/indian-express-tamil/media/media_files/X4yPCpuZtXCp0P6D1LE7.jpg)
சச்சின் டெண்டுல்கர், கௌதம் சிங்கானியா, நீரா ராடியா மற்றும் அனில் அம்பானி ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். (கோப்பு புகைப்படம்)
பண்டோரா பேப்பர்ஸ் என்பது 14 வெளிநாட்டு சேவை வழங்குநர்களிடமிருந்து 11.9 மில்லியன் ரகசிய ஆவணங்களைக் குறிக்கிறது. இது பெரும் பணக்காரர்கள் தங்கள் உலகளாவிய பணப்புழக்கங்களை நிர்வகிக்கப் பயன்படுத்திய 29,000 வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Searches, summons, detection of violations: ED’s Pandora probe touches Indian owners of offshore firms
சொத்துக்களை கைப்பற்றுவதற்கான அறிக்கைகளை பதிவு செய்தல்; அவர்களது இடங்களில் தேடுவதற்கான சம்மன்; வருமான வரி மற்றும் ரிசர்வ் வங்கியிலிருந்து விவரங்களைப் பெறுதல் - பணமோசடி மீறல்களைக் கண்டறிதல். பண்டோரா பேப்பர்ஸ் விசாரணையில் அமலாக்க இயக்குநரகத்தின் தற்போதைய நடவடிக்கையின் முக்கிய அம்சங்கள் இவைதான், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய 2021 விசாரணையில் பெயரிடப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் கிட்டத்தட்ட அனைத்து இந்திய உரிமையாளர்களுக்கும் விசாரணைகள் "தொடங்கப்பட்டுள்ளன".
அவர்களில் அனில் அம்பானி முதல் சச்சின் டெண்டுல்கர், யுனிடெக் புரொமோட்டர்ஸ் மற்றும் நீரா ராடியா வரை; கௌதம் சிங்கானியா முதல் லலித் கோயல், மல்விந்தர் சிங் வரை, இந்த ஆய்வுகளின் தற்போதைய நிலவரப்படி, இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு தெரிய வந்துள்ளது.
பண்டோரா பேப்பர்ஸ் என்பது 14 வெளிநாட்டு சேவை வழங்குநர்களிடமிருந்து 11.9 மில்லியன் ரகசிய ஆவணங்களைக் குறிக்கிறது. இது பெரும் பணக்காரர்கள் தங்கள் உலகளாவிய பணப்புழக்கங்களை நிர்வகிக்கப் பயன்படுத்திய 29,000 வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளது.
இந்த தகவல்கள் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பால் (ICIJ) பெறப்பட்டது, 150 ஊடக கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது - இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த பட்டியலில் உள்ள இந்திய பெயர்களை ஆய்வு செய்தது. விசாரணையை முன்னெடுத்துச் செல்ல மல்டி ஏஜென்சி குழுவை (எம்.ஏ.ஜி) அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, வருமான வரித் துறை, பெரும்பாலான இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு உத்தரவுகளை அனுப்பியது தெரிய வந்துள்ளது; நிதிப் புலனாய்வுப் பிரிவு (எஃப்.ஐ.யு) 2022 இறுதி வரை, இந்த அறிக்கைகளில் பெயரிடப்பட்ட 482 நபர்களுக்கான கோரிக்கைகளை வெளிநாட்டு அதிகார வரம்புகளுக்கு அனுப்பியது.
பல சந்தர்ப்பங்களில், இ.டி எக்மாண்ட் (Egmont) கோரிக்கைகளை அனுப்பியது - எக்மாண்ட் குழுமத்துக்கு (Egmont Group) 167 அதிகார வரம்புகளின் நிதி நுண்ணறிவுப் பிரிவுகளின் தாய் அமைப்பான வெளிநாட்டு நிறுவனங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற குறிப்புகளை அனுப்பியது.
ஒரு விசாரணை பின்வரும் புதிய தகவல்களை வெளிப்படுத்துகிறது: பண்டோரா ஆவணங்களில் உள்ள முக்கிய பெயர்களுக்கு எதிரான விசாரணை குறித்த விவரங்கள்.
1. அனில் அம்பானி
பண்டோரா ஃபைல்: ஏ.டி.ஏ குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது பிரதிநிதிகள் ஜெர்சி, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் சைப்ரஸில் குறைந்தது 18 வெளிநாட்டு நிறுவனங்களை வைத்துள்ளனர். இந்த நிறுவனங்கள் 2007 மற்றும் 2010-க்கு இடையில் நிறுவப்பட்டது, இவற்றில் ஏழு நிறுவனங்கள் குறைந்தபட்சம் $1.3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்கி முதலீடு செய்தன. இந்த நிறுவனங்களை நிர்வகித்த சேவை வழங்குநர்கள், வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களுக்கு “ரிலையன்ஸ்/அனில் அம்பானி முதலீடுகளை மேற்கொள்வதற்காக உத்தரவாதம் அளித்துள்ளார்கள்…” என்று அப்போது அம்பானியின் வழக்கறிஞர், வெளியான அனைத்து விவரங்களும் இந்தியச் சட்டத்திற்கு உட்பட்டு செய்யப்பட்டதாகக் கூறினார்.
விசாரணையின் புதிய தகவல்: அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் விவரங்களையும் இ.டி கோரியுள்ளது; மூன்று இந்திய நிறுவனங்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. எக்மாண்ட் கோரிக்கைகள், எஃப்.ஐயு - பி.வி.ஐ (FIU-BVI), சைப்ரஸ் மற்றும் ஜெர்சி ஆகிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஃபெமாவின் (FEMA) விதிகளின் கீழ் அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டினா அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டு, இ.டி-யின் மும்பை அலுவலகத்தில் அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2. பவகுது ரகுராம் ஷெட்டி
பண்டோரா ஃபைல்: 2020-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள அதிகாரிகளால் பவகுது ரகுராம் ஷெட்டி, இந்திய வங்கிகள் பலவற்றிற்கு அதிக கடன்களை செலுத்தாததற்காக கைது செய்யப்பட்டார். அவர் 2013-ம் ஆண்டில் ஜெர்சி மற்றும் பி.வி.ஐ-ல் ஒரு சிக்கலான கடல்சார் நிறுவன வலையமைப்பை அமைத்தார். மேலும், இந்த நிறுவனங்கள் அவரது முதன்மை நிறுவனமான டிராவெலெக்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் கிளைகளின் பங்குகளை வைத்துள்ளன. ஷெட்டியின் மனைவி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் சில நிறுவனங்களின் இயக்குநர்களாகக் காட்டப்படுகிறார்கள்.
விசாரணையில் தற்போது முன்னேற்றம்: செப்டம்பர் 2022-ல் அவருக்கும் அவரது உயர் நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. 53.25 கோடி மதிப்பிலான விவசாயச் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உள்ளடக்கிய புகாரில் 1,122.49 கோடி ரூபாய் அளவுக்கு ஃபெமா (FEMA) விதிமீறல்கள் நடந்துள்ளதாக இ.டி குற்றம்சாட்டியுள்ளது.
பண்டோரா ஆவணங்கள்: சோதனைகள், சம்மன்கள்: இ.டி-யின் பண்டோரா விசாரணை வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய உரிமையாளர்களைத் தொட்டுள்ள பண்டோரா பேப்பர்ஸ் என்பது 14 வெளிநாட்டு சேவை வழங்குநர்களிடமிருந்து 11.9 மில்லியன் ரகசிய ஆவணங்களைக் குறிக்கிறது. பெரும் பணக்காரர்கள் தங்கள் உலகளாவிய பணப்புழக்கங்களை நிர்வகிக்கப் பயன்படுத்திய 29,000 வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளது.
3. கௌதம் சிங்கானியா
பண்டோரா ஃபைல்: கௌதம் ஹரி சிங்கானியா, ரேமண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் 2008-ல் பி.வி.ஐ-ல் இரண்டு நிறுவனங்களை கையகப்படுத்தினார். ஒன்று தேராஸ் வேர்ல்டுவைட் கார்ப்பரேஷன், அங்கு அவர் பயனளிக்கும் உரிமையாளராக உள்ளார். கையகப்படுத்தும் நோக்கத்துடன் ஜூரிச்சில் உள்ள யு.பி.எஸ்-ல் கணக்கு வைத்திருப்பதாகக் காட்டப்பட்டது.” மற்றொன்று லிண்டன்வில்லே ஹொல்டிங்ஸ் லிமிடெட் (Lyndonville Holdings Limited) நிறுவனம் ஆகும். இதில் சிங்கானியாவும் அவரது தந்தை விஜய்பட் சிங்கானியாவும் பங்குதாரர்களாகக் காட்டப்படுகிறார்கள். இந்த நிறுவனம் 2016-ல் கலைக்கப்பட்டது.
தற்போதைய விசாரணை: ஒரு ஃபெமா (FEMA) விசாரணை தொடங்கப்பட்ட பிறகு, பி.வி.ஐ-க்கு எக்மான்ட் கோரிக்கை அனுப்பப்பட்டு பதில் பெறப்பட்டது; ரிசர்வ் வங்கிக்கும் கேள்விகள் அனுப்பப்பட்டன. சிங்கானியா குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் எதிராக கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என வருமான வரித்துறையிடம் கேட்கப்பட்டுள்ளது. கவுதம் சிங்கானியா, அவரது தந்தை விஜய்பத் சிங்கானியாவுக்கு குறைந்தது 3 சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இவரது தந்தை ஏப்ரல் 27, 2023-ல் தனது அறிக்கையை பதிவு செய்தார். அதில் அவர் தேராஸுடன் எந்த தொடர்பையும் மறுத்தார். இரண்டாவது சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜூன் 1, 20230-ல் கௌதம் சிங்கானியாவின் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ரேமண்டின் வாரிசு பயண விவரங்களும் குடியேற்றப் பணியகத்திடம் இருந்து கோரப்பட்டுள்ளன.
4. ஜான் மெக்மல்லும் மார்ஷல் ஷா (கிரண் மஜும்தார் ஷா-வின் கணவர்)
பண்டோரா ஃபைல்: ஜான் ஷா, இங்கிலாந்து குடிமகன் மற்றும் பயோகான் தலைவரான கிரண் மஜும்தார் ஷாவின் கணவர் மொரிஷியஸை தளமாகக் கொண்ட க்ளென்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 99% பங்குகளை வைத்துள்ளார். செட்லராக, க்ளென்டெக் நியூசிலாந்தில் டீன்ஸ்டோன் அறக்கட்டளையை 2015-ல் அமைத்தார். கிரண் ஷா, க்ளென்டெக் விவரங்கள் செபி (SEBI) மற்றும் ஆர்.பி.ஐ-க்கு (RBI) வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறினார். ஜான் ஷா 2022-ல் காலமானார்.
விசாரணையின் தற்போதைய நிலை: இ.டி ஃபெமா விதிகளின் கீழ் நடவடிக்கையைத் தொடங்கியது; செபி, வருமானவரித் துறை மற்றும் ஆர்.பி.ஐ ஆகியவற்றுக்கு விசாரணைக் கடிதங்களை வழங்கியுள்ளது. அதற்கு ஓரளவு பதில் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2022-ல், இ.டி கூடுதல் தகவல்களை தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளிடமிருந்து கோரியது. எக்மாண்ட் கோரிக்கைகள் நியூசிலாந்து மற்றும் மொரீஷியஸுக்கு அனுப்பப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருகிறது.
5. சச்சின் டெண்டுல்கர்
பண்டோரா ஃபைல்: டெண்டுல்கரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற பி.வி.ஐ நிறுவனத்தின் நன்மை பயக்கும் உரிமையாளர்களாக இருந்தனர். நிறுவனத்தைப் பற்றிய முதல் குறிப்பு 2007-ம் ஆண்டுக்கு முந்தையது. பனாமா ஆவணங்கள் வெளியிடப்பட்ட உடனேயே சாஸ் இன்டர்நேஷனல் 2016-ல் நிறுத்தப்பட்டது. நிறுவனத்தின் கலைக்கப்பட்ட போது, நிறுவனத்தின் பங்குகளை பங்குதாரர்களான டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் திரும்ப வாங்கினர். பண்டோரா பதிவுகள் டெண்டுல்கரும் ஒரு முன்னாள் எம்.பி என்பதால் குடும்பம் பி.இ.பி (அரசியல் ரீதியாக வெளிப்படும் நபர்) என பட்டியலிடப்பட்டுள்ளது. டெண்டுல்கரின் அலுவலக அதிகாரிகள் பி.வி.ஐ முதலீடுகளை சட்டபூர்வமானது என்று அழைத்தனர்.
விசாரணையின் தற்போதைய நிலை: ஃபெமாவை உள்ளே கொண்டு வந்து கிரிக்கெட் நட்சத்திரத்தின் வருமானவரி தாக்கல் (ஐ.டி.ஆர்) விவரங்களுக்கு வருமான வரித்துறைக்கு இ.டி தகவல் அனுப்பியது. டெண்டுல்கரின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவரது பட்டயக் கணக்காளரிடம் சாஸ் பற்றிய தகவல்களைக் கேட்டு உத்தரவுகள் அனுப்பப்பட்டன. பி.வி.ஐ-ன் எஃப்.ஐ.யு க்கு எக்மாண்ட் கோரிக்கை அனுப்பப்பட்டது. மேலும், விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
6. ஓம் பிரகாஷ் பாரதியா & குடும்பம்
பண்டோரா ஃபைல்: டெல்லியில் சீதாராம் பார்தியா அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வரும் பார்தியா குடும்பம் 2006-ல் கேமன் தீவுகளில் ஒரு அறக்கட்டளையை நிறுவியது. அது கார்மைக்கேல் இன்க் என்ற நிறுவனத்தை வாங்கியது. ஒரு கட்டத்தில், அது இரண்டு சுவிஸ் வங்கிக் கணக்குகள் மற்றும் $35.39 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்தது. ஓம் பிரகாஷ் பார்தியா கார்மைக்கேலின் ஆதாய உரிமையாளராக இருந்தார்; இந்த முதலீடுகள் அனைத்தும் வரிக்கு உட்பட்டவை என்று அவர் கூறினார்.
விசாரணையின் தற்போதைய நிலை: இ.டி, ஆர்.பி.ஐ மற்றும் எஃப்.ஐ.யு-ஐத் தொடர்பு கொண்டது, பிந்தைய தரவுகளின் அடிப்படையில், பார்தியா வம்ச உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் அளித்த பதில்களில் கருப்புப் பணச் சட்டத்தின் 59-வது பிரிவின் கீழ் (வெளியிடப்படாத வெளிநாட்டு சொத்துக்களை அறிவிப்பது தொடர்பான) அறிவிப்பு ரூ. 245 கோடி என்றும், ரூ.147 கோடி அபராதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
7. நீரா ராடியா
பண்டோரா ஃபைல்: ராடியா சுமார் ஒரு டஜன் வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்துக்கொண்டார். அவற்றில் 5 நிறுவனங்கள் அவரது டெல்லி முகவரியுடன் அவரை முதன்மை வாடிக்கையாளராகக் காட்டின. அவர் ஒரு தொடர்பு கொள்ள வேண்டாம வாடிக்கையாளர் என்பதைக் காட்டும் மின்னஞ்சல்களுடன், மிகப்பெரிய நிதி பரிவர்த்தனை (பி.வி.ஐ நிறுவனம் ஒன்றின் மூலம் துபாயில் $251,500 அமெரிக்க டாலர் வாட்ச் வாங்கியது உட்பட) பதிவுகள் இருந்தன. அப்போது ராடியா, இந்த நிறுவனங்களை அவர் அங்கீகரிக்கவில்லை என்றும், அவற்றில் பங்கு இல்லை என்றும் கூறியிருந்தார்.
விசாரணையின் தற்போதைய நிலை: ஃபெமாவை மேற்கோள் காட்டி, இ.டி வெளிநாட்டு நிறுவனங்களின் விவரங்களை வழங்குமாறு ராடியாவிடம் கேட்டு அவரது அறிக்கையை பதிவு செய்தது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்தத் சோதனைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட தரவுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, அவருக்கு புதிய சம்மன் அனுப்பப்பட்டது. ராடியாவின் சகோதரி கருணா மேனனின் வாக்குமூலத்தையும் இ.டி பதிவு செய்தது.
8. ஹரிஷ் சால்வ்
பண்டோரா ஃபைல்: லண்டனில் ஒரு சொத்தை சொந்தமாக்க சால்வ் 2015-ல் பி.வி.ஐ-ல் தி மார்சுல் நிறுவனத்தை வாங்கினார். அவர் நிறுவனத்தின் நன்மை பயக்கும் உரிமையாளர் (பி.ஓ) மற்றும் செயலாளராக பெயரிடப்பட்டார் மற்றும் பி.இ.பி ஆகக் அறியப்பட்டார். அப்போது சால்வே, சொத்தை வைத்திருப்பதற்காக மார்சூலில் பங்குகளை வாங்கியதாகவும், தான் ஒரு என்.ஆர்.ஐ என்பதால், வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
விசாரணையின் தற்போதைய நிலை: பனாமா ஆவணங்களில் ஹரிஷ் சால்வேயின் பெயர் இடம் பெற்றுள்ளதால், அவரிடம் ஏற்கனவே விசாரணை நடந்து வருவதாகவும், பண்டோரா ஆவணங்கள் உள்ளீடு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இ.டி பதிவு செய்தது. மார்சூலுக்காக, எஃப்.ஐ.யு - பி.வி.ஐ (FIU-BVI) உடன் எக்மாண்ட் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் அவரது வருமானம் குறித்த விவரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், விசாரணை நடந்து வருகிறது.
9. காஜ் சிங்
பண்டோரா ஃபைல்: ஜோத்பூரின் முன்னாள் மகாராஜாவும் எம்.பி.யுமான அட்லான்டே பெரென்னிட்டி இன்க் என்ற பி.வி.ஐ நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். இது 2018-ல் கலைக்கப்பட்டது, இது 2018-ம் ஆண்டில் வெளிநாட்டு சேவை வழங்குநரின் ஊழியர்களுக்கு உமைத் பவன் என தனது முகவரியைக் கொடுத்தது எப்படி என்று தெரியவில்லை. ஜோத்பூரில் உள்ள அரண்மனை. அப்போது கஜ் சிங்கின் பிரதிநிதி, வெளிநாட்டு நிறுவனத்தைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.
விசாரணையின் தற்போதைய நிலை: ஃபெமா விசாரணைகள் நடந்து வருகின்றன; இ.டி அவருக்கு சம்மன் அனுப்பியது, அவரது பிரதிநிதியின் அறிக்கை மே 2023-ல் பதிவு செய்யப்பட்டது. வருமான வரி அதிகாரிகள், ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் விசாரணை செய்யப்பட்டது. வார்ரே லிமிடெட், யுகே தொடர்பான எக்மாண்ட் கோரிக்கை - அவருடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.
10. கௌரவ் பர்மன்
பண்டோரா ஃபைல்: கௌரவ் பர்மன் பி.வி.ஐ நிறுவனமான பான்ட்ரீ இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு அதன் மொரிஷியன் துணை நிறுவனமான கோல்வே இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு $2 மில்லியன் அமெரிக்க டாலர் கடனாக கொடுத்தார். கோல்வே, ஐ.பி.எல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களான கே.பி.எச் ட்ரீம் கிரிக்கெட்டில் பங்குதாரராக இருந்தார்.
விசாரணையின் தற்போதைய நிலை: இ.டி மொரிஷியஸ் மற்றும் பி.வி.ஐ-க்கு எக்மாண்ட் கோரிக்கைகளை அனுப்பியது. கே.பி.எச் ட்ரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. வங்கிப் பதிவுகள் எந்த முத்தரப்பு ஒப்பந்தமும் இல்லாமல் மூன்றாம் தரப்பினருக்கு ரூ.4.67 கோடி செலுத்தியதைக் காட்டுகின்றன. கே.பி.எச்-ன் இயக்குனர்களில் ஒருவரான மோஹித் பர்மனின் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சாத்தியமான ஃபெமா மீறல்களுக்கான ஆய்வின் கீழ் மிகப்பெரிய அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் உள்ளன.
11. அரவிந்த் சிங் மேவார்
பண்டோரா ஃபைல்: அரவிந்த் சிங் மேவார் பி.வி.ஐ-ல் தூர கிழக்கு அறக்கட்டளையை நிறுவினார், அவரது உதய்பூர் அரண்மனையை அவரது வசிப்பிடமாக கொடுத்துள்ளார். அவர் குடியேறியவராகக் காட்டப்படுகிறார். லண்டனில் ஒரு சொத்தை வைத்திருப்பதற்காக முதன்மையாக அமைக்கப்பட்ட அறக்கட்டளையைச் சுற்றி ஒரு சிக்கலான கடல் அமைப்பு கட்டப்பட்டது. 2015-ம் ஆண்டில், சொத்து 1.94 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது.
விசாரணையின் தற்போதைய நிலை: மேவாரின் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட இந்திய வங்கிகளின் கிளைகளுக்கு கடிதங்களுடன் இ.டி ரிசர்வ் வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு விசாரணைகளை அனுப்பியது. முன்னாள் மகாராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவரது நிறுவனமான லேக் பேலஸ் ஹோட்டல்ஸ் மற்றும் மாடெல்ஸ் யு.கே லிமிட்டேட் (Lake Palace Hotels and Models UK Limited) நிறுவனத்துக்கு அவரது யு.கே (UK) வங்கியில் இருந்து நேரடியாக பணம் செலுத்தியதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
12. சமீர் தாப்பர்
பண்டோரா ஃபைல்: இந்திய ஜவுளி நிறுவனத்தால் புரோமோட்டர் அல்லாதவர் என அறிவிக்கப்பட்ட ஜே.சி.டி லிமிடெட் நிறுவனத்தின் வெளிநாட்டு பங்குதாரர் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான சமீர் தாபருடன் இணைக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 2011-ல் உள்ள பதிவுகள் மஸ்க் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (பி.வி.ஐ)-ன் அனைத்து 50,000 பங்குகளையும் வைத்திருப்பவர் தாபர் என்பதைக் காட்டுகிறது. அதே ஆண்டில், அவர் சான்ஹா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், மற்றொரு பி.வி.ஐ நிறுவனத்தை அதன் பலன்பெறும் உரிமையாளராக வாங்கியதாக பதிவுகள் காட்டுகின்றன. பண்டோரா பேப்பர்ஸில் உள்ள பதிவுகள் தாபரை மஸ்க் ஹோல்டிங்ஸின் ஒரே பங்குதாரராகப் பட்டியலிட்டாலும், ஜே.சி.டி-ன் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் புரொமோட்டர் அல்லாதவர் ஃபிரன்கேட்டினா டெவெலப்மெண்ட் இன்க் (Francatina Development Inc) நிறுவனத்தை அதன் இறுதி பலன் பெறும் உரிமையாளராக அடையாளப்படுத்துகின்றன.
விசாரணையின் தற்போதைய நிலை: ஃபெமா விசாரணையில், சமீர் தாப்பர் தனது வரிக் கணக்கில் வெளிநாட்டு சொத்துக்கள் எதையும் வெளியிடவில்லை என்று வருமானவரித் துறை அதிகாரிகள் இ.டி-க்கு அறிக்கை அளித்துள்ளனர். வங்கிகளுக்கு விசாரணைகள் அனுப்பப்பட்டன. ஏப்ரல் 2023-ல், முதலீட்டு விவரங்களைக் கேட்டு தாபருக்கு புதிய உத்தரவு அனுப்பப்பட்டது.
13. லலித் கோயல்
பண்டோரா ஃபைல்: ஐரியோ ரியல் எஸ்டேட் குழுமத்தின் இணை நிறுவனர் கோயல், பி.வி.ஐ-ல் பதிவு செய்யப்பட்ட நான்கு நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு வெளிநாட்டு நிறுவன கட்டமைப்பிற்கு $77 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்கள், முதலீடுகள் மற்றும் பங்குகளை மாற்றினார். இந்த நிறுவனங்கள் "முதலீட்டு வாகனங்களாக" அமைக்கப்பட்டன. இந்த குழு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதற்கு முன்பும், நியூயார்க்கை தளமாகக் கொண்ட 2 முதலீட்டு நிறுவனங்களால் முதலீட்டாளர்களின் பணத்தை சட்டவிரோதமாகப் பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணையின் தற்போதைய நிலை: கோயல் நவம்பர் 2021-ல் கைது செய்யப்பட்டார், பி.எம்.எல்.ஏ-ன் கீழ் சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அவரது வெளிநாட்டு சொத்துக்களை அடையாளம் காண உதவும் வகையில் எக்மாண்ட் கோரிக்கைகளும் அனுப்பப்பட்டன. அக்டோபர் 2022-ல், 1,317 கோடி மதிப்புள்ள ஐரியோ மற்றும் கோயலின் சொத்துக்கள் இ.டி ஆல் பறிமுதல் செய்யப்பட்டன.
14. மல்விந்தர் சிங்/ஷிவிந்தர் சிங்
பண்டோரா ஃபைல்: முன்னாள் ரான்பாக்ஸி புரொமோட்டர்களான ஷிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோர் 2009-ல் பி.வி.ஐ-ல் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களை நிறுவினர்: க்ளோன்பெர்க் ஹோல்டிங்ஸ் மற்றும் ஃபோர்தில் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ஆகியவை லண்டனில் தலா ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வைத்துள்ளன. ஷிவிந்தர் சிங் பார்க்லேஸ் வங்கியில் இருந்து 5.1 மில்லியன் பவுண்டுகள் கடன் வாங்குவதற்காக ஃபோர்திலின் சில சொத்துக்களை அடமானம் வைத்தார். இரண்டு சகோதரர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குதாரர்களாக இருந்தனர். சகோதரர்கள் 2019-ல் கைது செய்யப்பட்டனர் மற்றும் பணமோசடி மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.
விசாரணையின் தற்போதைய நிலை: பண்டோரா விசாரணைக்கு முன் இருவருக்கும் எதிராக பி.எம்.எல்.ஏ வழக்கு நடந்து கொண்டிருந்தது. மே 2022-ல் மல்விந்தர் சிங்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் அவரது வங்கிக் கணக்கு வருமானங்கள் வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஷிவிந்தர் சிங் மற்றும் அவரது மனைவி அதிதி சிங் பெயரில் உள்ள ஒரு சொத்து விற்கப்பட்டு, அதன் வருமானம் மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகருக்கு மாற்றப்பட்டது, அது இப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
15. சஞ்சய் சந்திரா/ப்ரீத்தி சந்திரா
பண்டோரா ஃபைல்: யுனிடெக் புரொமோட்டர் சஞ்சய் சந்திராவின் மனைவி ப்ரீத்தி சந்திரா, ஒரு வெளிநாட்டு குடும்ப அறக்கட்டளையை நிறுவி டொமினிகன் பாஸ்போர்ட்டைப் பெற்றார். இது 2015-ல் உருவாக்கப்பட்டது, ப்ரீத்தி சந்திராவை பாதுகாவலராகக் கொண்டு அமைக்கப்பட்ட குடும்ப அறக்கட்டளைக்கான சொத்துக்களை டிரைக்கர் இண்டர்நேஷனல் இன்க் (Trikar International Inc) (பி.வி.ஐ) வைத்திருக்க இருந்தது. பெல்மோரா லிமிடெட் (பி.வி.ஐ ) நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் முதலீடுகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு வங்கிக் கணக்கை வைத்திருக்க 2015-ல் சந்திரா குடும்ப அறக்கட்டளையில் பெயரிடப்பட்ட பயனாளியாக இணைக்கப்பட்டது.
விசாரணையின் தற்போதைய நிலை: புரோமோட்டர்களுக்கு எதிராக இ.டி-யிடம் ஒரு பி.எம்.எல்.ஏ வழக்கு உள்ளது. 2022-ம் ஆண்டில், 1,057 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்து, இணைப்பு உத்தரவை அமல்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு எம்.எல்.ஏ.டி (MLAT) (பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம்) கோரிக்கை, பணமோசடி செய்ததாகக் கூறப்படும் ஆய்வுக்கு உட்பட்ட அனைத்து சந்திராஸ் நிறுவனங்களின் தகவல்களுக்காக யு.ஏ.இ-க்கு (UAE) அனுப்பப்பட்டுள்ளது.
16. இக்பால் மிர்ச்சி & குடும்பம்
பண்டோரா அப்டேட்: நிழ்ல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நம்பகமான நண்பர் மிர்ச்சி 2013-ல் காலமானார். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் 17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் 2016 பனாமா பேப்பர்களிலும் மீண்டும் 2021 பண்டோரா பேப்பர்களிலும் கண்டுபிடிக்கப்பட்டனர். இக்பால் மிர்ச்சியின் முதல் மனைவி ஹஜ்ரா இக்பால் மேமன் மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் ஜுனைத் இக்பால் மேமன் மற்றும் ஆசிப் இக்பால் மேமன் ஆகியோர் செய்த முதலீடுகள் மற்றும் இடமாற்றங்களை பிந்தையது வெளிப்படுத்தியது. இக்பால் மிர்ச்சியின் இரண்டாவது மனைவி ஹீனா கௌசரின் சகோதரர் அக்பர் ஆசிஃப் மூலம் சொத்து முதலீடுகள் செய்யப்பட்டன.
விசாரணையின் தற்போதைய நிலை: பி.எம்.எல்.ஏ வழக்கு ஏற்கனவே செயலில் உள்ள நிலையில், பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்ட பிறகு பி.வி.ஐ-க்கு புதிய எக்மாண்ட் கோரிக்கை அனுப்பப்பட்டது. மிர்ச்சி மற்றும் அவரது சட்டப்பூர்வ வாரிசுகளின் சொத்துக்களை இணைப்பதற்கான மொத்த சொத்துக்கள் - நான்கு தனித்தனி ஆர்டர்கள் மூலம் - ரூ.799 கோடிக்கு மேல் மதிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்திற்கு எதிராக பல வழக்குப் புகார்கள் பதிவு செய்யப்பட்டன, மார்ச் 2021-ல், ஹஜ்ரா மேமன் மற்றும் அவரது மகன்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இக்பால் மிர்ச்சியின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், சட்டவிரோதமான முறையில் பணமோசடி செய்தல் மற்றும் சொத்துக்களைப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தியாவில் தேடப்பட்டு வருவதாகக் கூறி, அவர்களை நாடு கடத்துவதற்கான கோரிக்கை இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
17. கபில்/தீரஜ் வாதவான்
பண்டோரா ஃபைல்: திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (டிஹெச்எஃப்எல்) விளம்பரதாரர்கள் கபில் வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர் இந்திய வங்கிகளில் ரூ.88,000 கோடிக்கு மேல் மோசடி செய்ததற்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர், பெரும்பாலும் பி.வி.ஐ. பஹாமாஸ் முதன்மையான பி.வி.ஐ நிறுவனம் வி.&எம் ஏவியேஷன் ஆகும். இது 22.65 மில்லியன் டாலர்களுக்கு பாம்பார்டியர் சேலஞ்சர் விமானத்தை வாங்குவதற்கு கிரெடிட் சூயிஸிடம் இருந்து கட்டணம் (கடன்) பதிவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
விசாரணையின் தற்போதைய நிலை: ஏற்கனவே ஒரு பி.எம்.எல்.ஏ ஆய்வு, எக்மாண்ட் கோரிக்கைகள் பி.வி.ஐ, யு.ஏஇ, பஹாமஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, பதில்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன. பி.எம்.எல்.ஏ விசாரணை தொடங்கியதில் இருந்து, வாத்வான் சகோதரர்களின் ரூ.2,013.08 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் டி.எச்.எஃப்.எல் ஊக்குவிப்பாளர்களின் வெளிநாட்டு முதலீடுகள் அடங்கும்.
18. பாகுல் நாத்/ராஜீவ் சக்சேனா
பண்டோரா ஃபைல்: அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு எதிராக புதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ளன: காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தின் மகன் பாகுல் நாத் மற்றும் பட்டய கணக்காளர் ராஜீவ் சக்சேனா நிறுவனம், பிரிஸ்டைன் ரிவர் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பாக. ப்ரிஸ்டைன் நதியுடன் இணைக்கப்பட்ட அதே ஆலோசகர் மூலம் ஸ்பெக்டர் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற வெளிநாட்டு நிறுவனம் பாகுல் நாத்துக்கு திறக்கப்பட்டது. சக்சேனா 2014-ல் பி.வி.ஐ நிறுவனமான டானே ஹோல்டிங்ஸ் லிமிடேட் (Tanay Holdings Limited) உடன் இணைந்து 14 நிறுவனங்கள் அல்லது சொத்துக்களின் உரிமையுடன் ஒரு அறக்கட்டளையை நிறுவினார்.
விசாரணையின் தற்போதைய நிலை: பாகுல் நாத் மீது இ.டி நடவடிக்கை தொடங்கியது; ப்ரிஸ்டின் நதியின் கணக்கு பகுப்பாய்வு செய்யப்பட்டு நிதி பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. தனாய் ஹோல்டிங்ஸின் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது; பாகுல் நாத்தின் வழக்கில் ரோகேட்டரி கடிதங்கள் சுவிட்சர்லாந்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ராஜீவ் சக்சேனாவுக்கும் பிஎம்எல்ஏ வழக்கு நடந்து, 2.9 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் இணைக்கப்பட்டன.
ராஜீவ் சக்சேனா மோசர் பேர் வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது தனிப்பட்ட வில்லா உட்பட $49 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.