கோவில் நகரமான கஜுராஹோவில் இருந்து பக்ஸ்வாஹாவின் பாதுகாக்கப்பட்ட காடுகள் 120 கி.மீ தூரத்தில் உள்ளது, அதிகாலையில், இந்தப் பகுதிக்குச் செல்லும்போது ஏறக்குறைய பாதி பயணம் வரை, ஒரு வாகனம் கூட கண்ணில்படவில்லை. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பக்ஸ்வாஹா கிராம மக்கள் பெரும்பாலும் காடுகளுக்குள் வாழ்கின்றனர் மற்றும் பாரம்பரிய விவசாய நடைமுறைகளில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் ஒரு பெரிய தொழிற்சாலை கூட இல்லை, இந்த மாவட்டம் அதிகாரப்பூர்வ பதிவுகளில் வளர்ச்சியடையாததாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆனால் அதன் வறண்ட இலையுதிர் காடுகளுக்குக் கீழே, அதாவது தேக்கு, சால் மற்றும் கைர் மரங்களுக்குக் கீழே, ஆசியாவின் மிக விலையுயர்ந்த வைர இருப்புக்கள் நிறைந்த பாறைகள் உள்ளன. அவற்றின் தரம் 34.20 மில்லியன் காரட்கள், சுரங்க மதிப்பீடுகளின்படி, 53.70 மில்லியன் டன் வைரங்கள் கிம்பர்லைட்டுடன் சேர்ந்துள்ளன, பெரும்பாலும் இதுவரை அவை எடுக்கப்படவில்லை.
இதையும் படியுங்கள்: அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் காடுகள்; அவற்றுக்கு எவ்வாறு சான்றிதழ் அளிக்கப்படுகிறது?
எவ்வாறாயினும், பக்ஸ்வாஹா இதுவரை வளங்களுக்காக தீண்டப்படாத பகுதி, இது இந்தியாவின் இயற்கை வளங்களின் வளமான வங்கி மற்றும் அதன் உலகளாவிய காலநிலை பொறுப்புகளுக்கு இடையிலான இடைவெளியை வெளிப்படுத்துகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்த அதிகாரப்பூர்வ பதிவுகள் இங்கு இயங்குவதற்கு திறந்தவெளி வைரச் சுரங்கத்திற்கு 2,15,875 மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. விலைமதிப்பற்ற கற்களை வணிக ரீதியாக பிரித்தெடுப்பதைத் தடுக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் "வைரங்களுக்கான மரங்கள்" இப்போது சிக்கலின் மையமாக உள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸின் நேரடி ஆய்வு மற்றும் முக்கிய பங்குதாரர்களுடனான நேர்காணல்கள் வெளிப்படுத்துகின்றன.
“பக்ஸ்வாஹாவின் மக்கள் காடுகளில் வாழ்வதால் தங்கள் மரங்களை விரும்புகிறார்கள். அவர்கள் வைரத்தை விரும்பவில்லை. மேலும், இந்த காடுகள் பந்தேல்கண்ட் பகுதியில் உள்ளது, இது தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி. வைரச் சுரங்கம் பற்றிய சுற்றுச்சூழல் விவாதத்திற்கு இது மிகவும் முக்கியமானது" என்று திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் அமித் பட்நாகர் கூறுகிறார். சுரங்கம் அமைய உள்ளப் பகுதியில் 8,000 மக்கள் வசிக்கும் 15 கிராமங்கள் உள்ளன.
"காடு வளர்ப்பு இயக்கம்" செயல்படுத்தப்படும், என அதிகார எல்லை அதிகாரியான பிஜாவரின் துணைப் பிரதேச மாஜிஸ்திரேட் (SDM) ராகுல் சிலாடியா கூறுகிறார். மேலும், “பக்ஸ்வாஹாவில் உள்ள மரங்கள் 15 வருட காலத்திற்குள் கட்டம் கட்டமாக வெட்டப்பட வேண்டும் என்பது திட்டம். வைரச் சுரங்கத்துக்காக மரங்களை வெட்டுவது, புதிய மரங்கள் நடுவது இரண்டும் கைகோர்த்துச் செய்யப்படலாம். இதனால் இப்பகுதி மக்கள் வேலைவாய்ப்பு பெற்று, இப்பகுதியின் செல்வம் அவர்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்,'' என்றும் அவர் கூறினார்.
இந்தக் கதையை அடிக்கோடிட்டுக் காட்டுவது, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முக்கியக் குழுவால் எழுப்பப்பட்ட கவலைகள், “பக்ஸ்வாஹா வனத்தைக் காப்பாற்று” இயக்கத்தில் சேரும் உயர்மட்ட ஆர்வலர்களுடன் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் வைரலாகி வருகின்றன. ஒரு இந்திய சுரங்க நிறுவனம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக பச்சை சமிக்ஞைக்காக (திட்ட அனுமதிக்காக) காத்திருக்கிறது.
2006 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ரியோ டின்டோவிற்கு மத்திய பிரதேச மாநில அரசாங்கம் ஒரு வாய்ப்புள்ள குத்தகையை வழங்கியதாக பதிவுகள் காட்டுகின்றன, சுரங்க நிறுவனத்தின் ஆரம்ப மதிப்பீடுகள் பின்தங்கிய வனப் பகுதியின் அடியில் என்ன இருக்கிறது என்பதற்கான ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில், ரியோ டிண்டோ இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன் பெரிய அளவில் முன்னேறத் தவறிவிட்டது.
2019 ஆம் ஆண்டில், ஆதித்யா பிர்லா குழுமத்தின் சுரங்கப் பிரிவான எஸ்செல் மைனிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பக்ஸ்வாஹாவின் கீழ் வரும் பண்டர் வைரத் தொகுதிக்கான மின்-ஏலத்தை வென்றது. 364 ஹெக்டேருக்கு சுரங்க உரிமை வழங்கப்பட்டது, ரியோ டின்டோவுக்காக முன்மொழியப்பட்ட பகுதியில் சுமார் 40 சதவீதம், நிறுவனம் ரூ.2,500 கோடி மூலதன முதலீடு மற்றும் முக்கியமாக பக்ஸ்வாஹா கிராமங்களில் இருந்தும் மொத்தமாக சுமார் 400 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதியளித்தது.
ஆனால் இந்த திட்டம் களத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தது.
2021 இல் கிராம மக்கள் மரங்களை கட்டிப்பிடித்த படங்கள் வைரலானாலும், நர்மதா பச்சாவோவின் மேதா பட்கர் மற்றும் ஸ்வராஜ் இந்தியாவின் யோகேந்திர யாதவ் ஆகியோர் பிரச்சாரத்தில் இணைந்தனர். நிறுவனம் இயற்கை வளங்களை "அழிக்கிறது" என்றும் 2.15 லட்சம் மரங்களை வெட்டுவது "சுற்றுச்சூழல் பேரழிவிற்கு" வழிவகுக்கும் என்றும் வழக்கறிஞர் ப்ரீத்தி சிங் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது உட்பட பல பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன. மற்றொரு வழக்கறிஞரான சுரேந்திர வர்மா, பக்ஸ்வாஹாவில் உள்ள 25,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் அழிக்கப்படும் என்று கூறி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இவற்றின் தாக்கம் உடனடியாக இருந்தது. ஜூன் 2021 இல், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) சுற்றுச்சூழல் அனுமதி வரும் வரை மரங்களை வெட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது. செப்டம்பர் 2022 இல், உச்ச நீதிமன்றம் மனுதாரர்களை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டது. மேலும், 2022 அக்டோபரில், பாறை ஓவியங்களின் தொல்பொருள் மதிப்பைக் காரணம் காட்டி, சுரங்கத் தொழிலுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிக எண்ணிக்கையில் மரங்கள் வெட்டப்படுவது அரிதானது, ஆனால் அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு மரங்கள் வெட்டப்படுவது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு மார்ச் மாதம், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுற்றுச்சூழல் அமைச்சகம், 2020-21ஆம் ஆண்டில் வளர்ச்சித் திட்டங்களுக்காக கிட்டத்தட்ட 31 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டதாக தெரிவித்திருந்தது.
ஆனால் பக்ஸ்வாஹாவில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனைக் குழுவால் (எஃப்.ஏ.சி) வைரத் தொகுதி ஏற்கனவே சிவப்புக் கொடியிடப்பட்டதாக (நிறுத்தப்பட்டுள்ளதாக) பதிவுகள் காட்டுகின்றன. ஜூலை 12, 2016 அன்று, பன்னா புலிகள் காப்பகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த தொகுதி, "இயற்கை தன்மையை சீர்குலைக்கும்" என்று அமைச்சகம் எச்சரித்தது. மேலும் அந்த நேரத்தில் வருங்கால உரிமத்தை வைத்திருந்த ரியோ டின்டோவின் திருத்தப்பட்ட முன்மொழிவானது, "மேற்பரப்புப் பிரித்தெடுப்பைச் சார்ந்தது, இது அதிக அளவிலான வன நில பயன்பாடு மற்றும் உயர்தர வன மரங்களை நிரந்தரமாக இழக்கச் செய்யும்" என்றும் குறிப்பிட்டது. அமைச்சகத்தின் ஆலோசனை: "நிலத்தடி சுரங்கம்" அமைக்க வேண்டும் என்பது. ஒரு மாதம் கழித்து, ஆஸ்திரேலிய நிறுவனம் ரியோ டின்டோ பக்ஸ்வாஹாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
எஸ்செல் நிறுவனம் பொறுப்பேற்றவுடன், மாநில அரசு மீண்டும் வன அமைச்சக ஆலோசனைக் குழுவை (FAC) அணுகியது. மார்ச் 31, 2022 அன்று, குழு அதன் முந்தைய கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தியது, மேலும் 204.6 ஹெக்டேர் வன நிலத்தை பிரித்தெடுக்கப்பட்ட கிம்பர்லைட்டில் இருந்து கழிவுகளை கொட்டுவதற்கு அரசாங்கம் "போதுமான நியாயத்தை வழங்கவில்லை" என்று பதிவுகள் காட்டுகின்றன.
எஸ்செல் மைனிங்கைத் தொடர்பு கொண்டபோது, இந்த விஷயம் "நீதிமன்றத்தில் இருப்பதால்" கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியது. நீதிமன்றத்தில், இதற்கிடையில், நீதிமன்றத் தடை காரணமாக சுரங்கத்தில் ஒரு மந்தநிலை உள்ளது, மேலும் விரக்தி மற்றும் அச்சம் அதிகரித்து வருகிறது.
"ரியோ டின்டோ இந்த கிராமங்களில் இருந்து 360 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது. அவர்கள் சுரங்கத்தை கைவிட்டு சென்றபோது, எங்கள் ஒவ்வொருவருக்கும் இழப்பீடு கொடுத்தார்கள். எனக்கு ரூ.3 லட்சம் கிடைத்தது. ஆனால் புதிய நிறுவனத்தைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது, யாரும் எங்களைச் சந்திக்க வரவில்லை, ”என்று ரியோ டின்டோவின் காவலாளியாக பணிபுரிந்த வீரேந்திர குமார் நிஷாத் கூறுகிறார், மேலும் அப்போது முதல் வேலையில்லாமல் இருக்கிறார். கசேரா கிராமத்தைச் சேர்ந்த நிஷாத், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுடன் சேர்ந்து, காட்டுப் பாதைகள் வழியாக 30 நிமிட நடை பயணம் மூலம் திட்டத்துடன் தொடர்புடைய ஆரம்ப துளையிடல் செய்யப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
"புதிய சுரங்க நிறுவனம் எங்களுக்கு சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்க வேண்டும்," என்று ரியோ டின்டோவால் கள மேற்பார்வையாளராக பணியமர்த்தப்பட்ட தியமார் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் பிரதாப் யாதவ் கூறுகிறார்.
ரியோ டின்டோ மற்றும் எஸ்செல் மைனிங் நிறுவனங்களின் அதிகாரிகளும் கிராமத் தலைவர்களும் 10 லட்சம் மரக்கன்றுகள் இழப்பை ஈடுசெய்யும் வகையில் வனப் பரப்புக்குத் திட்டம் தீட்டியுள்ளனர் என்று தியாமரின் முன்னாள் சர்பஞ்ச் மோதி யாதவ் கூறுகிறார். இந்த முயற்சிக்காக ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் பல “சபாக்கள்” (கூட்டங்கள்) நடத்தப்பட்டன, இதுவரை ஒரு வருடத்திற்கு முன்பு எஸ்செல் மைனிங்குடன் ஒன்று நடத்தப்பட்டது என்று அவர் கூறுகிறார். “15 கிராமங்களுக்கு சுரங்கங்களிலும், புதிய மரங்கள் நடுவதற்கும் இரட்டை வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் திட்டங்கள் காகிதத்தில் இருந்தன,” என்கிறார் மோதி யாதவ்.
தற்போது, எஸ்செல் மைனிங்கின் ஒரே முத்திரை இங்கு காணக்கூடிய மருத்துவ மற்றும் நோயறிதல் உபகரணங்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸில் மட்டுமே தென்படுகிறது, அவர்கள் 2021 இல் உள்ளூர் அரசாங்க மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினர். ரியோ டின்டோவைப் பொறுத்தவரை, பக்ஸ்வாஹாவுக்கு அருகில் நெடுஞ்சாலையில் ஒரு பழைய வைர செயலாக்க ஆலை உள்ளது. அதன் வாயில்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.