இ-பிளேன் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

859 மில்லியன் டன்கள் கார்ப்பன்டை ஆக்சைடு வளிமண்டலத்தில் உமிழப்பட்டது.

By: Updated: December 15, 2019, 12:50:48 PM

உலக அளவில் மனிதர்கள் உருவாக்கும் கார்பன்டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றத்தில் விமானப்போக்குவரத்தின் பங்கு 2 சதவிகிதம் ஆகும். இந்த சூழலில் இ-விமானம், வணிக விமான பயண கட்டணத்தை குறைக்குமா, சூழலுக்கும் ஏற்றதாக்குமா?

உலகின் முதலாவது அனைத்து மின்னணு வணிக விமானம் ஒரு சிறிய விமானமாக கட்டமைக்கபட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்த இ-விமானத்தை வட அமெரிக்காவின் பெரிய கடல் விமானங்களை இயக்கும் ஹார்பர் ஏர் நிறுவனம், மின்னணு விமானத்துக்கான உந்துவிசை கருவிகளை கட்டமைக்கும் நிறுவனமான மாக்னிஎக்ஸ் ஆகியவை இயக்கின. கன்னடாவின் வான்கூவரில் இருந்து டிசம்பர் 10ம் தேதி இந்த விமானம் பறந்தது.

ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

6 இருக்கைகள் கொண்ட, டிஎச்சி-2 டிஇ (DHC-2 de)ஹாவிலேண்ட் பீவேர் கடல் விமானம், மாசை உமிழாத 750 குதிரை சக்தி திறன் கொண்ட உந்துவிசை கருவியுடன், கூடிய இந்த விமானத்தை ஹார்பர் ஏர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிரெக் மெக்டகல் பைலட் ஆக இருந்து இயக்கினார்.

ஹார்பர் ஏர் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மாக்னிஎக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோய் கன்சார்ஸ்கி கூறுகையில், “போக்குவரத்து தொழில் துறை, குறிப்பாக விமானப்போக்குவரத்துப் பிரிவானது, பெரும் பகுதியில் 1930-களில் இருந்தே தேக்கநிலையைக் கொண்டிருக்கிறது. பெரிய இடையூறான சூழலில் இருந்து பொருத்தமான ஒரு சூழல் வந்திருக்கிறது. இப்போது, மிக குறைவான, சூழலுக்கு ஏற்ற, வணிக மின்னணு விமானப்பயணத்தை கொடுப்பது என்பது, மிக அருகில் நனவாக இருக்கிறது”.

ஹார்பர் ஏர் நிறுவனம், 2022ம் ஆண்டுக்குள் தமது பெரும்பாலான விமானங்களை மின்னணுவாக மாற்றிவிடுவது என்று திட்டமிட்டுள்ளது. இந்த வாரத்தின் வெற்றிகரமான இ-விமான பயணம் , உலகின் முதல் அனைத்து மின்னணு வணிக விமானத்தை கட்டமைப்பதற்கான முயற்சியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி என்று இரண்டு நிறுவனங்களும் சொல்கின்றன.

இதனை ஆங்கிலத்தில் படிக்க – Explained: What is an ‘e-plane’, and how does it work?

இந்த அறிக்கை, “மின்னணு சகாப்தம் எனும் மூன்றாவது சகாப்தத்தை தொடங்குவதுதான் இந்த வரலாற்றுப்பூர்வமான விமானம் குறிக்கிறது”

முதல் விமானம் எப்படி வானத்தில் சென்றது?

இ-விமானம் 100 மைல்கள்(160 கி.மீ) தூரத்தை 15 நிமிடத்தில் கடந்தது. வான்கூவர் பகுதியில் குறுகியதூரம் பறப்பதற்கு இது போன்ற சிறிய ரக கடல் விமானம் தகுந்ததாக இருக்கிறது. உதாரணமாக வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா கேப்பிட்டல் விக்டோரியா இடையே தோராயமாக 58 மைல்கள் இருக்கின்றன.

எங்கேட்ஜெட் கூறியபடி, ஒரு DHC-2 பீவேர் விமானம் மரபுரீதியிலான மணிக்கு 300 டாலர் மதிப்புள்ள எரிபொருளை எரிக்கும் திறன் கொண்ட டர்பைன் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதே விமானம் மின்னணு மோட்டாரில், 10-20 டாலர் மதிப்புள்ள மின்னணு உபயோகித்து 100 மைல்கள் பறக்கும்.
எனினும், இதுபோன்ற மின்னணு விமானம், 5-6 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்லும். பெரிய விமானங்கள் பெரிய அளவிலான சக்தி தேவைப்படும். எனவே பேட்டரி தொழில்நுட்பம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க புதுமைக் கண்டுபிடிப்புகள் தேவைப்படுகின்றன.

நீண்ட தூர விமானப் பயணத்தில், மாசற்ற உமிழ்வு என்ற நிலைக்கு எவ்வளவு தூரத்தில் இருக்கின்றோம்?

சர்வதேச விமான போக்குவரத்து அசோயேஷன் கூறியபடி, உலக அளவில் மனிதர்கள் உருவாக்கும் கார்பன்டை ஆக்சைடு வாயுவை வளிமண்டலத்தில் வெளியேற்றுவதில் விமானப்போக்குவரத்தின் பங்கு 2 சதவிகிதம் ஆகும். 2017-ல் விமானப் போக்குவரத்தால், 859 மில்லியன் டன்கள் கார்ப்பன்டை ஆக்சைடு வளிமண்டலத்தில் உமிழப்பட்டது.

இப்போது இருக்கும் தொழில்நுட்பங்கள் விமானப்போக்குவரத்தில் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வை குறைப்பதில் குறிப்பிடத்தக்க வகையில் உதவாது. மின்னணு, உயர் ரக மின்னணு கருவிகள் வந்தால் இது நடக்கும்.ஆனால், நீண்ட தூர விமானப் பயணத்தில் அந்தத் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துவது இன்னும் சில தூரம் தள்ளியே இருக்கின்றது.

விமான உந்தவிசை கருவிகள் அல்லது வளிமண்டல கருவிகள் பாரம்பர்யமாக ஒரு இன்ஜினால் சுழல வைக்கப்படுகின்றன. இந்த உந்து விசை கருவிகள் விமானம் முன்னோக்கி செல்வதை முன்னெடுக்கின்றன. எரிபொருள் செயல்பாட்டை உபயோகித்து, கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட இதர வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியேற்றி விமானம் பறக்கிறது.
ஏர்பஸ் நிறுவனம் உலகிலேயே முதலாவது முழுமையான மின்னணு, நான்கு இன்ஜின் ஏரோபாட்டிக் விமானத்தை 2010-ம் ஆண்டு முன்னெடுத்தது. இதன் தொடர்ச்சியாக இ-ஃபேன் விமானம் முன்னெடுக்கப்பட்டு, இது ஆங்கில கால்வாயை 2015-ம் ஆண்டு பறந்து கடந்தது.

2021-ம் ஆண்டுக்குள் இ-ஃபேன் விமானத்தின் அடுத்த கட்டமாக இ-ஃபேன் எக்ஸ் கொண்டு வர ஏர்பஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது 30மடங்கு அதிக சக்தி கொண்டதாக, முதல் விமானத்தை எடுத்துச் செல்வதாக இருக்கும். ஏர்பஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் கூறியுள்ளபடி, “ஏர்பஸ்-க்காக மின்னணு உந்துவிசை தயாரிப்பு பணியின் நோக்கம் என்பது, மாசற்ற வளிமண்டலத்தை வணிகப்படுத்துதல், அனைத்து மின்னணு நகர்புற விமான வாகனங்கள் , பெரிய வணிக விமானங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகும். 2030-ம் ஆண்டு காலகட்டத்துக்குள், மின்னணு, உயர் ரக மின்னணு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான 100 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானத்தை உருவாக்கும் வகையில் தொழில்நுட்பத்தை உருவாக்குவதுதான்.”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:E plane work how its flying fully electrical

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X