/tamil-ie/media/media_files/uploads/2021/04/double-mask.jpg)
கோவிட் -19 க்கு எதிரான போரட்டத்துக்கு மத்தியில், சுகாதார வல்லுநர்கள் இரண்டு முகக்கவசங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கின்றனர். இது “டபுள் மாஸ்க்” (இரட்டை முகக்கவசம்) என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்றுநோய்க்கு எதிராக ஒரு வலுவான தடையை உருவாக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். துணி மற்றும் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சர்ஜிகல் முகக்கவசங்களுடன் சேர்த்து ‘டபுள் மாஸ்க்’காக முகத்துக்கு நன்றாக பொருத்தமாக அணியும்போது, அது காற்று வெளியே செல்வதை தடுக்கிறது என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி) ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.
அதனால், ‘டபுள் மாஸ்க்’ செய்வது எப்படி? டபுள் மாஸ்க் அணியும்போது செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவைகள் என்ன என்பது இங்கே தரப்படுகிறது:
/tamil-ie/media/media_files/uploads/2021/04/MASKSLIDE1.jpg)
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நடத்திய ஆய்வுகள் ‘டபுள் மாஸ்க்’ துணி மற்றும் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சர்ஜிகள் மாஸ்க், அல்லது ஒருமுறை பயன்படுத்தி அப்புறப்படுத்தக் கூடிய முகக்கவசங்களைக் கொண்டு டபுளாக அணிந்துகொள்வது - இது கோவிட் -19 வைரஸின் வெளிப்பாட்டை கிட்டத்தட்ட 95 சதவீதம் குறைக்கிறது என்று தெரியவந்துள்ளது.
துணி மற்றும் அறுவை சிகிச்சை முகக்கவசங்களால் செய்யப்படும் டபுள் மாஸ்க் அணியும்போது காற்று வெளியே செல்வது தடுக்கப்படுகிறது. முகத்துக்கு நன்றாக பொருத்தமாகவும் அணியலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/MASKSLIDE2.jpg)
எப்படி அணியலாம்: ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசத்தின் விளிம்புகளை இணைத்து, காது நாடாக்களை முடிச்சு போட்டுவிட்டு, உள்பக்கமாக ஒரு மாஸ்க்கை அணிந்துகொண்டு அதற்கு மேலே அந்த முகக்கவசத்தை அணிய வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/MASKSLIDE3.jpg)
துணி முகக்கவசம் இருமும்போது வெளிப்படும் நீர் துகள்களை 51.4 சதவீதம் தடுக்கிறது என்றால், முடிச்சுபோடப்படாத அறுவை சிகிச்சை முகக்கவசம் 56.1 சதவீதம் தடுக்கிறது என்று சி.டி.சி பதிவு செய்துள்ளது.
முடிச்சு போடப்பட்டு அணியப்பட்ட அறுவை சிகிச்சை முகக்கவசம் (சர்ஜிகல் மாஸ்க்) 77 சதவீதம் தடுத்துள்ளது.
இருப்பினும், ஒரு துணி முகக்கவசம் மற்றும் ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசத்தை சேர்த்து அணியும்போது இருமல் நீர்த்துகள்கள் வெளியேறுவதை 85.4 சதவீதம் வரை தடுத்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/MASKSLIDE4.jpg)
செய்யக்கூடியவைகள்:
உங்களால் நன்றாக சுவாசிக்க முடிகிறது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
‘டபுள் மாஸ்க்’ அணியும்போது பேசும்போது தடுக்காமல் இருக்க வேண்டும்.
வீட்டில் முககவசத்தை அணிந்துகொள்ளுங்கள். பொருத்தமாகவும் சௌகரியமாகவும் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு நீங்கள் சிறிது நேரம் நடந்து செல்லுங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/MASKSLIDE5.jpg)
செய்யக்கூடாதவைகள்:
ஒரே நேரத்தில் ஒருமுறைப்பயன்படுத்தப்படும் இரண்டு முகக்கவசங்களை அல்லது ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சை முகக்கவசங்களை (சர்ஜிகல் மாஸ்க்) சேர்த்து அணிவது கூடாது.
N95 முகக்கவசத்தை வேறு எந்த முகக்கவசத்துடனும் சேர்த்து டபுள் மாஸ்க்காக அணிவது கூடாது.
முகக்கவசங்கள் மீது ரசாயன கிருமி நாசினி மருந்துளை பயன்படுத்துவது கூடாது.
உங்கள் முகக்கவசம் பார்ப்பதற்கு சேதமடைந்தும் அல்லது மண்ணாகவும் இருந்தால் அவற்றைப் பயன்படுத்துவது கூடாது.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/MASKSLIDE6.jpg)
முகக்கவசம் பொருத்தமாகவும் சரியாகவும் இருக்கிறதா?
உங்கள் முகக்கவசம் நீங்கள் சுவாசிக்கும்போது, காற்று ஓட்டத்துடன் உள்ளே அழுந்த வேண்டும்.
உங்கள் மூக்கு கண்ணாடி புகைமூட்டமாக மங்களாக இருக்கிற்து என்றால் முகக்கவசத்தின் இடைவெளியில் காற்று வெளியே செல்கிறது என்று அர்த்தம்.
ஒரு கண்ணாடியின் முன் நின்று பலமாக மூச்சு விடுங்கள். அப்போது நீங்கள் கண் சிமிட்டினால், அதாவது உங்கள் கண் இமைகள் மீது படும் காற்று முகக்கவசத்தில் இருந்து வெளியே வருகிறது என்று அர்த்தம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.