விமான நிலையங்களில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகம்; எப்படி வேலை செய்கிறது?

டெல்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் இருந்து விமானத்தில் செல்கிறீர்களா? இந்த விமான நிலையங்களில் காகிதமில்லா மற்றும் தொடர்பில்லா சரிபார்க்கும் நடைமுறை மூலம் ‘டிஜியாத்ரா’ எனப்படும் முகத்தை அடையாளம் காணும் மென்பொருள் உதவியுடன் பயணம் செய்யலாம்.

india airport facial recognition technology, digiyatra, what is digiyatra, டிஜியாத்ரா, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், இந்தியா, விமான நிலையங்கள், facial recognition tech at airports, Tamil indian express

டெல்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் இருந்து விமானத்தில் செல்கிறீர்களா? இப்போது இந்த விமானநிலையங்களில் காகிதமில்லா மற்றும் நேரடி தொடர்பு இல்லாத சரிபார்க்கும் நடைமுறை இருக்கும். மேலும், ‘டிஜியாத்ரா’ எனப்படும் முகத்தை அடையாளம் காணும் மென்பொருளின் உதவியுடன் நீங்கள் பயணம் செய்யலாம். அது என்ன டிஜி யாத்ரா, அது எப்படி செயல்படுகிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் விமானப் பயணத்தைத் தொந்தரவு இல்லாததாக மாற்றுவதற்காக காகிதமில்லா நுழைவை வியாழக்கிழமை (டிசம்பர் 1) முதல் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியின் கீழ், விமான நிலையங்களில் நுழைவதற்கு ‘டிஜியாத்ரா’ (DigiYatra) என்ற முகத்தை அடையாளம் காணும் மென்பொருளைப் பயன்படுத்துகிறது. அதாவது, விமானப் பயணிகள் தங்கள் அடையாள அட்டை மற்றும் போர்டிங் பாஸ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

முதற்கட்டமாக, டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய மூன்று விமான நிலையங்களில் தொடங்கி, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, விஜயவாடா ஆகிய நான்கு விமான நிலையங்களில் மார்ச் 2023-க்குள் இந்த முயற்சி தொடங்கப்படும். இதைத் தொடர்ந்து, இந்த தொழில்நுட்பம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.

ஜி.எம்.ஆர். விமான நிலையங்கள் உள்கட்டமைப்பு நிறுவனத்தால் நடத்தப்படும் டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL), ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கான அதன் பயன்பாட்டின் பீட்டா பதிப்பை வெளியிடும் மையத்தின் டிஜியாத்ரா முயற்சியில் மென்பொருள் வெளியிடுவதை ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் தேவையான உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பிற விமான நிலையங்களும் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பை அமைத்து வருகின்றன.

டிஜியாத்ரா என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது?

டிஜியாத்ரா விமான நிலையத்தில் உள்ள பல்வேறு சோதனை நுழைவுகளை காகிதமில்லா மற்றும் நேரடி தொடர்புஇல்லாத செயலாக்கத்தின் மூலம் கடந்து செல்வதையும், அவர்களின் அடையாளத்தை உருவாக்க முக அம்சங்களைப் பயன்படுத்தி, போர்டிங் பாஸுடன் இணைக்கப்படுவதையும் செய்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், விமான நிலையத்திற்குள் நுழைவது, பாதுகாப்பு சோதனை பகுதிகள், விமானம் ஏறுதல் போன்ற அனைத்து சோதனை நுழைவுகளிலும் உள்ள முகத்தை அடையாளம் காணும் அமைப்பின் அடிப்படையில் பயணிகளின் நுழைவு தானாகவே செயலாக்கப்படும்.

எந்த விமான நிலையங்கள்/விமான நிறுவனங்கள் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை வழங்குகின்றன?

டெல்லியின் டெர்மினல் 3, பெங்களூரு மற்றும் வாரணாசி விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த வசதி கிடைக்கும். ஹைதராபாத், புனே, விஜயவாடா மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு விமான நிலையங்களில் அடுத்த மார்ச் மாதத்திற்குள் டிஜியாத்ரா தொடங்கப்படும். பின்னர், மற்ற அனைத்து விமான நிலையங்களிலும் டிஜியாத்ரா விரைவாக விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும்.

விமான நிறுவனங்களில், ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் இண்டிகோ விமானங்களில் தங்கள் உள்நாட்டு நெட்வொர்க்கில் பயணிக்கும் பயணிகள் இந்த மூன்று விமான நிலையங்களில் இந்த வசதியைப் பெறலாம். ஸ்பைஸ்ஜெட், கோஃபர்ஸ்ட் மற்றும் ஆகாசா ஏர் ஆகியவை இன்னும் டிஜியாத்ரா வசதியை வழங்கவில்லை.

டிஜியாத்ரா வசதியை மக்கள் எப்படி பெறலாம்?

இந்தச் சேவையைப் பெறுவதற்கு, ஒரு பயணி ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் தானாக படப்பிடித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி டிஜியாத்ரா செயலியில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அடுத்த கட்டத்தில், போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்யப்பட வேண்டும். மேலும், நற்சான்றிதழ்கள் விமான நிலைய அதிகாரிகளுடன் பகிரப்படும்.

விமான நிலைய மின்-நுழைவு பகுதியில் பயணிகள் முதலில் பார்கோடு செய்யப்பட்ட போர்டிங் பாஸை ஸ்கேன் செய்ய வேண்டும் மற்றும் மின்-நுழைவு பகுதியில் நிறுவப்பட்டுள்ள முக அங்கீகார அமைப்பு பயணிகளின் அடையாளத்தையும் பயண ஆவணத்தையும் சரிபார்க்கும். இந்த செயல்முறை முடிந்ததும், பயணிகள் மின்-நுழைவு பகுதி வழியாக விமான நிலையத்திற்குள் செல்ல முடியும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்து விமானத்தில் ஏற பயணிகள் வழக்கமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயனளிக்கிறது. ஏனெனில், இது பறப்பதை மிகவும் வசதியாக்குகிறது. விமான நிலையங்களில் நெரிசலைக் குறைக்கிறது. துபாய், சிங்கப்பூர், அட்லாண்டா மற்றும் நரிட்டா (ஜப்பான்) உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் முகத்தை அடையாளம் காணும் அமைப்பு செயல்திறனைக் கொண்டுவர உதவியுள்ளது.

டிஜியாத்ரா எப்படி செயல்படுத்தப்படுகிறது?

இந்திய விமான நிலைய ஆணையம் (26% பங்குகள்) மற்றும் பெங்களூரு விமான நிலையம், டெல்லி விமான நிலையம், ஹைதராபாத் விமான நிலையம், மும்பை விமான நிலையம் மற்றும் கொச்சின் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பங்குதாரர்களைக் கொண்ட ஒரு கூட்டு நிறுவனமான டிஜியாத்ரா அறக்கட்டளையால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 74% பங்குகளை இந்த ஐந்து பங்குதாரர்களும் சமமாக வைத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Digiyatra india airports facial recognition technology how does it work

Exit mobile version