Arun Janardhanan
அதிமுக எடப்பாடி பழனிசாமியை அக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக விரைவாக அறிவித்துள்ளது. பொதுச் செயலாளர் சசிகலாவை வெளியேற்றிய பிறகு, தற்போது முதல்வராக உள்ள இ.பி.எஸ் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகப்படியான அதிகாரத்தை வைத்துள்ளார். இருப்பினும், அவருடைய தலைமையிலான அணிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே நடந்த பல வார கால மோதலுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. முன்னாள் முதல்வரான ஓ.பி.எஸ்-க்கு இப்போது கட்சியில் ஆதரவு குறைந்து வருகிறது.
ஓ.பி.எஸ்-ன் நீண்ட நாள் கோரிக்கையான, கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டதுடன் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வந்துள்ளது.
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது ஏன்?
இதற்கு பதில் ரொம்ப எளிமையாகச் சொல்லலாம். இப்போதைக்கு அதிமுகவின் சக்திவாய்ந்த தலைவர் இ.பி.எஸ் தான். அவர் கிட்டத்தட்ட அனைத்து அமைச்சரவை உறுபினர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆதரவை பெற்றுள்ளார்.
மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதா பதவி விலக வேண்டியிருந்தபோதும், இறுதியாக அவரது மரணத்திற்குப் பிறகு என ஓ.பி.எஸ் 3 முறை முதல்வர் பதவி வகித்துள்லார். கட்சியில், ஜெயலலிதா மற்றும் அவருடைய நெருக்கமான தோழி சசிகலா ஆகியோரிடம் அதிகாரம் குவிக்கப்பட்டது. ஓ.பி.எஸ் சசிகலாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் உண்மையான விசுவாசி என்ற பிம்பம் அவருக்கு கடந்த காலத்தில் முதல்வர் பதவியை பரிசளித்தது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, சசிகலாவால் இயக்கப்படும் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் கட்சியில் சசிகலாவுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தியதன் மூலம் அவர் அந்த நம்பிக்கையை உடைத்துவிட்டார். இருப்பினும், அவரது கிளர்ச்சி தோல்வியுற்றதால், நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, சசிகலாவின் மற்றொரு விசுவாசியான இ.பி.எஸ் முதல்வராக்கப்பட்டு ஓ.பி.எஸ் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஓ.பி.எஸ்-ஐப் போல இல்லாமல், 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் ஏற்றுக்கொண்ட பதவியைத் தக்கவைத்துக்கொள்வதில் இ.பி.எஸ் வெற்றி பெற்றார். இந்தச் செயல்பாட்டில், அவர் ஓ.பி.எஸ் உடன் ஒன்றிணைந்து பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது அண்ணன் மகன் டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதும், கட்சியில் அவருடைய அதிகாரத்தையும் இடத்தையும் உறுதிப்படுத்தினார். அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள், அவர் ஒருபோதும் செய்ய விரும்பாத செயல்களைச் செய்யும்படி பாஜக அவரை நிர்பந்திப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். அவர் சசிகலாவுகு எதிராக செயல்பட்டதோடு, இ.பி.எஸ் கட்சியில் ஓ.பி.எஸ்-ஸையும் ஓரங்கட்டினார். அதோடு, கட்சியில் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் நிர்வாகிகளின் ஆதரவையும் பெற்றார்.
இ.பி.எஸ்-க்கான இந்த அறிவிப்பின் முக்கியத்துவம்
முதல்வர் வேட்பாளராக இ.பி.எஸ்-ஸை அறிவிப்பது ஒரு வெளிப்படையான முடிவு. அவர் மீண்டும் முதல்வர் வேட்பாளராக ஆவார் என்பது குறித்து யாருக்கும் சந்தேகம் இல்லை. ஒரு மாதத்தில் சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் இது கட்சி மீதான அவரது பிடியை இறுக்குகிறது.
“சசிகலா திரும்பி வந்து கட்சி பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் பெற்றாலும், இபிஎஸ் தொடர்ந்து முதல்வர் வேட்பாளராக இருப்பார். ஆனால், சசிகலாவின் சாத்தியமான வருகை அவர் வழிநடத்தல் குழு மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் போன்ற பதவிகளை அவர் அகற்றுவார் என்பது கட்சி அரசியலமைப்பு அறியாதது. அத்தகைய சூழ்நிலையில், ஓ.பி.எஸ் ஒரு விசுவாசியாக தனது முந்தைய நிலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். அவரது ஆதரவு தளம் பலவீனமாக இருப்பதால் அவருக்கு பல விருப்பங்கள் இல்லை; அவர் 2017ம் ஆண்டு போல கிளர்ச்சி செய்யவோ அல்லது தார்மீக மேலதிக உரிமை கோரவோ முடியாது” என்று மூத்த அதிமுக அமைச்சர் ஒருவர் கூறினார்.
இந்த ஏற்பாட்டில் ஓ.பி.எஸ் ஏதாவது பலனடைந்துள்ளாரா?
கடந்த இரண்டு மாதங்களில் ஓ.பி.எஸ் உருவாக்கிய உட்கட்சி பூசல் புதன்கிழமை ஒரு வழிகாட்டுக் குழுவை அமைக்க கட்சியை கட்டாயப்படுத்தியது. இது ஆகஸ்ட் 2017 இல் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதி ஆகும். இ.பி.எஸ் முகாம் வழிகாட்டுதல் குழுவை அமைக்க 3 ஆண்டுகளாக தயக்கம் காட்டிய நிலையில், புதன்கிழமை புதிதாக அமைக்கப்பட்ட 11 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல் குழுவில் ஓ.பி.எஸ் உடைய ஆதரவாளர்கள் 5 பேர் இருப்பது ஓ.பி.எஸ்-ஸின் வெற்றியாகத் தெரிகிறது.
ஓ.பி.எஸ்-க்கு இது ஒரு வெற்றியாக இருக்கும். ஏனெனில், அவர் இப்போது 5 எம்.எல்.ஏ.க்களுடன் எஞ்சியிருக்கவில்லை. மேலும், வரவிருக்கும் தேர்தல் மற்றும் வேட்பாளர் தேர்வுகளை கையாள கட்சி தனித்தனி குழுக்களையும் அமைத்துள்ளதால், வழிநடத்தல் குழுவின் அதிகாரங்கள் தெளிவாக இல்லை என்று ஓ.பி.எஸ்-க்கு நெருக்கமான வட்டாரங்கள் ஒப்புக்கொள்கின்றன.
“ஓ.பி.எஸ்-ஸின் ஒற்றை கோரிக்கையின் அதிகாரங்களைப் பற்றி எந்த தெளிவும் இல்லாமல் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன? ஒன்று ஓ.பி.எஸ் தொடர்ந்து அதிக குறைகளை எழுப்புவதோடு கட்சியில் அமைதியின்மையைத் தூண்டும் அல்லது இரு தலைவர்களும் பொதுவில் கருத்து வேறுபாடுகளைக் காட்டாமல் தேர்தல் பிரச்சாரங்களில் கவனம் செலுத்துவார்கள். ஏனெனில், அது கட்சியை பலவீனப்படுத்தும்”என்று கடந்த காலங்களில் ஓ.பி.எஸ்-ஐ ஆதரித்த மூத்த அதிமுக தலைவர் ஒருவர் கூறினார்.