Advertisment

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங் இடை நிறுத்தப்பட்டுள்ளது ஏன்?

நீட் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு செய்வதற்கான EWS தகுதியை தீர்மானிக்க ரூ. 8 லட்சம் ஆண்டு வருமான அளவுகோலை எட்ட என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை விளக்குமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் கேட்டிருந்தது.

author-image
WebDesk
New Update
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங் இடை நிறுத்தப்பட்டுள்ளது ஏன்?

Why counselling for NEET-PG medical courses remains suspended: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிந்த பின்னரும், முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், NEET-PG இன் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) 27 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டியின் ஜூலை 29 அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட பல மனுக்கள் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் சட்டச் சிக்கலில் சிக்கியதிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்த விவகாரம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி விசாரிக்கப்பட்டது, உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அரசு, இடஒதுக்கீடு பலன்களை நீட்டிக்கும் நோக்கத்திற்காக EWS நிர்ணயம் செய்ய ஆண்டு வருமானத்தில் ரூ. 8 லட்சம் வரம்பை நிர்ணயிக்கும் அளவுகோலை மறுபரிசீலனை செய்வதாகக் கூறியது. மேலும் இந்த பயிற்சியை முடிக்க 4 வாரங்கள் கால அவகாசம் கோரியது.

முன்னதாக இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நீட் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு செய்வதற்கான EWS தகுதியை தீர்மானிக்க ரூ. 8 லட்சம் ஆண்டு வருமான அளவுகோலை எட்ட என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை விளக்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருந்தது. “எங்கிருந்தும் 8 லட்சத்தை எடுக்க முடியாது. சமூகவியல், மக்கள்தொகை போன்ற சில தரவு இருக்க வேண்டும்," என்று அக்டோபர் 21 அன்று நீதிமன்றம் கூறியது.

OBC ஒதுக்கீட்டுக்கான வரம்பு ரூ. 8 லட்சமாகும் என்று பெஞ்ச் சுட்டிக்காட்டியது, மேலும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் "சமூக ரீதியாக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்" ஆனால் "அரசியலமைப்பு திட்டத்தின் கீழ், EWS சமூக ரீதியாக மற்றும் கல்வியில் பின்தங்கியவர்கள் அல்ல" என்று கூறியது. எனவே, இரண்டிற்கும் ஒரே மாதிரியான திட்டத்தைக் கொண்டிருப்பதன் மூலம், "நீங்கள் சமமற்றவர்களைச் சமமாக்குகிறீர்கள்" என்று பெஞ்ச் கூறியது.

publive-image

"நாங்கள் கொள்கைப் பகுதிக்குள் நுழையவில்லை, ஆனால் அரசியலமைப்பு கொள்கைகளை கடைபிடிப்பதற்கான வெளிப்பாடு தேவை... இவை கொள்கையின் பகுதிகள் ஆனால் நாங்கள் தலையிட வேண்டும்," என்று பெஞ்ச் கூறியது.

EWS ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்ட 103 வது அரசியலமைப்பு திருத்தத்தில் 15 மற்றும் 16 வது பிரிவுகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள விளக்கத்தில், குடும்ப வருமானம் மற்றும் பிற குறிகாட்டிகளான பொருளாதார குறைபாடுகளின் அடிப்படையில் அந்த வகையை அவ்வப்போது அரசு அறிவிக்கலாம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, பிரிவு 15 (2) இன் படி மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின் தன்மையை மத்திய அரசு வெளியிடுவது அவசியம் என்று பெஞ்ச் கூறியது.

அக்டோபர் 25 ஆம் தேதி, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர், கவுன்சிலிங்கிற்கான தேதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அப்போது, ​​நிலுவையில் உள்ள மனுக்கள் மீது முடிவெடுக்கும் வரை கவுன்சிலிங் நடத்தப்படாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜிடம், “இந்தப் பிரச்னையில் முடிவு எடுக்கும் வரை கவுன்சிலிங் தொடங்காது. திரு நடராஜ், நாங்கள் உங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்கிறோம் என்று பெஞ்ச் தெரிவித்தது.

publive-image

நவம்பர் 25 ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, மறுசீரமைப்புப் பயிற்சி மேற்கொள்ளப்படும் நான்கு வாரங்களில் கவுன்சிலிங் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பெஞ்சிற்கு தெரிவித்தார்.

நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே தாமதமாகிவிட்டதை சுட்டிக்காட்டிய தாதர், இடஒதுக்கீட்டை அடுத்த கல்வியாண்டுக்கு ஒத்திவைக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.

இந்த விருப்பத்தை அரசாங்கம் பரிசீலிக்க விரும்புகிறதா என்று பெஞ்ச் துஷார் மேத்தாவிடம் கேட்டது. "என்ன நடக்கிறது என்றால், நாம் நவம்பர் இறுதியில் இருக்கிறோம். நீங்கள் அதை டிசம்பர் இறுதிக்குள் முடித்து, பின்னர் செயல்படுத்துதல் போன்றவை முடிந்து, கல்வி அமர்வு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தொடங்கும் என்று வைத்துக்கொள்வோம். இரண்டு மாதங்களாக, மாணவர்கள் நேரத்தை இழக்கின்றனர். இதை நீங்கள் பரிசீலிக்க விரும்பலாம்,” என்று நீதிபதி சந்திரசூட் கூறினார்.

publive-image

நடப்பு ஆண்டிற்கான தற்போதைய அளவுகோல்களுடன் செல்ல விருப்பம் இருக்கும் என்று துஷார் மேத்தா பதிலளித்தார். "அரசியலமைப்பு திருத்தத்தை ஒத்திவைப்பது கடைசி முயற்சியாக இருக்கும்" என்று துஷார் மேத்தா சமர்ப்பித்தார்.

இதை கவனத்தில் கொண்டு நீதிபதி சந்திரசூட் கூறினார்: “அவர்கள் அதை செய்ய வேண்டும் என்றால், அவர்கள் அதை சரியான முறையில் செய்யட்டும். அவர்கள் தவறான வழியில் ஏதாவது செய்யும் சூழ்நிலையில் அவர்களைத் தள்ள நாங்கள் விரும்பவில்லை... நான்கு வாரங்கள் நியாயமற்ற முறையில் நீண்ட காலம் இல்லை. மருத்துவ சேர்க்கை மற்றும் மருத்துவ ஆண்டு ஒத்திவைக்கப்படுவதைப் பற்றி மட்டுமே நான் கவலைப்படுகிறேன்.

இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment