Advertisment

Odd-Even முறையால் குறைந்த டெல்லி மாசு... மத்திய அரசு அறிக்கை வெளியீடு!

மாசு பி.எம். 10ன் அளவு முறையே இந்த திட்டத்திற்கு முன்பு அதிகபட்சமாக 592 மைக்ரோகிராம்களாக இருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu weather, delhi air pollution comes to tamilnadu chennai weathermen updates

Tamil Nadu weather, delhi air pollution comes to tamilnadu chennai weathermen updates

Drop in Delhi particulate matter in days following odd-even :  ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வயற்காடுகளை தீயிட்டு கொளுத்தியதின் விளைவாக உருவான காற்ற மாசுபாடு டெல்லி மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பரவியது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். ஏற்கனவே டெல்லியின் புவியியல் அமைப்பு காற்று மாசுப்பாட்டினை இயற்கையாக சரி செய்து கொள்ளும் வகையில் இல்லை. மழைப்பொழிவு ஏற்பட்டால் மட்டுமே மாசுக்கள் குறைய வாய்ப்புகள் உண்டு. இந்த காற்று மாசுபாட்டின் தீவிரவாதத்தை நன்கு உணர்ந்த டெல்லி அரசு Odd-Even என்ற திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது.

Advertisment

publive-image

ஒற்றைப்படை எண்களை கார் எண்களாக கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை எண்களைக் கொண்ட தேதிகளில் ஓட்டவும், இரட்டைப்படை எண்களைக் கொண்ட வாகனங்கள் இரட்டைபப்டை எண்களை கொண்ட தேதிகளில் ஓட்டவும் உத்தரவிடப்பட்டது. இந்த முறையானது நவம்பர் 4ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த 12 நாட்களில் டெல்லியில் காற்றின் மாசு குறைந்திருப்பதை சூற்றுச்சூழல், காடுகள் மட்டும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

To read this article in English

நவம்பர் 23 முதல் நவம்பர் 3 தேதி வரை டெல்லியில் நிலவிய மாசின் அளவு 275 மைக்ரோகிராம்களாக இருந்தது. இந்த 12 நாட்கள் திட்டத்திற்கு பிறகு இதன் அளவு 131 மைக்ரோ கிராம்களாக குறைந்தது. (நவம்பர் 16-27). இந்த 12 நாட்களில் சராசரியாக இருந்த மாசுக்களின் அளவு 252 மைக்ரோ கிராம்களாகும். இந்த திட்டத்திற்கு முன்பே அதிகபட்சமாக மாசின் அளவு 486 மைக்ரோ கிராம்களாகும். குறைந்த அளவு 133 ஆகும். இந்த திட்டத்திற்கு பிறகு 109 முதல் 399 மைக்ரோ கிராம்கள் வரை நிலவியது. இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் போது 64 மைக்ரோ கிராம்கள் முதல் 214 மைக்ரோ கிராம்கள் வரை நீடித்தது.  காற்றில் கலந்திருந்த சல்ஃபர் டை ஆக்ஸைட் இந்த திட்டத்திற்கு முன்பு எந்த அளவில் இருந்தததோ அதில் சிறிதும் குறைவு இல்லாமல் அப்படியே நீடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் போது காற்றில் 14 மைக்ரோகிராம் அளவு இருந்த சல்ஃபர் டை ஆக்ஸைடு திட்டம் முடிவடைந்த போது 13 ஆக குறைந்தது. நைட்ரஜன் ஆக்ஸைடின் அளவானது 58-ல் இருந்து 57 முதல் 55 வரை குறைந்தது. டெல்லி காற்றில் இருந்த மாசுக்கள் PM2.5 மற்றும் PM10 போக்குவரத்து, தொழிற்சாலைகள், விவசாய பொருட்கள் எரிப்பு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து உருவாகும் கழிவுகளால் உருவானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாசு பி.எம். 10ன் அளவு முறையே இந்த திட்டத்திற்கு முன்பு அதிகபட்சமாக 592 மைக்ரோகிராம்களாக இருந்தது. குறைந்தபட்சமாக 289 மைக்ரோகிராம்களாக இருந்தது. இந்த திட்டத்தின் இதன் அளவு 380 மைக்ரோகிராம்களாக (சராசரி) இருந்தது. இந்த திட்டத்திற்கு பிறகு 231 மைக்ரோகிராம்களாக குறைந்து காணப்பட்டது.

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment