அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், யூத விரோதத்தை அனுமதிக்கிற கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கூட்டாட்சி நிதியளிப்பதை தடை செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இது சுதந்திரமான பேச்சுரிமைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதால் இந்த உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டது விமர்சனங்களைப் பெற்றதற்கான காரணங்களில் ஒன்று ஆகும்.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
சர்வதேச சட்டத்திற்கு இணங்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பது மற்றும் இஸ்ரேலின் பாலஸ்தீனர்கள் ஒடுக்குமுறைக்கான சர்வதேச ஆதரவை முடிவுக்கு கொண்டுவருவதற்கு வேலை செய்வதாக தன்னை விவரித்துக்கொள்கிற போராட்டம், பங்குகளைத் திரும்பப் பெறுதல், பொருளாதாரத் தடைகள் (பி.டி.எஸ்) இயக்கங்களைப் போன்ற இஸ்ரேல் எதிர்ப்பு இயக்கங்களை சகித்துக்கொள்ளும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களுக்கு இந்த உத்தரவு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
யூத விரோத நிர்வாக உத்தரவு என்றால் என்ன?
அடிப்படையில், இந்த உத்தரவு 1964 சிவில் உரிமைகள் சட்டத்தின் கீழ் பாகுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்புகளை யூத விரோதத்திற்கு உட்பட்ட மக்களுக்கு விரிவுபடுத்துகிறது. இது ஒரு மதக் குழுவாகவோ அல்லது ஒரு இனமாகவோ யூதர்களுக்கு எதிரான விரோதம் அல்லது பாகுபாடு உணர்வுகளைக் கொண்டிருப்பதை விவரிக்கப்படுகிறது. “அமெரிக்காவிலும் உலகெங்கிலும் யூத விரோதம் மற்றும் யூத விரோத சம்பவங்களின் எழுச்சியை எதிர்த்துப் போராடுவதற்கு எனது நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. யூத விரோத சம்பவங்கள் 2013 முதல் அதிகரித்துள்ளன. குறிப்பாக மாணவர்கள் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களிலும் யூத விரோத துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்” என இந்த நிர்வாக உத்தரவு தொடங்குகிறது.
இந்த உத்தரவுப்படி, சிவில் உரிமைகள் சட்டம் 1964 இன் தலைப்பு 6 இல் இனம், நிறம் அல்லது தேசிய வம்சாவழியை அடிப்படையாகக் கொண்ட யூத விரோத பாகுபாட்டை எதிர்கொள்ளும் மக்களுக்குப் பொருந்தும். மேலும், அதை நிறைவேற்ற, சர்வதேச பாடழிவு நினைவு கூட்டணி (சர்வதேச யூதர்கள் அழிப்பு நினைவு கூட்டணி- ஐ.எச்.ஆர்.ஏ) ஏற்றுக்கொண்ட யூத எதிர்ப்பின் சட்டப்பூர்வமற்ற வரையறையை பயன்படுத்தப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச பாடழிவு நினைவு கூட்டணியின் வரையறைப்படி, “யூத விரோதம் என்பது யூதர்களைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட கருத்தானது யூதர்கள் மீதான வெறுப்பாக வெளிப்படுத்தப்படலாம். யூத விரோத சொல்லாடல் கலை மற்றும் உடல் வெளிப்பாடுகள் யூதர்கள் அல்லது யூதரல்லாத நபர்கள் அல்லது அவர்களின் சொத்துக்கள், யூத சமூக நிறுவனங்கள் மற்றும் மத வசதிகளை நோக்கி செலுத்தப்படுகின்றன.”
சமகால யூத-விரோத போக்குக்கு சில எடுத்துக்காட்டுகள் யாவை?
இந்த நிர்வாக உத்தரவின்படி, தலைப்பு 6 ஐ அமல்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நிர்வாகத் துறைகளும் ஏஜென்சிகளும் சர்வதேச பாடழிவு நினைவு கூட்டணியால் அடையாளம் காணப்பட்டபடி யூத விரோதத்தின் தற்கால எடுத்துக்காட்டுகளை கருத்தில் கொள்ள வேண்டும். இதில் யூதர்களின் கூட்டாக கருதப்படும் இஸ்ரேல் அரசை குறிவைப்பது உள்ளிட்டவை அடங்கும். இருப்பினும், அமெரிக்க வெளியுறவுத்துறையின் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளபடி, இஸ்ரேல் மீதான விமர்சனத்தை வேறு எந்த நாட்டிற்கும் எதிரான யூத விரோதம் என்று கருத முடியாது” என குறிப்பிட்டுள்ளது.
“யூத விரோதம் என்பது யூதர்களுக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பதற்கான சதி என்று அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், யூதர்களின் விஷயங்களில் ஏன் தவறு நடக்கிறது என்று குற்றம் சாட்டுவதற்கு பெரும்பாலும் யூத விரோதம் என்பது பயன்படுத்தப்படுகிறது. யூத விரோதமானது பேச்சு, எழுத்து, காட்சி வடிவங்கள் மற்றும் செயலில் வெளிப்படுத்தப்படுகிறது. மேலும், திரும்பத்திரும்ப மோசமான செயல்களையும் எதிர்மறை பாத்திரங்களையும் பயன்படுத்துகிறது” என்று அது கூறுகிறது.
தீவிர சித்தாந்தம் என்ற பெயரில் யூதர்களைக் கொல்வது, அதற்கு உதவுவது அல்லது அதை நியாயப்படுத்துவது ஆகியவை பிற எடுத்துக்காட்டுகள் ஆகும். அவை யூதர்களுக்கு எதிரான மோசமான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள், யூதர்கள் அழிப்பு அல்லது ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளை உருவாக்குதல், பழமையான யூத விரோதத்துடன் தொடர்புடைய சின்னங்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்துதல் இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளுக்கு யூதர்களை கூட்டாகப் பொறுப்பேற்கச் செய்வது ஆகியவை அடங்கும்.
நிர்வாக உத்தரவு எதிர்கொள்ளும் விமர்சனங்கள் என்ன?
இந்த உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதிலிருந்து, பேச்சு சுதந்திரத்திற்கு வாதிடுபவர்களும் சில தாராளவாத யூத அமைப்புகளும் இது அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தில் முன்வைக்கப்பட்ட சுதந்திரமான பேச்சுரிமை கொள்கைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில் அதை விமர்சித்துள்ளனர்.
ஜே ஸ்ட்ரீட் எனும் இஸ்ரேல் சார்பு தன்னார்வ தொண்டு நிறுவனம் டிசம்பர் 11 ஆம் தேதி தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் “இந்த நிர்வாக உத்தரவு, நிறுவப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் சட்டத்தைப் போல, சுதந்திரமான பேச்சில் சிலிர்க்க வைக்கும் விளைவைக் காட்டிலும், இஸ்ரேலின் வளாக விமர்சகர்களை தகர்த்தெறிவதை விட யூத-விரோதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “ஜே ஸ்ட்ரீட் அனைத்து வகையான யூத-விரோதத்தையும் எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக உள்ளது. மேலும், இஸ்ரேல் மீதான பரந்த அளவிலான வன்முறையற்ற வளாக விமர்சனங்களை யூத-எதிர்ப்பு என்று வெள்ளை மாளிகை ஒருதலைப்பட்சமாக அறிவிப்பது தவறானதாகவும் தீங்கு விளைவிப்பதாகவும் நாங்கள் கருதுகிறோம். இந்த நாட்டில் யூத-விரோதத்தின் பிரதான இயக்கி இனவெறி. வெள்ளை தேசியவாத தீவிர வலதுசாரி ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளது.
‘தி நியூயார்க் டைம்ஸ்’ஸின் ஆசிரியர் குழு, “அதிபரின் வளாகத் தலையீடு யூத-விரோதத்தின் பெரிய அச்சுறுத்தலைப் புறக்கணித்து பேச்சுக்கு அச்சுறுத்தல் தருகிறது.” என்று எழுதியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.