Advertisment

டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?

Dragon fruit Kamalam : டிராகன் பழத்தின் பெயர் பொருத்தமானதாக இல்லை என்பதாலும், இந்த பழம் தாமரை வடிவத்தை பெற்றுள்ளதாலும் இதற்கு கமலம் என்று பெயர் மாற்றப்படுவதாக குஜராத் முதல்வர் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?

டிராகன் பழத்தின் பெயரை ‘கமலம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். இந்த பழத்திற்கு டிராகன் பழம்  என்ற பெயர் “பொருத்தமானதாக இல்லை என தெரிவித்துள்ள”, ரூபானி இந்த பழத்தின் சிறப்பியல்பு ‘கூர்முனை’ மற்றும் ‘இதழ்கள்’ அனைத்தும் பூக்கும் தாமரையை நினைவுபடுத்துவதால் இந்த பழத்திற்கு கமலம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisment

டிராகன் பழம் என்றால் என்ன?

டிராகன் பழம் என்பது தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில், பயிரிடப்படும் ஒரு வகை காட்டு கற்றாழை இனத்தின் பழமாகும், பிடாயா அல்லது பிடாஹயா என்று அழைக்கப்படும் இந்த பழத்தில், உள்ள சதை பொதுவாக வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். பொதுவான குறைந்த மஞ்சள் பிடாயா பழத்தில், கிவிஃப்ரூட் போன்ற சிறிய விதைகளால் நிரப்பப்பட்டிருக்கும்.

கடந்த 19 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்களால் வியட்நாமில் தொடங்கப்பட்ட டிராகன் பழ உற்பத்தி ஆலை, தற்போது உலகின் மிகப்பெரிய டிராகன் பழ உற்பத்தி ஆலையாகவும், ஏற்றுமதியாகும் ஆலையாகவும் உள்ளது. மேலும் வியட்நாமியர்கள் இந்த பழத்தை நீளம் என்று அழைத்து வருகின்றனர். மேலும் இந்த பழம் “டிராகனின் கண்கள்” போன்று தோற்றம் இருப்பதால், டிராகன் புரூட் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.

இந்த டிராகன் பழம் பூர்வீகமான லத்தீன் அமெரிக்கா தவிர - தாய்லாந்து, தைவான், சீனா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. 1990 களில் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த பழம், தற்போது கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, ,அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பயிரிடப்படுகிறது. அனைத்து மண்களிலும் வளரும் இந்த பழம் வளர்வதற்கு அதிக நீர் தேவைப்படாது.

டிராகன் பழத்தை உண்ணும் முறை :

இந்த பழத்தை நேரடியாக சாப்பிட, பழத்தை பாதியாகக் வெட்டி ஒரு கரண்டியால் சதைகளை வெளியேற்றி சாப்பிடலாம். அல்லது, முனைகளை வெட்டி, தோல்களை சீவிவிட்டு, உள்ளே சாப்பிடக்கூடிய வகையில் உள்ள முட்டை வடிவ வெள்ளை சதைகளை எடுத்து சாப்பிடலாம். மேலும் இந்த பழத்தை ஜூஸ் செய்தும் சாப்பிடலாம். அழகிய தோற்றம் உள்ள இந்த பழம் அதிக சுவை கொண்டது. பலவகையான இனிப்பு மற்றும் சுவையான உணவுகள் உள்ள சாலட்களில் இந்த பழம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கேக்குகளிலும் இந்த டிராகன் பழம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தின் பூர்வீகமான லத்தீன் அமெரிக்காவில், பிடாயா (டிராகன் பழம்) ஜூஸ் பிரபலமானது. இந்நிலையில்,கடந்த ஆண்டு, ஒரு ஹோ சி மின் நகர பேக்கரி, டிராகன் பழத்துடன் ரொட்டி தயாரித்தது. ஆனால், உலகில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்ததால்,கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த டிராகன் ரொட்டிகளை விற்க முடியவில்லை.

மறுபெயரிடும் யோசனை

கடந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  டிராகன் பழங்களை வளர்ப்பதற்கும், புதுமையான நடைமுறைகளை பின்பற்றும் கச்சின் விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இது "தன்னம்பிக்கையின் உயர்வை காட்டுகிறது" என்று கூறினார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி, குஜராத் வனத்துறையின் கூடுதல்  முதன்மை காடுகளின் பாதுகாவலர் ராம் குமார், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐ.சி.ஏ.ஆர்) கமலம் (டிராகன்) பழத்தை மறுபெயரிடுவதற்கான திட்டத்தை அனுப்பினார்.

மேலும் “விழிப்புணர்வையும் விரிவாக்கத்தையும் அதிகரிக்கும்”, வகையில், ஆத்மனிர்பர் பாரத் ”க்கு ஏற்ப நமது இறக்குமதி சார்புநிலையை குறைக்க இந்த திட்டம் பங்களிக்கும் என்று குமார் தெரிவித்திருந்தார்.

குஜராத் தலைநகர் காந்திநகர் கோபாவில் உள்ள பாஜக தலைமையகத்தின் பெயரும் கமலம் தான். மேலும் பாஜகவின் தேர்தல் சின்னம் தாமரை. தாமரையின் மற்றொரு பெயர் கமலம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பெயர் மாற்றுதலில் எந்த அரசியலும் இல்லை என்று கூறியுள்ள ரூபானி, “டிராகன் பழம் பொருத்தமான சொல் அல்ல. உலகம் முழுவதும் இது டிராகன் பழம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் டிராகன் என்பது சீனாவை நினைவுபடுத்துகிறது. இதனால் கமலம் என்ற பெயரை வழங்கியுள்ளோம். இது தாமரை போன்ற ஒரு பழம், என்று தெரிவித்துள்ளார்.

திட்டம் எதை குறிக்கிறது : 

குஜராத் அரசாங்கத்தின் இந்த பெயர்மாற்றம் குறித்து மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டதாக ஐ.சி.ஏ.ஆர் வட்டாரங்கள் தெரிவித்தன. "இந்த விஷயத்தில் ஐ.சி.ஏ.ஆர்  பரிந்துரைக்கும் பெயரிடல், வகைகள் வெளியீடு, உற்பத்தி எதுவாக இருந்தாலும், இவை அனைத்தும் வேளாண்மை மற்றும் ஒத்துழைப்புத் துறையால் மட்டுமே செய்யப்படுகின்றன ஐ.சி.ஏ.ஆரின் துணை இயக்குநர் ஜெனரல் (விவசாய நீட்டிப்பு) டாக்டர் ஏ.கே.சிங் கூறியுள்ளார்.

இத்தகைய திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரவியல் ஆய்வு மற்றும் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் ஒப்புதல் தேவைப்படும் என்று ஐ.சி.ஏ.ஆர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் "டிராகன் பழம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு இனம் அல்ல, இதனால் அந்த பழத்தின் பெயர் மாற்றுதல், சர்வதேச வழக்குகளுக்கு வழிவகுக்கும் என்று, பி.எஸ்.ஐ, என்.பி.ஏ மற்றும்”ஐ.சி.ஏ.ஆர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment