scorecardresearch

நோ பில்டர்… உப்புநீரை குடிநீராக மாற்றும் போர்டபிள் சாதனம் கண்டுபிடிப்பு

உப்புநீரை குடிநீராக்கும் மற்ற சாதனங்களை தண்ணீரை சுத்தமாக்கிட பில்டர்களை பயன்படுத்தும் போது, இச்சாதனத்தில் குடிநீரில் இருந்து துகள்களை அகற்ற மின்சார சக்தி பயன்படுத்தப்படுகிறது

Massachusetts Institute of Technology (MIT) ஆராய்ச்சியாளர்கள், உப்புநீரை குடிநீராக்கும் சிறிய போர்டபிள் சாதனத்தை உருவாக்கியுள்ளனர். அதன் எடை10 கிலோவிற்கும் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம், துகள்கள் மற்றும் உப்புகளை அகற்றி குடிநீராக வழங்குகிறது.

சாதனம் என்ன செய்யும்?

சூட்கேஸ் சைஸ் அளவு கொண்ட இச்சாதனத்திற்கு, செல்போனுக்கு தேவையானதை விட குறைவாக சார்ஜ் ஏற்றினால் போதும். சொல்லப்போனால், இதனை சிறிய, கையடக்க சோலார் பேனல் மூலம் இயக்கலாம். அதனை, ஆன்லைன் 50 டாலர் அதாவது 3800 ரூபாய்க்கு வாங்கிவிடலாம். இந்த சாதனம் உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த குடிநீருக்கான தரத்தை விட, அதிகமாக தரத்துடன் குடிநீரை வழங்குகிறது. ஒரு பட்டனை கிளிக் செய்வது மூலம், இந்தச் சாதனத்தை இயக்கலாம்.

இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், மற்ற உப்புநீரை குடிநீராக்கும் கருவிகளில் பொருத்தப்பட்டிருக்கும் பில்டர் உபயோகம் கிடையாது. இது குடிநீரில் இருந்து துகள்களை அகற்ற மின்சார சக்தியைப் பயன்படுத்துகிறது. பில்டர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாததால், நீண்ட காலத்திற்கு உபயோகிக்கலாம்.

இதை தொலைதூர மற்றும் வளங்கள் குறைவான பகுதியில் வசிப்போரும், பேரழிவுகளில் இருந்து தப்பிச் செல்லும் அகதிகளும் அல்லது நீண்டகால ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வீரர்களும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

பேராசிரியர் ஜொங்யூன் ஹான் கூறுகையில், தன்னிச்சையான உப்புநீக்கம் செயல்முறைகளுக்குப் பின்னால் இருக்கும் இயற்பியலில் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம். அதன் சிஸ்டத்தை உருவாக்கி, கடல் நீரில் பரிசோதித்து பார்த்தோம். இது எனக்கு அரத்தமுள்ள மற்றும் பலனளிக்கும் அனுபவமாக இருந்தது என்றார்.

எப்படி வேலை செய்கிறது?

10 ஆண்டுகளுக்கு முன்பு ஹானின் குழுவால் முன்னோடியாக இருந்த அயன் கான்சன்ட்ரேஷன் போலரைசேஷன் டெக்னிக்கை, இச்சாதனம் நம்பியுள்ளது. தண்ணீரை பில்டர் செய்வதற்கு பதிலாக, இந்த செயல்முறையில் எலக்ட்ரிக் ஃப்ல்டில் சால்ட், பேகட்ரீயா, வைரஸ் உட்பட பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் சார்ஜ் பார்டிக்கலை மின் சக்தி மூலம் பிரித்தெடுக்கிறது. சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் இரண்டாவது பகுதி வாயிலாக வெளியேற்றப்படுகிறது. செயல்முறையில் திடப்பொருள்கள் நீக்கப்பட்டு, சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகுக்கிறது.

‘Portable Seawater Desalination System for Generating Drinkable Water in Remote Locations’ என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை இந்த லிங்க்கில் காணலாம் https://pubs.acs.org/doi/10.1021/acs.est.1c08466

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Device change sea water into drinking water