மெட்ஃபோர்மின் என்பது இரத்தத்தில் சர்க்கரை குறைக்கும் மருந்து. இது பெரும்பாலும் வகை 2 நீரிழிவு நோய்க்கான ஆரம்ப சிகிச்சையாக (உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இணைந்து) பயன்படுத்தப்படுகிறது.
இம்யூனிட்டி என்ற இணையதள பத்திரிக்கையில் கலிபோர்னியா பல்கலைக்கழக சான் டியாகோ (யு.சி.எஸ்.டி) ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் வெளியிடப்பட்டது.
அதில் மெட்ஃபோர்மினின் அழற்சி எதிர்ப்பு நடவடிக்கைக்கான மூலக்கூறு வழிமுறை மற்றும் SARS-CoV-2 நோயால் பாதிக்கப்பட்ட எலிகளில் மெட்ஃபோர்மின் நுரையீரல் அல்லது நுரையீரல் அழற்சியைத் தடுக்கிறது என்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்து கடுமையான நுரையீரல் அழற்சியால் சுவாச கோளாறு(ARDS) ஏற்பட்ட எலி மாதிரியில் மெட்ஃபோர்மின் மருந்தை செலுத்தி ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்தனர். இந்த மருந்து ARDSஐ தடுப்பதுடன் அதற்கான அறிகுறிகளையும் சரிசெய்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர் என பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாச கோளாறு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளால் தூண்டப்படுகிறது. சுவாசத்தை கடினமாக்குகின்றன மற்றும் அத்தியாவசிய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கலை கட்டுப்படுத்துகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் மரணத்திற்கு இது காரணமாக அமைகிறது.
COVID-19 உடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு சுவாச கோளாறு (ARDS) ஏற்படுவது அடிக்கடி மரணத்திற்கு காரணமாக அமைகிறது.
இம்யூனிட்டி இதழில் ஆன்லைனில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள், பாக்டீரியா எண்டோடாக்சின் வெளிப்பாட்டிற்கு முன்னும் பின்னும் எலிகளுக்கு மெட்ஃபோர்மின் போடப்பட்டதாக கூறியுள்ளது. இதன் விளைவாக ARDS பாதிப்பு ஏற்படுவதை மற்றும் அதன் அறிகுறையை குறைக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil