Advertisment

கல்லூரியில் பாடம் கற்பிக்க முனைவர் பட்டம் தேவை இல்லை: யு.ஜி.சி. புதிய விதி கூறுவது என்ன?

உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் 2018 இல் எடுத்த முடிவை ஏன் மாற்றியது? இது உயர்கல்வி ஆசிரியர் ஆட்சேர்ப்பின் தரத்தை பாதிக்காதா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dont need PhD to teach in a college A look at UGCs changed rule to hire entry-level professors

ஆரம்ப கட்ட பேராசிரியர் தேர்வுக்கு பிஹெச்டி தேவையில்லை என யுஜிசி கூறியுள்ளது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இனி பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

தேசிய தகுதித் தேர்வு (NET), மாநிலத் தகுதித் தேர்வு (SET) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (SLET) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால் போதும்.

Advertisment

நாட்டின் உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஜூன் 30 அன்று இந்த மாற்றத்தை அறிவித்தது.

கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய குறைந்தபட்ச இந்த அளவுகோல் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது.

முன்பு இருந்த அமைப்பு என்ன?

ஜூன் 2010 இல் வெளியிடப்பட்ட 'பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்விப் பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் பற்றிய திருத்தப்பட்ட விதிமுறைகளில், உதவிப் பேராசிரியருக்கான விண்ணப்பதாரர்கள் NET, SET அல்லது SLET இல் தகுதி பெற வேண்டும் என்று UGC கூறியது.

இருப்பினும், பிஎச்டி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இந்த தகுதி நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒருவர் முனைவர் பட்டம் பெற்றிருந்தால், அவர் NET, SET அல்லது SLET ஐத் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

2018 இல் பிரகாஷ் ஜவடேகர் கல்வி அமைச்சராக இருந்தபோது இது மாறியது. தொடர்ந்து, ஜூலை 2018 இல் UGC ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில், 01.07.2021 முதல் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பதவிக்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு பிஎச்டி பட்டம் கட்டாயத் தகுதியாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ஒருவர் தங்கள் பிஎச்டிகளை முடிக்க மூன்று ஆண்டு கால அவகாசம் (2018-21) இருந்தது. 2021 முதல் ஆட்சேர்ப்புக்கான புதிய குறைந்தபட்ச அளவுகோல்களை அமல்படுத்துமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 2021 இல், கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறுகளைக் கவனத்தில் கொண்டு, UGC ஜூலை 2021 காலக்கெடுவை ஜூலை 2023க்கு தள்ளியது.

ஜூலை 2021 முதல் பிஎச்டி தேவையை அமல்படுத்துவதற்கான தேதியை யுஜிசி முதலில் நிர்ணயித்தது, ஆனால் இது ஜூலை 2023 வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், இந்த காலக்கெடு தொடங்குவதற்கு முன்பே, பிஎச்டி கட்டாயம் இல்லை என்று அறிவித்துள்ளது.

எனவே, UGC தனது 2018 முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே மாற்றியமைத்துள்ளது.

UGC 2018 இல் அறிவித்த முடிவை ஏன் திரும்பப் பெற்றது?

தரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதன் மூலம் கட்டமைப்பை விரிவாக்குவதே இதன் நோக்கமாகத் தெரிகிறது.

இது தொடர்பாக யுஜிசி தலைவர் மமிதாலா ஜெகதேஷ் குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “கொள்கை உருவாக்கம், வடிவமைப்பு, வெளிநாட்டு மொழிகள், சட்டம், கட்டிடக்கலை மற்றும் பிற ஒத்த பாடங்களில், பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் பிஎச்டி பட்டம் பெற கடினமாக உள்ளது.

நுழைவு மட்டத்தில் கட்டாய பிஎச்டி நிபந்தனைகளை நீக்குவது, பிஎச்டி இல்லாவிட்டாலும் கற்பிப்பதில் திறமை உள்ளவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு பல்கலைக்கழகங்களுக்கு உதவும். அடுத்த நிலைக்கு <இணை பேராசிரியரின்> செல்ல அவர்கள் நிச்சயமாக தங்கள் பிஎச்டியை முடிக்க வேண்டும்.

இதனால் கல்வியின் தரம் குறையாது என ஜெகதேஷ் குமார் வாதிட்டார். அதாவது, “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 25,000 க்கும் மேற்பட்ட பிஎச்டிகள் தயாரிக்கப்படுகிறோம். முக்கிய துறைகளில், ஆசிரிய பதவிகளுக்கு சிறந்த பிஎச்டிகளை தேர்வு செய்ய கடும் போட்டி நிலவுகிறது. எனவே, தொடக்க நிலை உதவிப் பேராசிரியர் பதவியில் பிஎச்டி கட்டாய நிபந்தனையாக நீக்குவது கல்வியின் தரத்தை பாதிக்காது” என்றார்.

NET/SET/SLET என்பது உதவிப் பேராசிரியருக்கான குறைந்தபட்சத் தேவையாக இருக்கும்போது, பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பதற்கு நேர்காணலுக்கான அதிக தேர்வுப்பட்டியல் அளவுகோல்களை அமைக்கலாம் என்று UGC தலைவர் தெளிவுபடுத்தினார்.

உயர்கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி பெற்றவை என்பதால், அவர்கள் சில துறைகளில் உயர் தேர்வு அளவுகோல்களை அமைக்கலாம் ஆனால் மற்ற துறைகளில் யுஜிசியின் குறைந்தபட்ச அளவுகோல்களைப் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக, ஒரு வெளிநாட்டு மொழி மையத்தில், முனைவர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என்றால், பல்கலைக்கழகம் முதுகலைப் பட்டம் மற்றும் UGC-NET ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

கல்விச் சமூகம் எவ்வாறு பிரதிபலித்தது?

பிஎச்டி தேவையை நீக்குவது, ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு உதவும் என்பதை ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தேர்வு செயல்முறை நடைமுறையில் எவ்வாறு செயல்படும் என்பது பற்றிய அச்சங்கள் உள்ளன.

டெல்லி பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான அபா தேவ் ஹபீப் கூறுகையில், “பிஎச்டி என்பது நீண்ட ஆராய்ச்சிப் பட்டம், அதற்கு நேரமும் பணமும் தேவை. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள், முக்கியமாக பெண்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசி வேட்பாளர்கள் தங்கள் படிப்பை நீடிக்க மிகவும் கடினமாக உள்ளனர்” என்றார்.

மேலும், பிஎச்டி தேவையை நீக்குவது இளம் வயதிலேயே மக்கள் தொழிலில் நுழைய அனுமதிக்கிறது. பல பாடங்கள் மற்றும் பல பல்கலைக்கழகங்களில் பிஎச்டி பட்டம் பெற்றவர்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதை ஆபா தேவ் ஹபீப் ஒப்புக்கொண்டார். இந்த பல்கலைக்கழகங்களுக்கு, திருத்தப்பட்ட அளவுகோல் "ஒரு பெரிய நிவாரணம்" என்று அவர் கூறினார்.

இருப்பினும், DU இன் பேராசிரியரான அபூர்வானந்த், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், எனது பயம் என்னவென்றால், பல பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் புறக்கணிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ugc University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment