பசுமை பட்டாசுகளால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

வானவேடிக்கைக்கான பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட்டுகளுக்கு பதிலாக பொட்டாசியம் நைட்ரேட், ஸ்ட்ரோனியம் நைட்ரேட் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

வானவேடிக்கைக்கான பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட்டுகளுக்கு பதிலாக பொட்டாசியம் நைட்ரேட், ஸ்ட்ரோனியம் நைட்ரேட் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Diwali 2019 green crackers

Diwali 2019 green crackers

Shivam Patel

Diwali 2019 green crackers :  தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், தீபாவளியை கொண்டாடும் மக்கள் எவ்வாறு சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் தீபாவளியை கொண்டாடுவது என்பதை யோசித்து வருகிறார்கள். குறிப்பாக வட இந்தியாவில் காற்று அதிக அளவு மாசடைந்து வருகிறது. 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட் “குறைந்த அளவு மாசுக்களை வெளியிடும் பசுமை பட்டாசுகளை அதிக அளவில் பயன்படுத்த” உத்தரவு பிறப்பித்தது. மேலும் தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் பட்டாசுகள் வெடிக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

Advertisment

2016ம் ஆண்டு, தீபாவளியின் போது 17 ஆண்டுகள் இல்லாத அளவு இந்திய தலைநகரம் மிகவும் மோசமான சுற்றுப்புற மாற்றத்தையும், சுகாதரமற்ற காற்றையும் சுவாசிக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க முழுமையாக தடை பிறப்பித்து உச்ச நீதிமன்றம் நவம்பர் 2016-ன் போது உத்தரவு பிறப்பித்தது.

காற்று மாசடைதலை முற்றிலுமாக தடுக்கும் வண்ணம் மத்திய அமைச்சக்கத்தின் சார்பில் e Council of Scientific and Industrial Research (CSIR) laboratories உருவாக்கப்பட்ட பசுமை வெடிகளை அக்டோபர் மாதம் 5ம் தேதி அறிமுகம் செய்து வைத்தது. இந்த வெடிகளை உருவாக்க 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலில் இருந்தே முயற்சி செய்து வருவதாகவும் சி.எஸ்.ஐ.ஆர் அறிவித்தது. பொட்டாசியம் நைட்ரேட் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பட்டாசுகள் சாதாரண பட்டாசுகளைக் காட்டிலும் 30% குறைவான வெளிச்சம் மற்றும் சத்தத்தை தரக்கூடியது என்று கூறியுள்ளது.

To read this article in English

காற்றில் இருக்கும் பர்டிகுளேட் மேட்டரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் மக்களுக்கு அளவுக்கு அதிகமான பிரச்சனைகள் வருகின்றன. இறப்பு விகிதம் அதிகரித்தல், இதய, நுரையீரல் பிரச்சனை உருவாதல் ஆகியவை ஏற்படுகிறது. காற்றில் கலந்திருக்கும் இந்த மாசு பூமியை அடையும் போது அது மேலும் பல்வேறு பிரச்சனைகளை மக்களுக்கு உருவாக்குகிறது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இவ்வகை பசுமை பட்டாசுகளால் காற்றில் இருக்கும் பி.எம். அளவு குறைக்கப்படும். சி.எஸ்.ஐ.ஆர் அமைப்பு பட்டாசு உற்பத்தியாளர்களுடன் இணைந்து பல்வேறு ஃபார்முலாக்கள் மூலமாக பசுமை வெடிகளை உருவாக்கியது. வானவேடிக்கைக்கான பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட்டுகளுக்கு பதிலாக பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ஸ்ட்ரோனியம் நைட்ரேட் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்த பட்டாசுகள் எப்படி செயல்படுகிறது ?

என்.ஈ.ஈ.ஆர்.ஐ அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளராக செயல்பட்டு வரும் சாதனா ராயலு இது குறித்து கூறுகையில் “இந்த பசுமை பட்டாசுகள் தயாரிப்பின் போது மாசுக்களை கட்டுப்படுத்தும் வேதிப்பொருள் குறிப்பிட்ட அளவில் சேர்க்கப்பட்டுள்ளது. குறைவான ரசாயனங்கள் கொண்டு உருவாக்கப்படும் பட்டாசுகள் வெடிக்கும் போது மாசுக்களை கட்டுப்படுத்தும் துகள்கள் வெளியிடப்படுகிறது. சில பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தப்படவில்லை. பேரியம் நைட்ரேட்டை சுவாசிக்கும் போது மூக்கு, தொண்டை, நுரையீரல்களில் எரிச்சலை உருவாக்குகிறது. இது இதயத்துடிப்பை சீரற்றதாக ஆக்குகிறது. சங்கு சக்கரம், மத்தாப்பு போன்ற பட்டாசுகளுக்கு மாற்றான பசுமை வெடிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜியோலைட், களிமண் மற்றும் சிலிக்கா ஜெல் ஆகியவை வெடிப்பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பசுமை வெடிகளை எப்படி அடையாளம் காண்பது ?

ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் இதர பட்டாசுகளுக்கான விலை போன்றே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பசுமை வெடிகளை கண்டடைய க்யூ.ஆர் கோட் ஒட்டப்படும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார். எந்தெந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தகவல்களை பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு, எம்.ஓ.யூ-வில் கையெழுத்திட்டவுடன் வழங்கி வருகிறது. இதன் கீழ் இதுவரை 165 உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுகள் தயாரிக்க அனுமதி வாங்கியுள்ளனர். 65 நிறுவனங்கள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Diwali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: