பொதுவழியில் செல்லும் உங்களின் கார் உங்களின் ”ப்ரைவேட் ஸ்பேஸா”?

பொது இடத்தில் மன உளைச்சலுக்கு ஆளானதால் ரூ. 10 லட்சம் இழப்பீடு கோரியும் வழக்கு பதிவு செய்தார். 

By: November 20, 2020, 12:56:36 PM

 Sofi Ahsan

Does your car remain a private space when it is on a public road: டெல்லி அரசு நவம்பர் 18ம் தேதி அன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுசாலையில் செல்லும் தனியார் வாகனத்தை தனிப்பட்ட இடம் என்று கூறிவிட இயலாது. இது பொது இடம் தான் என்று கூறியது. சொந்த அல்லது அலுவல் வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற தங்களின் முடிவுற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த விவாதம் அமைந்தது.

வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருந்த போது முகக்கவசம் அணியாத காரணத்தால் அவருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மெண்டல் ஹராஸ்மெண்டிற்காக தனக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தை நாடினார். இதில் இருக்கும் பிரச்சனைகள் என்னென்ன மற்றும் இது குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியது என்ன? விளக்குகிறது இந்த கட்டுரை.

டெல்லியில் முகக்கவசம் அணிவது தொடர்பாக இருக்கும் விதிமுறைகள் என்னென்ன?

இந்திய தலைநகரில் அதிகரித்திருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஏப்ரல் 8ம் தேதி, பொதுநலன் கருதி பொதுவெளியில் நகரும் அனைத்து மக்களும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது என்று கூறியுள்ளார்.  பொதுவெளியில் சொந்த வாகனம் அல்லது அதிகாரப்பூர்வ வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் நிச்சயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.

டெல்லி பெருந்தொற்று (கொரோனா வைரஸ் மேலாண்மை) 2020 வழிகாட்டுதல்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், வழிகாட்டுதலை முதல்முறையாக மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்க அதிகாரம் உண்டு என்றும் இரண்டாவது முறையாக விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரூ. 1000 அபராதமும் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் ஏன் ரூ. 10 லட்சம் அபராதம் கேட்கின்றார்?

முகக்கவசம் அணியவில்லை என்று காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்ட பிறகு சௌரப் ஷர்மா என்பவர் செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றத்தை அணுகினார். கட்டிய அபராத தொகை ரூ. 500-ஐயும், பொது இடத்தில் மன உளைச்சலுக்கு ஆளானதால் ரூ. 10 லட்சம் இழப்பீடு கோரியும் வழக்கு பதிவு செய்தார்.  அவரது வாகனம் அவருக்கான இடம். அவர் தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார். ,ஏலும் இந்த வழிகாட்டுதல்கள் ஏதும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை என சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது என்று ஷர்மா தன்னுடைய வாதத்தை முன் வைத்தார்.

டெல்லி அரசு புதன்கிழமை அன்று, பீகார் அரசுக்கு எதிராக சாத்விந்தர் சிங் சலூஜா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மேற்கோள்காட்டியது. ஜனவரி மாதம் 2021ம் ஆண்டு 7ம் தேதி வரை இந்த வழக்கினை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஒரு வாகனத்தின் சூழலை உச்ச நீதிமன்றம் எவ்வாறு பொது இடம் என்று சத்விந்தர் சிங் வழக்கில் விளக்கியது?

ரோட்டரி உறுப்பினர்கள் நான்கு பேர் அளித்த மேல்முறையீட்டு மனு ஒன்றை விசாரணை செய்தது உச்ச நீதிமன்றம். ஜூன் 25, 2016ம் ஆண்டு இவர்கள் கிரிடிஹில் இருந்து பாட்னாவிற்கு பயணித்துக் கொண்டிருந்தனர். ப்ரீத் அனலைசர் சோதனை மூலமாக அவர்கள் ஆல்கஹால் அருந்தியிருப்பது கண்டறியப்பட்டது.  பீகார் ஒரு ‘வறண்ட’ மாநிலமாக இருப்பதால், பீகார் கலால் (திருத்த) சட்டம், 2016 இன் பிரிவு 53 (அ) இன் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, இது “பொது இடத்தில் அல்லது அங்கீகரிக்கப்படாத இடத்தில் மது அருந்துபவருக்கு” எதிராக அபராதம் விதிக்கிறது. . அவர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் காவலில் இருந்தனர்.

தங்களது வழக்கை அறிந்து கொண்டு தலைமை நீதித்துறை வழங்கிய உத்தரவை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்கள் முதலில் பாட்னா உயர் நீதிமன்றத்தை அணுகினர். இந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்த பின்னர், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.  உச்ச நீதிமன்றத்தின் முன் அவர்களின் முக்கிய வாதம் என்னவென்றால், அவர்கள் பயணித்த வாகனம் பீகார் கலால் (திருத்த) சட்டம், 2016 இன் பிரிவு 2 (17 ஏ) இன் கீழ் “பொது இடம்” என்று வரையறுக்க முடியாது. மேலும் அந்த வாகனத்தில் மது பாட்டில்கள் இன்னபிற குற்றச்செயல்களுக்கான பொருட்கள் ஏதும் இல்லை என்று கூறினார்கள்.

பீகார் தடை மற்றும் கலால் சட்டம், 2016 இன் பிரிவு 2 (54) பொது இடத்தின் வரையறையின் கீழ் தனியார் வாகனங்களை உள்ளடக்கியது என்றும், அதே விதி பீகார் கலால் (திருத்த) சட்டம், 2016-த்தில் இல்லை என்றும் வாதிடப்பட்டது.  வாகனம் பொது சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பீகார் கலால் (திருத்தம்) சட்டம், 2016 இன் பிரிவு 53 (அ) முழுமையாக பொருந்தும் என்றும் பீகார் அரசு வாதிட்டது.

இந்த வழக்கில் ‘பொது இடம்’ என்பதன் வரையறை குறித்து உச்ச நீதிமன்றம் இறுதியாக என்ன கூறியது?

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் பீகார் கலால் (திருத்தம்) சட்டம், 2016 இன் பிரிவு 2 (17 ஏ) ஒரு “பொது இடம்” என்பதை வரையறுக்கிறது, இது பொதுமக்களுக்கு அணுகக்கூடிய எந்த இடத்தையும் குறிக்கிறது, பொது மக்களால் பார்வையிடப்படுகின்ற, திறந்தவெளி உட்பட அனைத்தும் பொது இடம் என்று வரையறை செய்துள்ளது.

மக்கள் அணுக கூடிய எந்த இடமும் என்பதை முக்கிய வார்த்தைகளாக பயன்படுத்துகிறது. நான்கு ரோட்டரியர்களின் வழக்கின் பின்னணியில், பொது வாகனம் செல்லும் போது அவர்களின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

தனியார் வாகனம் பொதுவழியில் செல்லும் போது, அது பொதுமக்களுக்கு அணுகலுக்கான இடம் இல்லை என்று கூறிவிட இயலாது. பொதுமக்கள் தனியார் வாகனத்தை அணுக உரிமை இல்லை தான். ஆனால் பொதுமக்கள், தனியார் வாகனம் பொதுசாலையில் இருக்கும் போது அணுக நிச்சயமாக வாய்ப்புகள் உள்ளது என்று அஷோக் பூசன் மற்றும் கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அன்று அறிவித்தது. பீகார் 2016 இல் திருத்தப்பட்ட சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி “பொது இடம்” என்ற வரையறையில் ஒரு வாகனம் அடங்காது என்ற வாதத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Does your car remain a private space when it is on a public road

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X