Advertisment

சாதி பெயரை கூறி அழைப்பது வன்கொடுமை குற்றமாகுமா? ஓடிசா உயர் நீதிமன்ற தீர்ப்பு என்ன?

இந்த வழக்கில் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தபோது தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என மனுதாரர்கள் வாதிட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Does abuse using caste name constitute an offence under SC and ST Act This is what Orissa High Court said

ஓடிசா மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மார்ச் 1ஆம் தேதி வெளியானது.

ஒருவரை சாதியின் பெயரை கூறி அழைப்பது அல்லது அவரின் சாதியை உச்சரிப்பது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என ஓடிசா மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொடர்ந்து, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பிணையில் வெளியே வரமுடியாத படி புவனேஸ்வர் அமர்வு நீதிபதி குர்தா வெளியிட்ட 2021 ஏப்ரல் 13 உத்தரவை தனி நீதிபதி ஆர். கே. பட்டாநாயக் ரத்து செய்தார்.

Advertisment

இந்த வழக்கில் என்ன நடந்தது?

2017, ஏப்.29ஆம் தேதி பெட்டிக் கடை ஒன்றில் வெற்றிலை வாங்கும்போது பெண் ஒருவரை மனுதாரர்கள் ஆபாச வார்த்தைகளை பேசியுள்ளனர்.
இதைத் தட்டிக் கேட்க சென்ற பட்டியலின் சமூக நபர் தாக்கப்பட்டுள்ளார். அவரை சாதியை சொல்லி திட்டியுள்ளனர். மேலும் அவருக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தபோது தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என மனுதாரர்கள் வாதிட்டனர்.

மேலும் அவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை அவமதிக்கும் நோக்கமோ, மிரட்டும் நோக்கமோ இல்லை எனவும் வாதிடப்பட்டது.

நீதிமன்றம் என்ன முடிவு எடுத்தது?

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் பிரிவுகள் 3(1)(r)(s) & 3(2)(va) ஆகியவற்றை நீதிமன்றம் ரத்து செய்தது. தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் மற்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

நீதிமன்றம் தீர்ப்பு எப்படி வந்தது?

மனுதாரர் ஒருவரால் சாதிப் பெயரைச் சொன்ன சாட்சி மீது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

சம்பவ இடத்தில் இருக்கும் சாட்சியை அவமதிக்கும் அல்லது அவமானப்படுத்தும் நோக்கத்துடன் நடந்ததாகக் கூறுவது மற்றும் சிறப்புச் சட்டத்தின் கீழ் கூறப்படும் குற்றங்கள் நியாயமற்றது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

மேலும், பாதிக்கப்பட்ட நபரை விட மூன்றாம் தரப்பினரால் அல்லது சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த ஒருவரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

எனவே, SC/ST சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்யப்படவில்லை, ஏனெனில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் மற்றும் சாதிய அவமதிப்புச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர் அது குறித்து ஒருபோதும் புகார் செய்யவில்லை.

2020-ல் ஹிதேஷ் வர்மா, உத்தரகாண்ட் மாநிலம் இடையேயான வழக்கில் ஒருவரின் சாதியை கூறுவதில் இழிவுப்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டால் அது வன்கொடுமை குற்றமாகாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. அதில், “அவமானப்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டவர் அத்தகைய சாதியைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக" குற்றமாகாது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?

நவம்பர் 5, 2020 அன்று, உச்ச நீதிமன்றம் உத்தரகாண்ட் குடியிருப்பாளரான ஹிதேஷ் வர்மாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து, குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய அவரது மனுவை நிராகரித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சம்மன் உத்தரவு பிறப்பித்தது.

அப்போது, SC/ST சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக இருக்க, பேசப்படும் வார்த்தைகள் "பொது பார்வைக்கு எந்த இடத்திலும்" இருக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

பொது பார்வையில் என்றால் என்ன?

உச்ச நீதிமன்றம் 2008 ஆம் ஆண்டு ஸ்வரன் சிங் வழக்கில் அளித்த தீர்ப்பில், "பொது பார்வையில் உள்ள எந்த இடமாகவும்" கருதப்படலாம் என்பதை விரிவாகக் கூறியது.

அது "பொது இடம்" மற்றும் "எந்த இடத்திலும் பொது பார்வையில்" என்ற வெளிப்பாடுகளை வேறுபடுத்தியது. அதாவது ஒரு வீட்டு சுவருக்குள் அவர்கள் பேசுவது குற்றமாகாது. அதேநேரம் பொதுவெளியில் பேசுவது குற்றமாக கருதப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Odisha Scheduled Tribes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment