இந்தியாவில் அதிக மாவட்டங்களைக் கொண்ட மாநிலங்கள் எவையெவை?

கர்நாடகா (6,393 சதுர கி.மீக்கு ஒரு மாவட்டம்) மற்றும் ஒடிசா (5,190 சதுர கி.மீக்கு ஒரு மாவட்டம்) 30 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

Districts formation procedures : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களாக செயல்படும் என்று அறிவித்தார். இந்த வருடத்தின் ஆரம்பம் துவங்கி கள்ளக்குறிச்சி, தென்காசி, மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் இரண்டு மாவட்டங்கள் இணையும் பட்சத்தில் தமிழகத்தில் மொத்தம் 37 மாவட்டங்கள் செயல்படும். இது ஆட்சி செய்வதற்கு எளிமையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கலாம். அல்லது உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்றும் அறிவிக்கப்பட்டிருக்கலாம்.

Districts formation procedures

இந்தியாவில் அதிக மாவட்டங்களை உள்ளடக்கிய மாநிலம் உத்திரப் பிரதேசம் (75). அதனைத் தொடர்ந்து 52 மாவட்டங்களைக் கொண்டுள்ளது மத்திய பிரதேசம். மிகவும் குறைவான எண்ணிக்கையில் மாவட்டங்களை கொண்டிருப்பது கோவா ஆகும். 2 மாவட்டங்கள். அதிக பரப்பளவை கொண்டுள்ள 7வது இந்திய மாநிலம் ஆந்திரா. ஆனால் அங்கு 13 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு 12 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு ஒரு மாவட்டம் என்று செயல்பட்டு வருகிறது. மிகப்பெரிய பரப்பளவில் இயங்கும் மாவட்டங்களைக் கொண்டுள்ள ஒரே ஒரு மாநிலம் ஆந்திரா தான்.

மற்றொரு பக்கம், மிகவும் சிறிய மாநிலம் தான் திரிபுரா. அங்கு 8 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு 1300 சதுர கி.மீகளுக்கு ஒரு மாவட்டம் இயங்கி வருகிறது. இந்தியாவில் மிகச்சிறிய பரப்பளவில் இயங்கும் மாவட்டங்களை கொண்டுள்ள மாநிலம் திரிபுராவாகும். திரிபுராவின் மாவட்டங்களைக் காட்டிலும் 9 மடங்கு பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ளன ஆந்திராவின் மாநிலங்கள். ஆந்திரா மாவட்டங்களின் சராசரி மக்கள் தொகை 38 லட்சம் ஆகும். திரிபுராவில் 4.5 லட்சம் நபர்களாகும்.

37 மாவட்டங்களைக் கொண்ட தமிழகம் அதிக மாவட்டங்களைக் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் 4ம் இடம் வகித்து வருகிறது. மூன்றாவது இடத்தில் 38 மாவட்டங்களுடன் பிகார் உள்ளது. ஜனவரிக்கு முன்பு வரை 4000 சதுர கி.மீக்கு ஒரு மாவட்டம் இயங்கி வந்த நிலையில் தற்போது 3500 சதுர கி.மீ.க்கு ஒரு மாவட்டம் இயங்க உள்ளது.

36 மாவட்டங்களை கொண்டு மகாராஷ்ட்ரா 5ம் இடத்தில் உள்ளது (8,542 சதுர கி.மீக்கு ஒரு மாவட்டம்). அசாம் 33 மாவட்டங்களைக் கொண்டுள்ளது (2,377 சதுர கி.மீக்கு ஒரு மாவட்டம்). ராஜஸ்தான் (10,371 சதுர கி.மீக்கு ஒரு மாவட்டம்), குஜராத்(5,940 சதுர கி.மீக்கு ஒரு மாவட்டம்) ஆகிய மாநிலங்களும் 33 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. தெலுங்கானா 31 மாவட்டங்களைக் கொண்டுள்ளது (3,615 சதுர கி.மீக்கு ஒரு மாவட்டம்). கர்நாடகா (6,393 சதுர கி.மீக்கு ஒரு மாவட்டம்) மற்றும் ஒடிசா (5,190 சதுர கி.மீக்கு ஒரு மாவட்டம்) 30 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க : இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close