பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பெரல்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கையின்படி, சார்ஸ்-சி.ஓ.வி.-2 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு diABZI மருந்தை கொடுத்தபோது, அவை உடலின் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் கடுமையான கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்க diABZI மருந்து உதவுகிறது.
இந்த மாதத்தில் சயின்ஸ் இம்யூனாலஜியில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள், diABZI மருந்து சுவாச கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடும் என கூறுகின்றன.
SARS-CoV-2 நோய்த்தொற்றைத் தடுக்கும் ஆன்டிவைரல் மருந்தை கண்டுபிடிக்க, ஆராய்ச்சியாளர்கள் நுரையீரல் உயிரணுக்களில் உணர்திறன் பாதைகளை குறிவைக்கும் 75 மருந்துகளின் உயர் செயல்திறனை கண்காணித்தனர்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத ஆனால் தற்போது சில புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ பரிசோதனைகளில் பரிசோதிக்கப்பட்டு வரும் diABZI, எனப்படும் புதிதாக உருவாக்கப்பட்ட சிறிய மூலக்கூறு STING agonistயை இந்த குழு பரிசோதித்தது
இந்த குழு diABZI எனப்படும் புதிதாக உருவாக்கப்பட்ட சிறிய மூலக்கூறான STING agonistயை பரிசோதித்து. இந்த மருந்து நோயெதிர்ப்பு சக்தியை தூண்ட உதவும். இது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் தற்போது சில புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ பரிசோதனைகளில் சோதிக்கப்படுகிறது.
ஆராய்ச்சியின் முடிவில், உருமாறிய தென் ஆப்பிரிக்கா கோவிட்-19 தொற்று B.1.351 உள்ளிட்ட பல்வேறு வகையான SARS-CoV-2 நோய்த்தொற்றை diABZI மருந்து தடுப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"