பணமோசடி வழக்கில் 'ஆம்வே இந்தியா’ நிறுவனத்தின் ரூ.757 கோடியே 77 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை திங்கட்கிழமை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், மல்டி லெவல் மார்க்கெட்டிங் மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலம் மற்றும் தொழிற்சாலை கட்டிடம், ஆலை மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள், வங்கி கணக்குகள், ஃபிக்சட் டெப்பாசிட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் ஆகும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.411.83 கோடியாகும். இதுதவிர, 36 வங்கி கணக்கில் 345.94 கோடி ரூபாய் இருப்பு உள்ளது.
அமலாக்கத் துறை வழக்கு என்ன?
ஆம்வே நிறுவனத்தின் மீது பரிசு சீட்டு மற்றும் தடைசெய்யப்பட்ட பண சுழற்சி திட்டம் அடிப்படையில் ஹைதராபாத் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கத் துறை கூற்றுப்படி, விசாரணையில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்கிற பெயரில் மோசடி ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ஆம்வே தயாரிப்புகளின் மாற்றான பிரபல உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில், ஆம்வே தயாரிப்புகளின் விலை அதிகமாக இருப்பதை காணமுடிகிறது. உண்மைகள் தெரியாமல், இந்நிறுவனத்தின் உறுப்பினர்களாக பொதுமக்கள் சேர தூண்டி, விலை அதிகமான பொருகளை வாங்கிவைத்து, அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க வைக்கின்றனர். இவர்கள் பொருட்களை விலை கொடுத்து வாங்குவது பயன்படுத்துவதற்காக இல்ல. நிறுவனத்தின் உறுப்பினராகச் சேர்ந்து, பின்னர் பலரையும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தி கமிஷன் தொகை பெறலாம் என்கிற நோக்கித்தில் தான் செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி அளவு என்ன?
2002-03 முதல் 2021-22 வரையான காலக்கட்டத்தில், தனது வணிக நடவடிக்கைகள் மூலம் ஆம்வே ரூ.27,562 கோடி வசூலித்ததாகவும், அதில் இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது விநியோகஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ரூ.7,588 கோடி கமிஷன் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் முழு கவனமும் உறுப்பினராக மற்றவர்களை இணைத்து பணம் சம்பாதிப்பதை அறிவுறுத்துவது மட்டுமே தான். அதன் தயாரிப்புகளில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை என தெரிகிறது.
1996-97 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு பங்கு மூலதனமாக ரூ. 21.39 கோடியைக் ஆம்வே கொண்டு வந்ததாகவும், முதலீட்டாளர்கள், பெற்றோர் தாய் நிறுவனம் ஈவுத்தொகை, ராயல்டி மற்றும் பிற கொடுப்பனவுகள் என்ற பெயரில் 2020-21 வரை ரூ.2,859.10 கோடியை அனுப்பியுள்ளது.
M/s Britt Worldwide India Private Limited, M/s Network Twenty One Private Limited ஆகியவை, உறுப்பினர்களைச் சேர்த்து பொருட்களை விற்பனை செய்வதற்காக, உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான கருத்தரங்குகளை நடத்தி, ஆம்வேயின் பிரமிட் திட்டத்தை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்வே இந்தியா எத்தனை ஆண்டுகளாக விசாரணை வட்டத்தில் இருக்கிறது?
2006 மற்றும் 2014 க்கு இடையில், ஹைதராபாத், விஜயவாடா, கர்னூல், வாரங்கல், கம்மம் உள்ளிட்ட நகரங்களில், பரிசு சீட்டு மற்றும் தடைசெய்யப்பட்ட பண சுழற்சி திட்டத்திற்காக ஆந்திரப் பிரதேச காவல்துறை ஆம்வேக்கு எதிராக பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது.
எம்எல்எம் என்ற பெயரில் பிரமிட் மோசடி மற்றும் சட்டவிரோத பணமோசடி திட்டத்தில் ஆம்வே ஈடுபடுவதாக அதன் பாட்னர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நிலையில், அனைத்து நிறுவன அலுவலகங்களையும் காவல்துறை மூடியது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 2006 இல் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் AVS சத்தியநாராயணனால் CID காவல் நிலையத்தில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அந்த புகாரில், இரண்டு ஆம்வே விநியோகஸ்தர்கள் என்னை அணுகி, ரூ. 4,000 செலுத்தி திட்டத்தின் சேருங்கள். நீங்கள் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால், விரைவாத உங்களுக்கு கமிஷன் தொகை கிடைக்கும் என கூறினர். ஆகஸ்ட் 2005ல் ரூ.5,200 செலுத்தி திட்டத்தில் இணைந்தேன். இந்தத் திட்டம் நீண்ட சப்ளை செயின் என குற்றச்சாட்டினர். ஒவ்வொரு உறுப்பினர்கள் மற்றவர்களை சேர்க்கக்கோரி அறிவுறுத்தப்படுகின்றனர். ஐபிசி பிரிவு 385 , 480ன் கீழ் சிஐடி வழக்குப் பதிவு செய்தது.
மே 2014 இல், கர்னூலில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், குர்கானில் இருந்த ஆம்வே இந்தியாவின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான வில்லியம் எஸ் பிங்க்னியை ஆந்திரப் பிரதேச சிஐடி கைது செய்தது. இதையடுத்து அவரை கம்மம் போலீசார் காவலில் எடுத்தனர்.
முன்னதாக அவர் மே 2013 இல் வயநாட்டில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கேரள காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வந்த மனுவை தொடர்ந்து, ஆந்திர சிஐடி அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
ஆகஸ்ட் 2011 இல், கோழிக்கோடு, கண்ணூர், கொச்சி, கோட்டயம், திருச்சூர், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஆம்வேயின் அலுவலகங்களுக்கு கேரள காவல்துறை, சீல் வைத்தது. நவம்பர் 2012 இல், கேரள காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு ஆம்வே அலுவலகங்களில் நடத்திய சோதனையில், ரூ.2.14 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அப்போது, சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், ஜூன் 8, 2013 அன்று, கோழிக்கோடு நீதிமன்றம் கேரளாவில் ஆம்வே அலுவலகங்கள் மீதான முடக்கத்தை நீக்கியது.
2017 ஆம் ஆண்டில், சண்டிகர் நீதிமன்றம் IPC பிரிவு 420 மற்றும் பரிசு சீட்டுகள் மற்றும் பணப் புழக்கத் திட்டம் (தடை) சட்டத்தின் கீழ் ஆம்வே இந்தியாவின் இரண்டு இயக்குநர்களான பின்க்னி மற்றும் பிருத்வாய் ராஜ் பிஜ்லானிக்கு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்த தீர்ப்பு 2002 இல் எட்டு புகார்தாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்கின் அடிப்படையில் அமைந்தது. இருவரின் மறுசீரமைப்பு மனு 2018 இல் தள்ளுபடி செய்யப்பட்டது.
வெளிநாட்டில் இத்தகைய பிரச்சினையை ஆம்வே சந்தித்தது உண்டா?
நவம்பர் 3, 2010 அன்று, ஆம்வே $56 மில்லியன் அதாவது $34 மில்லியன் ரொக்கம், $22 மில்லியன் தயாரிப்புகளை, 2007 இல் கலிபோர்னியாவில் உள்ள ஃபெடரல் டிஸ்ட்ரிக்ட் கோர்ட்டில் தாக்கல் செய்த Class Action வழக்கை தீர்ப்பதற்கு அளிக்க ஒப்புக்கொள்வதாக அறிவித்தது.
ஆம்வே தரப்பில் கூறியதாவது, settlement என்பது தவறு அல்லது பொறுப்பை ஒப்புக்கொள்வதாக கருதப்படாது. வழக்கின் தீர்ப்பை கருத்தில் கொண்டு,வணிக நடவடிக்கைகளில் மாற்றங்களைச் செய்வதாக ஒப்புக்கொண்டதாகவே தெரிவிக்கப்பட்டது. செட்டில்மென்ட்டின் பொருளாதார மதிப்பு, ஆம்வே தனது வணிக மாதிரியில் செய்த மாற்றங்கள் உட்பட மொத்தம் $100 மில்லியன் ஆகும்.
2009 ஆம் ஆண்டு கனடாவில் பதிவு செய்யப்பட்ட Class Action வழக்கு பெடரல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. பின்னர், மேல்முறையீட்டைத் தொடர்ந்து, ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் நடுவர் மன்றத்திற்கு வழங்கப்பட்ட செலவுகளை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.