Advertisment

இரவில் தாமதமாக சாப்பாடு: உடல் எடை அதிகரிக்கும் அபாயம் ஏன்?

அக்டோபர் 4 ஆம் தேதி செல் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், நாம் சாப்பிடும் நேரம் எப்படி நமது ஆற்றல் செலவினம், பசியார்வம் மற்றும் உடல் கொழுப்பை எவ்வாறு சேமிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
lifestyle

Why does eating late increase the risk of weight gain?

தாமதமாக இரவு நேர உணவை உட்கொள்வதால் உடல் பருமன் மற்றும் உடல் எடை குறைவதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

Advertisment

அந்தவகையில், ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், தாமதமாக சாப்பிடுவது எடையைக் கட்டுப்படுத்தும் முக்கிய இயக்கிகள் மீது அதன் விளைவுகள் குறித்து சில ஆய்வுகளை நடத்தின.

அக்டோபர் 4 ஆம் தேதி செல் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், நாம் சாப்பிடும் நேரம் எப்படி நமது ஆற்றல் செலவினம், பசியார்வம் மற்றும் உடல் கொழுப்பை எவ்வாறு சேமிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அதிக எடை அல்லது பருமனான வரம்பில் BMI கொண்ட 16 பங்கேற்பாளர்களை குழு ஆய்வு செய்தது.

ஒவ்வொரு நபருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டது, அவர்கள் அனைவரும் இரண்டு ஆய்வக நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒன்று முன்கூட்டிய உணவு திட்டமிடல், இரண்டாவது குழுவில் ஒவ்வொரு உணவும், 250 நிமிடங்கள் கழித்து தாமதமாக வழங்கப்பட்டது.

கொழுப்பு சேமிப்பில் உணவு நேரத்தின் தாக்கத்தை அளவிட, இரண்டு குழுக்களின் பங்கேற்பாளர்களிடமிருந்து கொழுப்பு திசுக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அதில், தாமதமாக சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை குழு கண்டறிந்தது. நமது பசியைத் தடுக்கும் லெப்டினின் (leptin) அளவு, தாமதமாகச் சாப்பிடும் போது 24 மணிநேரத்தில் குறைக்கப்பட்டது.

தாமதமாக சாப்பிடுவது பசியுடன் இருப்பதற்கான வாய்ப்புகளை இரட்டிப்பாக்கியது. மேலும் அந்த குழுவின் பங்கேற்பாளர்கள், ​​ மெதுவான விகிதத்தில் கலோரிகளை எரித்தனர். அடிபொஜெனெசிஸ் அதிகரிப்பு மற்றும் லிபோலிசிஸ் குறைவதன் மூலம் இது கொழுப்பு திசு விரிவாக்கத்தை ஊக்குவித்தது.

இந்த ஆய்வில், எல்லாவற்றையும் சீராக வைத்திருக்கும்போது நாம் சாப்பிடும் நேரம் முக்கியமா? என்று கேட்டோம் என முதல் ஆசிரியர் நினா வுஜோவிக், PhD, (தூக்கம் மற்றும் சர்க்காடியன் கோளாறுகள் பற்றிய பிரிகாமின் பிரிவில் உள்ள மருத்துவ க்ரோனோபயாலஜி திட்டத்தின் ஆராய்ச்சியாளர்) கூறினார்.

நான்கு மணி நேரம் கழித்து சாப்பிடுவது நமது பசியின் அளவு, சாப்பிட்ட பிறகு கலோரிகளை எரிக்கும் விதம் மற்றும் கொழுப்பைச் சேமிக்கும் விதம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தோம் என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment