தடுப்பூசி போட தயங்கும் மக்கள்: ஊக்குவிக்க சலுகைகளை அறிவிக்கும் நாடுகள்

covid-19 vaccine: கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வோரை ஊக்குவிக்க பல்வேறு நாடுகள் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

corona virus vaccine

அமெரிக்காவிலும் வேறு சில நாடுகளிலும், தடுப்பூசிகளின் தேவை அதிகரித்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. ஏராளமான மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டாலும் அனைவருக்கும் தடுப்பூசி போட அந்தந்த அரசு நடவடிக்கையை முன்னெடுத்து உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு மீதமுள்ள மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அவர்களை ஊக்குவிக்கும் வழிமுறைகளைக் அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளில் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது?

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) த்தின்படி, இதுவரை நாட்டில் கிட்டத்தட்ட 295 மில்லியன் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவற்றில் சுமார் 167 மில்லியன் (50.5 சதவீதம்) குறைந்தது ஒரு டோஸ் மற்றும் 135 மில்லியன் (40.7 சதவீதம்) முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து ஏப்ரல் 1 ஆம் தேதி தினசரி போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 மில்லியனுக்கு அதிகமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு தடுப்பூசி வேகம் குறைந்துவிட்டது. மே 29ஆம் தேதியன்று சுமார் 29,000 டோஸ் போடப்பட்டது. நாட்டில் சில மாநிலங்களில் தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்கும் பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

உலகளவில் மே 30 வரை 1.9 பில்லியன் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. இதில் 1.03 பில்லியன் ஆசியாவில் போடப்பட்டுள்ளது.

தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியான ஒரு கட்டுரையில்,

நிதி ஊக்கத்தொகைகளை வழங்குவதில் ஒரு குறிப்பிட்ட முறை பின்பற்றப்படுகிறது. இது தடுப்பூசியின் மறைமுக செலவுகளை ஈடுசெய்ய பயன்படுத்தப்படலாம், இதில் திட்டமிடலுக்கான நேரம் செலவழித்தல், பயணம் செய்தல் அல்லது காத்திருத்தல், மணி நேர ஊதியம் பெறும் தொழிலாளர்கள் இழந்த வருமானம் அல்லது குழந்தை பராமரிப்பு போன்ற செலவுகள் ஆகியவை அடங்கும். இந்த செலவுகள் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு தடுப்பூசி போடுவதைத் தடுக்கிறது. தொற்றுநோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தடுப்பூசி செலுத்துவது சமூக கட்டயாமாகி உள்ளது. இந்த இலக்கை நோக்கி பயணிக்க நிதி சலுகைகளை அறிவிப்பது மக்களை ஊக்குவிக்கும்.

உலக அளவில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள்

செர்பியா: நாட்டு மக்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள தயங்கியதால் செர்பியாவின் தலைவர் அலெக்ஸாண்டர் வுசிக் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு அரசு பணம் தரும் என கூறினார். 7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 1.3 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இஸ்ரேல்: தடுப்பூசியை அதிக அளவில் செலுத்தி கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட நாடுகளில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது. நாட்டின் “கிரீன் பாஸ்” திட்டம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிய அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு சில நன்மைகளை அளித்தது. இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டவர்கள் ஜிம்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அணுகலாம். ஆனால் இப்போது, ​​சுமார் 500 பேர் மட்டுமே நாட்டில் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.ஜூன் 1 முதல் கிட்டத்தட்ட அனைத்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளையும் நீக்க நாட்டின் சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது, இதன் கீழ் வணிகங்கள் மற்றும் பிற இடங்கள் இனி கிரீன் பாஸ் திட்டத்தின் கீழ் செயல்பட தேவையில்லை என ஜெருசேலம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊக்கத்தொகைகளை வழங்கும் அமெரிக்கா

நியூயார்க்: தடுப்பூசி போடும் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த பின்னர் அதனை ஊக்குவிப்பதற்காக வாக்ஸ் & ஸ்க்ராட்ச் திட்டத்தை அரசு கொண்டு வந்தது. கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ மே மாதம் சில்லறை விற்பனையாளர்களால் $ 20 க்கு விற்கப்படும் லாட்டரி டிக்கெட்டுகள், நியூயார்க்கில் அமைந்துள்ள பத்து தளங்களில் ஒன்றிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. சிட்டி, லாங் ஐலேண்ட், மிட்-ஹட்சன், சென்ட்ரல் நியூயார்க், ஃபிங்கர் லேக்ஸ், மொஹாக் பள்ளத்தாக்கு மற்றும் மேற்கு நியூயார்க் பிராந்தியங்கள் ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் அல்லது ஜான்சன் மற்றும் ஜான்சன் தடுப்பூசி போட வேண்டும் என கூறியது.

இந்த லாட்டரி டிக்கெட்டுகளை சுரண்டினால் அதிகபட்சமாக $5 மில்லியன் பரிசு மற்றும் குறைந்தபட்ச பரிசு $ 20 ஆகும். “ஒரு தடுப்பூசியை விரைவாகவும் எளிதாகவும் பெறுவதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதங்கள் மாநிலம் முழுவதும் குறைவாக இருப்பதால் அதனை அதிகரிக்க சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக கவர்னர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அசோசியேட்டட் பிரஸ்ஸில் ஒரு அறிக்கை, நியூயார்க் மாநிலத்தில் லாட்டரி வெல்ல ஒன்பது வாய்ப்புகளில் ஒன்று உள்ளது என்று கூறியுள்ளது

ஓஹியோ: கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க வேக்ஸ் மில்லியன் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓஹியோவில் 12 முதல் 17 வயதிக்கு உட்பட்டவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு போட்டியில் நுழைந்து ஐந்தில் ஒரு வாய்ப்பை பெறலாம். ஓஹியோவின் மாநில கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கும் படிப்பு, தங்கும் செலவு உட்பட நான்கு வருட முழு ஸ்காலர்ஷிப் பெறலாம். 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் முதல் டோஸ் செலுத்திக்கொண்டால் ஐந்தில் ஒருவர் $1 மில்லியன் பரிசை வெல்ல வாய்ப்பு உள்ளது.

கலிபோர்னியா: ஜூன் 15ஆம் தேதிக்குள் தடுப்பூசி போடும் விகிதத்தை அதிகரிக்க கவர்னர் “வேக்ஸ் ஃபார் தி வின்” என்ற திட்டத்தை கொண்டு வந்தார். 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 62.8 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே தடுப்பூசி போட்டுள்ளனர். குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கலிஃபோர்னியர்களும் ஜூன் மாதம் நடைபெறும் வரைப்பட பரிசு போட்டிக்கு தகுதியுடையவர்கள். மொத்தம் 30 வெற்றியாளர்கள் ஜூன் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் “$ 50,000 வெள்ளி” ரொக்கப்பரிசுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் $1.5 மில்லியன் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 27 முதல், COVID-19 தடுப்பூசியை போட தொடங்குபவர்கள் மற்றும் இரண்டு டோஸ்களும் போட்டுக்கொள்பவர்கள் என 2 மில்லியன் மக்கள் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள 50 டாலர் ப்ரீபெய்ட் அல்லது மளிகை அட்டையைப் பெற தகுதியுடையவர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Different kinds of covid vaccine incentives being adopted around the world

Next Story
லிட்டோரியா மிரா: சாக்லேட் நிற தவளைகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வைLitoria mira, chocolate frogs
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com