டி.என்.ஏ தொழில்நுட்பம் மசோதா 2019 முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் என்ன?

ஆனால் மற்ற பிரிவுகளில் சேமித்து வைக்கப்படும் டி.என்.ஏ தகவல்கள், சம்பந்தப்பட்டவரின் எழுத்துப்பூர்வ கடிதத்தின் பேரில் நீக்கப்படும். 

By: June 26, 2019, 3:27:23 PM

DNA Technology Regulation Bill 2019 : டி.என்.ஏ தொழில்நுட்பம் (பயன்பாடு மற்றும் செயல்முறை) முறைப்படுத்துதல் மசோதாவை (DNA Technology (Use and Application) Regulation Bill) இந்த ஆண்டில் மீண்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.  2003ம் ஆண்டு இது தொடர்பாக முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு 2015ம் ஆண்டில் திட்ட வரைவு முழு வடிவம் பெற்றது. இந்த வருடம் ஜனவரி மாதம் ஒரு முறை தாக்கல் செய்யப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறவில்லை.  இதனைத் தொடர்ந்து திங்கள் கிழமை (24/06/2019) மீண்டும் இந்த மசோதா மறு தாக்கல் செய்யப்பட்டது.

DNA Technology (Use and Application) Regulation Bill – இந்த மசோதாவின் தேவை என்ன ?

மனிதர்களிடம் இருந்து பெறப்படும் இந்த டி.என்.ஏவை பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்டறிதல், தொலைந்து போனவர்களை கண்டறிதல் தொடர்பான தேவைகளுக்கு டி.என்.ஏ தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிகவும் முக்கியமானது. இதனை மனதில் கொண்டே இந்த மசோதா உருவாக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தினை எந்த வகையிலும் தவறாக பயன்படுத்திவிட முடியாத அளவிற்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டும் உள்ளது.

மேலும் படிக்க : உத்திரகாண்ட் தேசியப் பூங்காவில் ஒன்றை ஒன்று அடித்துத் தின்னும் வன விலங்குகள்… காரணம் என்ன?

இந்த மசோதாவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்

டி.என்.ஏ ஒழுங்குமுறை வாரியம் அமைத்தல், டி.என்.ஏ சோதனை பகுப்பாய்வு போன்றவற்றை மேற்கொள்வதற்கான சோதனைக் கூடங்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்தல், தேசிய மற்றும் மாநில அளவுகளில் டி.என்.ஏ தகவல் வங்கிகளை உருவாக்குவதல் ஆகியவை ஆகும்.

மேலும் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் டி.என்.ஏ பரிசோதனை செய்திட இயலாது. அதனை தடுக்கும் பொருட்டு, டி.என்.ஏ ஒழுங்குமுறை வாரியத்தில் முறையான அனுமதி பெறப்பட்ட பரிசோதனைக் கூடங்களில் மட்டுமே சோதனை நிகழ்த்தப்பட வேண்டும் என்பதையும் மேற்கோள் காட்டுகிறது இந்த மசோதா.

எந்த மாதிரியான ஒரு சூழலில் ஒருவர் டி.என்.ஏ பரிசோதனை கேட்டு நிற்பார் என்பதை உறுதிப்படுத்தும் இந்த டி.என்.ஏ வாரியம், டி.என்.ஏ தகவல்களை பெறுவது, பாதுகாத்து வைப்பது தொடர்பான அனைத்து செயல்கள் குறித்தும் முறையான திட்டங்களை உருவாக்கும்.

இந்த மையங்கள் எப்படி செயல்படும் ?

புலனாய்வு துறையினர் / காவல்துறையினர் ஒரு குற்றவாளியின் டி.என்.ஏ தகவல்களை கேட்டுப் பெறலாம். மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் நபருக்கான டி.என்.ஏ தகவல்கள் முக்கியம் என நீதிபதி கருதும் பட்சத்தில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். ஒரு தனிநபரின் விருப்பம் மிகவும் முக்கியமானது. அவர் எழுத்துப்பூர்வ அனுமதி அளித்த பின்னரே டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்படும்.

காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற விரும்புபவர்கள் தங்களாகவே முன் வந்து டி.என்.ஏ பரிசோதனைக்கு மாதிரிகளை தரலாம். ஆனால் அதுவும் எழுத்துப்பூர்வமான விண்ணப்பத்தின் மூலமே சாத்தியம் ஆகும்.

குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்து பெறப்படும் டி.என்.ஏ மாதிரிகள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை அல்லது பரிசோதனைக்கூடத்தில் ஆய்வுக்காக அனுப்பட்டு அதன் டி.என்.ஏ தகவல்கள் பெறப்படும். பின்னர் அது அருகில் இருக்கும் டி.என்.ஏ தகவல் மையத்தில் அளித்தால் போதும். தேசிய டி.என்.ஏ தகவல் வங்கியில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளோடு ஒத்துப்போகும் சாம்பிள்களை கண்டறிந்தால் வேலை விரைவாக முடியும்.

குற்றம் நடைபெறும் இடத்தில் இருந்து பெறப்படும் டி.என்.ஏ தகவல்கள், குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபர்களின் டி.என்.ஏ தகவல்கள், தற்காத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதல் நடத்தியவர்களின் டி.என்.ஏ தகவல்கள், காணாமல் போனவர்களின் டி.என்.ஏ தகவல்கள், மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் டி.என்.ஏ தகவல்கள், இந்த தகவல் மையங்களில் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வரும். குற்ற இடங்களில் பெறப்பட்ட டி.என்.ஏ தகவல்கள் மட்டும் எக்காரணம் கொண்டும் அழிக்கப்படாது. ஆனால் மற்ற பிரிவுகளில் சேமித்து வைக்கப்படும் டி.என்.ஏ தகவல்கள், சம்பந்தப்பட்டவரின் எழுத்துப்பூர்வ கடிதத்தின் பேரில் நீக்கப்படும்.

வாதங்களும் எதிர்வாதங்களும்

டி.என்.ஏ தொழில் நுட்பம் ஃபூல்ப்ரூஃபாக இருக்க வேண்டும் மேலும் எக்காரணம் கொண்டும் தனிநபர்களின் தகவல்கள் வெளியே யாருக்கும் தெரியக்கூடாது.  ஒரு மனிதனின் தனிப்பட்ட அடையாளத்தை இந்த சட்டத்தின் மூலம் ஒரு போதும் வெளியிடக்கூடாது. ஆனால் ஒரு தனி நபரின் கண், முடி, நிறம், அவருக்கு இருந்த மருத்துவப்பிரச்சனைகள், அவருடைய உறவினர்கள் என்று முழு தகவல்களும் தகவல் மையத்தில் இடம் பெற்றிருக்கும். தகவல்கள் கசியத் துவங்கினால் தனிநபர் மீதான தேவையற்ற தாக்குதலுக்கு அது வழி வகுக்கும் என்று எதிர்தரப்பு குரல் தருகின்றனர்.

மத்திய அரசோ, ஏற்கனவே தேசம் முழுவதும் டி.என்.ஏ சோதனைகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. எந்த பிரச்சனையும் இல்லாமல் மிகவும் நல்ல முறையில் நடைபெற்றாலும், அதனை ஒழுங்காக முறைப்படுத்துவதற்கு ஒரு சட்டம் இயற்றினால் என்ன தவறு என்று கேள்வியையும் எழுப்புகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த மசோதா குறித்து அறிவிக்கப்பட்டது.

பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பல்வேறு முக்கிய மாற்றங்களை மசோதாவில் உருவாக்கியுள்ளோம். இதனால் தனி நபர் மீதான தாக்குதல் என்பதற்கு வாய்ப்புகளே இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரே நேரத்தில் அனைவரின் டி.என்.ஏ தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒரே நேரத்தில் 17 நபர்களின் தகவல்கள் மட்டுமே தேவையின் அடிப்படையில் பயன்படுத்தப்படும். இதனால் எந்த விதமான விளைவுகளும் ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முழுமையான ஆங்கிலக் கட்டுரையை படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Dna technology regulation bill 2019 why govt wants to bank dna

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X