scorecardresearch

கோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது?

தேசிய மருந்து ஒழுங்குமுறை, இந்தியாவின் தலைமை மருந்துகள் கட்டுப்பாட்டாளர் (டி.சி.ஜி.ஐ), கடுமையான கோவிட் -19 நோயாளிகளுக்கு மிதமான ஒரு துணை சிகிச்சையாக அவசரகால பயன்பாட்டிற்கான ஒரு மருந்துக்கு மே 1ம் தேதி அனுமதி அளித்தது.

DRDO new oral drug 2-DG, டிஆர்டிஓ புதிய மருந்து 2டிஜி, டிஆர்டிஓ, 2டிஜி, கோவிட் 19, கொரோனா வைரஸ், 2dg for Covid 19 treatment, DRDO, INMAS, DRL

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவிட்-19 எதிர்ப்பு மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுகோஸ் அல்லது ‘2-டிஜி’ முதல் தொகுப்பை திங்கள்கிழமை (மே 17) வெளியிட்டனர்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை மற்றும் இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டு (டி.சி.ஜி.ஐ) அமைப்பு கடுமையான கோவிட் -19 நோயாளிகளுக்கு மிதமான ஒரு துணை சிகிச்சையாக அவசரகால பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட மருந்துக்கு மே 1ம் தேதி அனுமதி அளித்திருந்தது.

உருவாக்கம்

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் (டி.ஆர்.எல்) உடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) ஆய்வகமான புதுடெல்லியின் அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) 2-டிஜி மருந்தை உருவாக்கியுள்ளது. இதனை பாதுகாப்பு அமைச்சகம் இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.

இது எப்படி செயல்படுகிறது

அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திப்படி, கோவிட்-19 தொற்றுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்க இந்த மூலக்கூறு உதவுகிறது என்பதையும் கூடுதலாக ஆக்ஸிஜன் உதவியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் மருத்துவ சோதனை தரவுகள் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளது.

இந்த மருந்து வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களில் குவிந்து, வைரஸ் தொகுப்பையும் அதன் ஆற்றல் உற்பத்தியையும் நிறுத்துவதன் மூலம் வைரஸின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களில் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட திரட்சிகளில் செயல்படுவது இந்த மருந்தை தனித்துவமாக்குகிறது என்று அரசாங்க செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

மேலும், “கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மருந்து மிகுந்த நன்மை அளிக்கும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகள்

ஏப்ரல் 2020-ல் முதல் அலையின்போது, ஹைதராபாத்தின் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சி.சி.எம்.பி) உடன் இணைந்து ஐ.என்.எம்.ஏ.எஸ் – டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனைகளில் இந்த மூலக்கூறு கொரோனா வைரஸ், SARS-CoV-2க்கு எதிராக திறம்பட செயல்படுவதைக் கண்டறியப்பட்டது. இது கோவிட் -19 நோயை ஏற்படுத்தும் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது.

மே 2020 இல், இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) கோவிட்-19 நோயாளிகளுக்கு 2-டிஜி மருந்தின் 2வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை அனுமதித்தது.

டி.ஆர்.டி.ஓ மற்றும் அதன் தொழில்துறை கூட்டாளியான டி.ஆர்.எல் கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 110 நோயாளிகளுக்கு இரண்டாம் கட்ட சோதனைகளை நடத்தியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2ஏ கட்ட சோதனை ஆறு மருத்துவமனைகளில் நடத்தப்பட்டது. 2பி கட்ட சோதனை (டோஸ் அளவு) நாடு முழுவதும் 11 மருத்துவமனைகளில் நடத்தப்பட்டது.

வெற்றிகரமான 2வது கட்ட மருத்துவ பரிசோதனை தரவுகளின் அடிப்படையில், டி.சி.ஜி.ஐ நவம்பர் 2020ல் 3வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை அனுமதித்தது. டிசம்பர் 2020 மற்றும் மார்ச் 2021 க்கு இடையில், டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 27 கோவிட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 220 நோயாளிகளுக்கு தாமதமான நிலையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என்று அரசு தெரிவித்துள்ளது.

சோதனை தரவு

கோவிட் -19 நோயாளிகளில் இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை சோதிக்க 2வது கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிட் -19 நோயாளிகளுக்கு இந்த 2-டிஜி மருந்து பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் குணமடைவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியதாக அரசாங்க செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

செயல்திறன் போக்குகளில், “2-டிஜி உடன் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகள் பல்வேறு இறுதி கட்டங்களில் நிலையான பாதுகாப்பைவிட (SoC) விரைவாக குணமடையும் அறிகுறியைக் காட்டினர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நிலையான பாதுகாப்புடன் (SoC) ஒப்பிடும்போது குறிப்பிட்ட முக்கிய அறிகுறிகளின் அளவுகளை இயல்பாக்குவதற்கான சராசரி நேரத்தின் அடிப்படையில் சாதகமான போக்கு (2.5 நாட்கள் வித்தியாசம்) கணிசமாக காணப்பட்டது.” என்று தெரிவித்துள்ளது.

3வது கட்ட மருத்துவ பரிசோதனை தரவுகள், 2-டிஜி கையில், “நோயாளிகளின் கணிசமான அளவு அறிகுறிகளாக மேம்பட்டது மற்றும் SoC உடன் ஒப்பிடுகையில் 3 ஆம் நாளில் ஆக்ஸிஜன் உதவி நிலையிலிருந்து (42% – 31%) விடுபட்டதைக் காட்டுகிறது. மேலும் ஆரம்பநிலை ஆக்ஸிஜன் சிகிச்சை / ஆக்ஸிஜன் உதவியில் இருந்து விடுபட்டதைக் காட்டுகிறது” என்று அரசாங்கம் கூறியது.

இதேபோன்ற போக்கு 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளிலும் காணப்பட்டது.

நன்மைகள்

அரசாங்கம் கூறியுள்ளபடி, 2-டிஜி மருந்து ஒரு பொதுவான மூலக்கூறு மற்றும் குளுக்கோஸ் அனலாக் என்பதால், இதை எளிதாக உற்பத்தி செய்து பெரிய அளவில் கிடைக்கச் செய்யலாம். இந்த மருந்து தூள் வடிவில் ஒரு பாக்கெட்டில் கிடைக்கிறது. இது தண்ணீரில் கலக்கி குடிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Drdo new oral drug 2 dg for covid 19

Best of Express