்கு வழங்கப்படாத அதிகாரத்தை அவர் (கவர்னர்) பயன்படுத்த முடியாது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அரசியலில் நுழைவதற்கும், உட்கட்சி பூசல் அல்லது கட்சியில் நுழைவதற்கும் ஆளுநருக்கு நிச்சயமாக அதிகாரம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“