Advertisment

புதிய நிர்வாகத்தை கட்டமைக்கும் ட்ரம்ப்: முந்தைய ஆட்சி காலத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டாரா?

நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்கவுள்ளார் ட்ரம்ப். இந்நிலையில், தனது முந்தைய ஆட்சி காலத்தில் இருந்து ட்ரம்ப் பாடம் கற்றுக் கொண்டாரா என அலசுகிறது இப்பதிவு.

author-image
WebDesk
New Update
Trump exp

செய்தி - அர்ஜுன் செங்குப்தா

Advertisment

கடந்த வாரம் அமெரிக்க அதிபராக வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப், தற்போது வரை நிர்வாக அமைப்பில் பணியாற்றுவதற்காக அதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார். குறிப்பாக, 10 பேரை அவர் நியமனம் செய்துள்ளார்.

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: 5 takeaways from Donald Trump’s key administrative appointments

 

இதற்காக ட்ரம்ப் பணியாற்றுவது, அவரது முந்தைய ஆட்சி காலத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதை பிரதிபலிக்கிறது. அவர் தனது இமேஜை கட்டமைப்பதற்காகவும் நிர்வாக ரீதியாக மாற்றங்களை செய்து வருகிறார்.

விசுவாசத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ட்ரம்ப்

தனக்கு விசுவாசமானவர்கள் மற்றும் நலம் விரும்பிகளை ட்ரம்ப் முக்கிய பதவிகளில் நியமித்து வருகிறார். குறிப்பாக, அவர்களின் கடந்த கால அனுபவம் மற்றும் வேலைக்கான தகுதிக்கு ட்ரம்ப் முக்கியத்துவம் வழங்கவில்லை.

ட்ரம்ப் தனது தீவிர ஆதரவாளரரும், ராணுவ வீரரும், அல்ட்ராகன்சர்வேடிவ் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளருமான பீட் ஹெக்செத்தை பாதுகாப்பு செயலாளராக நியமித்துள்ளார். இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

44 வயதான ஹெக்சேத், இப்பதிவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இளம் வயது உடையவர். நிர்வாக மட்டத்தில் எந்த முன் அனுபவமும் இல்லாத ஹெக்சேத், உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவத்தின் பொறுப்பாளராக விளங்க போகிறார்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் ஜனநாயகப் பிரதிநிதி துளசி கபார்ட், ராணுவ தேசியப் பாதுகாப்புப் படையில் நீண்ட காலம் பணியாற்றியிருந்தாலும், தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பதவிகளில் முந்தைய அனுபவம் இல்லாதவர்.

முந்தைய பதவி காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள்

தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் பைனான்சியல் டைம்ஸின் பகுப்பாய்வுகள், டிரம்ப் தனது 2017-21 பதவிக் காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறது. 

ஹெக்செத், கபார்ட் மற்றும் மாட் கேட்ஸ் ஆகியோரை தேர்ந்தெடுப்பதில், டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அவரை மிகவும் விரக்தியடையச் செய்த "ஆழமான நிலை" என்று அழைக்கப்படும் மூன்று தூண்களை குறிவைத்துள்ளார். அவை, பென்டகன், உளவுத்துறை அமைப்புகள் மற்றும்  நீதி துறை ஆகும்.

ட்ரம்பின் முந்தைய ஆட்சியில், இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள், ட்ரம்ப்புடனான கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு ராஜினாமா செய்தனர் அல்லது நீக்கப்பட்டனர்.

தற்போது, வெள்ளை மாளிகையின் அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ட்ரம்ப் புரிந்து கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

மேட் கேட்ஸ் என்பவருக்கு தற்போது அட்டார்னி ஜெனரல் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடத்தல்,  நெறிமுறைக் குழு விசாரணை மற்றும் குடியரசுக் கட்சியின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி வெளியேற்றப்பட்டது போன்ற சவால்கள் சட்டத்துறையின் முன்பு தற்போது உள்ளது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர் அதன் ஆவணங்களை ரகசியமாக கையாண்டது உள்ளிட்ட வழக்குகளும் ட்ரம்புக்கு எதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேட்ஸ் முன்னதாக DoJ மற்றும் FBI அமைப்புகளின் வலுவான விமர்சகராக இருந்துள்ளார். அவர் செனட் மூலம் உறுதிசெய்யப்பட்டால், அமெரிக்காவின் உயர்மட்ட சட்ட அமலாக்க அதிகாரியாக தலைமை தாங்குவார்.

ட்ரம்பின் அனைத்து நியமனங்களும் ஜனவரியில் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் செனட்டில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பல குடியரசுக் கட்சித் தலைவர்கள் ட்ரம்பின் தேர்வுகளில் மகிழ்ச்சியடையவில்லை எனக் கூறப்படுகிறது, கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க ஊடக நிறுவனங்களும் தங்கள் ஆச்சரியத்தையும், ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளன. கெட்ஸின் நியமனத்தை பலரும் விரும்பாததால், அவர் உறுதிப்படுத்தப்படுவதில் சிக்கல் ஏற்படலாம்.

குடியரசுக் கட்சி செனட்டர் மைனின் சூசன் காலின்ஸ், கேட்ஸின் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

டிரம்ப் தனது அரசியல் அஸ்திவாரத்தை தனது முதல் ஆட்சியில் இருந்ததை விட, இரண்டாவது பதவிக்காலத்தில் முன்னெடுப்பதில் மிகவும் கனவமாக இருப்பார் எனக் கூறப்படுகிறது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

United States Of America President Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment