காங்கிரஸில் ‘காந்தி’ குடும்பத்திற்கு எதிரான புயல்கள்

காங்கிரஸ் மீதான அதிருப்தியைப் புரிந்துகொள்ள, கட்சி மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மூத்தத் தலைவர் பி.சிதம்பரம் முன்னதாக  வாதிட்டார்.

கட்சியின் ஒவ்வொரு மட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கோள் காட்டி, ஐந்து மாநிலமுன்னாள் முதல்வர்கள், காங்கிரஸ் செயற்குழு  உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23  தலைவர்கள் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

நாடு முழுவதும் இளைஞர்கள், மக்களவைத் தேர்தலில் காங்கிரசைத் தாண்டி நரேந்திர மோடியை சந்தேகத்திற்கு இடமின்றி தேர்ந்தெடுத்துள்ளது என்பதை இந்த கடிதம்  ஒப்புக் கொண்டது. மேலும், ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கையை கட்சி இழந்து வருவது கவலைக்குரிய விஷயம் என்பதையும்  அடிக்கோடிட்டுக்  காட்டுகிறது.

கட்சி தலைமையின் மீது கடுமையான  குற்றச்சாட்டை முன்வைக்கும் இந்த கடிதம், பதினைந்து நாட்களுக்கு முன்னர் அதன் தலைவர் சோனியா காந்திக்கு  அனுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களைத் தாண்டி, இந்திய அரசியல் களத்தில் அதன் தாக்கங்கள் என்ன? 

ஐந்து பக்க கடிதத்தில் உள்ள விசயங்கள் பல வழிகளில் பொருள் கொள்ளப்பட்டு வந்தாலும், பூகோள அளவிலும் (  உதாரணமாக, உ.பி, டெல்லி, இமாச்சலப் பிரேதேசம்    மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் எண்ணிக்கை ரீதியாகவும் பல  உயர் மட்டத் தலைவர்கள் ஒரு அணியாக உருவெடுத்து மாற்றத்திற்கான அழைப்பு விடுவது காங்கிரசில் கட்சியில் அரிதான அரசியல் நிகழ்வாக உள்ளது.

 

இரண்டு  மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வி, பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுக்கும் சூழல் ஏற்பட்ட பின்பும் கட்சியின் செயல்பாடுகள் வழக்கமான பாணியில் செல்லக் கூடாது என்று எண்ணற்ற  கட்சித் தொண்டர்களின் மன நிலையையும், உணர்வையும் ஒப்புக் கொள்வதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

கடிதம் பல வழிகளில் தற்போதைய தலைமைக்கு நெருக்கடியையும், பின்னடைவையும் ஏற்படுத்தும். கட்சித் தலைமை குறித்த நிச்சயமற்ற தன்மை, கட்சிக்குள் உள்ள உட்பூசல், தேவையற்ற முறையில் கட்சி நியமனங்கள் தாமதப்படுவது, அமைப்புக்குள் சுதந்திரமான மற்றும்  வெளிப்படையான விவாதங்கள்  நடைபெறாமல் இருப்பது போன்ற முக்கிய பிரச்சனைகளை மூத்த தலைவர்கள் முதல் இளைய தலைமுறை  தலைவர்கள் வரை கடிதத்தில் அடிக்கோடிட்டுள்ளனர்.

இந்த கடிதம் பல வழிகளில், கட்சியை சிறந்த முறையில் வலுப்படுத்துவதற்கான ஒரு குரல் என்றும், முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கான பணிகளை சிலர் முன்னெடுக்க நேரம் வந்துவிட்டதாகவும் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நெருக்கடி முதலில் ஏன் எற்பட்டது? 

காங்கிரஸ் கட்சியின் சமீப கால அரசியல் வரலாற்றில், இதுபோன்ற ஒருங்கிணைந்த கருத்து வேறுபாடு அரிதாகவே காணப்படுகிறது. குறிப்பாக, 2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில், சோனியா காந்தி கட்சித் தலைமையில் தனது பிடியை நிலைநிறுத்தியதில் இருந்து இத்தகைய சூழல் அக்கட்சிக்கு உருவாக வில்லை. எவ்வாறாயினும், 2004 முதல் 2014 வரை (10 ஆண்டுகள்) காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்ததால், கருத்து வேறுபாடுகள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

இருப்பினும், 2014 முதல், கட்சிக்குள் ஒருவகையான பதட்டமான சூழல் உருவாகியது. ராகுல் காந்திக்கு எதிராக நீண்ட காலமாக சில முணுமுணுப்புக்கள் இருந்தன  என்பது உண்மை தான். ஆனால், இந்த இடைவெளி மற்றும் அதனால் உண்டான அந்நியப்படுதல் பொது மேடையில் வெளிப்படுத்த வேண்டிய ஒரு கட்டத்தை தற்போது எட்டியுள்ளது.

கடந்த மாதம் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில், கட்சிக்குள் நிலவி வந்த மோதல் போக்கு உச்ச நிலையை அடைந்தது.      கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரனனகளை காங்கிரஸ் ஆத்மாத்தமாக பரிசோதிக்க வில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

 

காங்கிரஸ் மீதான அதிருப்தியைப் புரிந்துகொள்ள, கட்சி மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மூத்தத் தலைவர் பி.சிதம்பரம் முன்னதாக  வாதிட்டார்.

இறுப்பினும், மக்களிடத்தில் காங்கிரஸ் மீதான அதிருப்தி  குறித்த சுய பரிசோதனை, இரண்டாவது ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்து தொடங்க வேண்டும் என்று ராஜீவ் சங்கர் சதவ் உள்ளிட்ட சோனியா காந்தி ஆதரவாளர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“எல்லா வகையிலும் சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் … 44  என்ற படுதோல்விக்கு முதலில் எப்படி வந்தோம் … அதுவும் ஆராயப்பட வேண்டும். 2009 இல் நமது எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக இருந்தது. கட்சியில் சீர்திருத்தம் வேண்டும் என்று பலரின் குரல் தற்போது ஒலிக்க தொடங்குகிறது . முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நீங்கள்  மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள். நீங்கள் எங்கு தோல்வியடைந்தீர்கள் என்பதையும் நாம் ஆராய வேண்டும்,”என்று சதவ் கூறினார்.

இத்தகைய கருத்து பரிமாற்றம் தான் , மூத்த காங்கிரஸ் தலைவர்கள்  சோனியா காந்திக்கு அதிருப்திக் கடிதம் எழுதுவதற்கான தீர்மானத்தை உறுதிப்படுத்தியது.

இது முன்னோடியில்லாத ஒரு அரசியல் நெருக்கடியா?

இல்லை,  நிச்ச்சயமாக இல்லை. குழப்பம், கருத்து வேறுபாடு, அரசியல் பிளவு போன்ற நெருக்கடிகள் காங்கிரசுக்கு புதிதல்ல. ஆனால் இந்த முறை வித்தியாசம் என்னவென்றால், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி அதிகாரத்திற்கு வெளியே உள்ளது. அதன் வரலாற்றில் இது இரண்டாவது மிக நீண்ட காலம் என்பது குறிப்பிடத்தக்கது. 1996 -2004 க்கு இடையில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் நாட்டை ஆட்சி செய்து வந்தன.

1998 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய நெருக்கடி காலத்தில,நேரு- காந்தி குடும்பத்தை சேராத சீதாராம் கேசரி கட்சிக்கு தலைமை தாங்கினார்.   சோனியா காந்தியை கட்சித் தலைவர் பதிவியில் நியமிக்க நடந்த கிளர்ச்சி போராட்டத்தில் சீதாராம் கேசரி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

1990 களின் முற்பகுதியில் நடந்த கிளர்ச்சி போராட்டம் கூட நேரு- காந்தி குடும்பத்தை மையப்படுத்தி நடக்கவில்லை. பிரதமர் பி.வி நரசிம்ம ராவிற்கு எதிரான அரசியில் போரில், என்.டி திவாரி, அர்ஜுன் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து புதுக்கட்சியைத் தொடங்கினர்.

ஆனால், இந்த முறை சோனியா காந்தி  தலைமை வகிக்கிறார்.

1969, 1977 ஆகிய கால கட்டத்தில், காங்கிரஸ் கட்சிப் பிளவுகள் சந்தித்த போதும், நேரு- காந்தி தலைமை தான் கிளர்ச்சியை முன்னின்று வழிநடத்தியது.

1969ல் இந்திய தேசிய காங்கிரசில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் காமராஜர், மொரார்ஜி தேசாய், எஸ். நிஜலிங்கப்பா ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டி இந்திர காந்தியை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினர். இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) எனவும் சிண்டிகேட் காங்கிரசு (ஓ) (Organisation Congress) எனவும் வழங்கப்ப்பட்டன.

1977 ஆம் ஆண்டில்,  நெருக்கடி நிலை – அவசரகால பிரகடனத்துக்கு பிந்தைய தேர்தல் தோல்வி கட்சிக்கு நெருக்கடியைத் தூண்டியது.  அப்போது கட்சித் தலைவர் கே.பிரம்மானந்த ரெட்டி மற்றும் காங்கிரஸ்  பாராளுமன்றத் தலைவர் ஒய் .பி சவான் ஆகியோர் இந்திராவுக்கு எதிராக திரும்பினர். கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டது.

உண்மையில், ஜெகசீவன்ராம் உள்ளிட்ட தலைவர்கள் ஜனநாயக காங்கிரஸ் என்ற புதுக்கட்சியைத் தொடங்கி தேர்தலுக்கு முன்னதாக கட்சி பிளவுக்கு வழிவகுத்தனர்.

1987 ஆண்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, காங்கிரஸ் அடுத்த மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டது.

ராஜீவ் காந்தி தலைமையிலான ஆட்சியில்,  நிதி அமைச்சராகவும்,  பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த வி பி சிங் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வி பி சிங் பின்னர் அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார் .

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dissent in congress congress working committee meeting congress crisis

Next Story
தனிக்கொடி… தனி நாணயம்… தனியாக ரிசர்வ் வங்கி! நித்தியானந்தாவின் கைலாசா உணர்த்துவது என்ன?Nithyananda, Kailasa, reserve bank, currency, Godman, nithyananda, swami nithyananda, nithyananda country, kailasa, reserve bank of kailasa, indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com