Ritika Chopra
பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், வீட்டில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது, தனிமைப்படுத்துதல் மையங்களில் உள்ளவர்கள் இந்த தேர்தலில், தபால் ஓட்டு மூலம், தங்களது ஜனநாயக கடமையை செலுத்த இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த முடிவிற்கு, எதிர்கட்சிகள் அதிருப்தியும், இந்திய அரசியலமைப்பிற்கு இது எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளன. தபால் ஓட்டு முறை மற்றும் அதனை சுற்றியுள்ள களேபரங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
தபால் ஓட்டு என்றால் என்ன?
எளதில் தொடர்பு கொள்ள முடியாத பகுதிகளில் உள்ளவர்கள், வாக்குச்சீட்டினை பெற்று, அதில் தங்கள் ஓட்டினை பதிவு செய்து, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, தங்களது வாக்குச்சீட்டினை தபால் முறையில் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வே, தபால் ஓட்டு ஆகும்.
யார் யார் இந்த முறையில் வாக்கு அளிக்கலாம்?
ராணுவம், கப்பற்படை, விமானப்படை, வெளிமாநிலங்களில் பணியாற்றிவரும் போலீசார், ஆயுதப்படையினர், வெளிநாடுகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோர் இந்த முறையில் தங்களது வாக்குரிமையை செலுத்தலாம். மேற்கூறியவர்கள் யாரும் தங்களது வாக்குரிமையை நேரில் செலுத்த முடியாது. தபால் ஓட்டு முறையிலேயே அவர்கள் தங்களது வாக்குரிமையை செலுத்த முடியும்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற சபாநாயகர், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த முறையில் விரும்பினால் வாக்கு அளிக்க அவர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், அவர்கள் அதற்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தருதல் வேண்டும்.
அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களால் தேர்தல் நாளன்று அவர்களது வாக்குரிமையை செலுத்த முடியாத சூழல் நிலவியது. இதற்காக மத்திய சட்டத்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து இதற்கு தீர்வுகாண முயற்சித்தது. இந்த துறையில் உள்ள மக்கள், தற்போது தபால் மூலம் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன், வடக்கு ரயில்வே ( பயணிகள் மற்றும் சரக்கு சேவை) பணியாளர்களை, ஆப்சென்ட் வாக்காளர்கள் என அறிவித்த மத்திய அரசு, அவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்க அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா தொற்று அறிகுறி கொண்டவர்கள், தபால் மூலம் வாக்கு அளிக்க கடந்தமாதம் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
தபால் ஓட்டுக்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன?
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு பரிசீலனை முடிந்த 24 மணிநேரத்திலோ அல்லது வாக்குச்சீட்டு பிரிண்ட் செய்யப்பட்டநிலையில், தேர்தல் அதிகாரி, சம்பந்தப்பட்ட நபருக்கு தபால் மூலம் தேர்தல் தேதிக்கு முன்பாக அனுப்பி வைப்பார். வாக்காளர், அதனை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்கு முன்பாக அதனை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆயுத படைவீரர்கள் தங்களது வாக்குகளை, அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள பதிவு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் பணியாற்றும் ஆயுதப்படை வீரர்கள், வெளிநாடுகளில் பணிகளில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வாக்குச்சீட்டுகளை தபாலிலோ அல்லது எலெக்ட்ரானிக் முறையிலோ அனுப்ப முடியும். மற்ற பிரிவினர், தங்களது தபால் ஓட்டுகளை, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தபால் முறையிலேயே அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தபால் மூலம் வாக்குச்சீட்டினை பெற்றவர்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு தங்களது வாக்கினை செலுத்த வேண்டும். பின் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள டிக்ளரேசன் படிவத்தை பூர்த்தி செய்து, அதனை சீலீடப்பட்ட கவரில் இணைத்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன் அனுப்பி வைத்திடல் வேண்டும்.
தபால் ஓட்டுகள் விவகாரம் தொடர்பாக, அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு ஏன் கடிதம் எழுதியுள்ளன?
தபால் ஓட்டுகள் விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் எப்போதும் எதிராக இருந்ததில்லை. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , திரிணமூல் காங்கிரஸ் , ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்கள் உள்ளிட்டோருக்கு தபால் ஓட்டு உரிமை அளித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குத்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்கள் உள்ளிட்டோருக்கு தபால் ஓட்டு உரிமை அளித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான்.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, இதன்மூலம், தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்க வாய்ப்பில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய நடைமுறையின் மூலம், அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகளவில் முறைகேடுகளில் ஈடுபட இது வாய்ப்பாக அமைந்துவிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு மூலம் வாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு அளிப்பதன் கண்ணியம், ரகசியம் காக்கப்படுவதிலிருந்து விதிமீறப்படும். ஏனெனில், இவ்வயதிற்குட்பட்டவர்கள் பெரும்பாலும் கல்வியறிவு இல்லாதவர்களாகவே இருப்பர். அவர்கள் சாதாரண நிலையிலேயே வாக்கு அளிக்க பலரது உதவிகள் தேவைப்படும். இந்நிலையில், இந்த புதிய நடைமுறையால், அவர்கள் விரும்பும் வாக்காளர்களுக்கு வாக்கு அளிக்க முடியாத நிலை ஏற்படும். அதிகாரத்தில் உள்ள மத்திய, மாநில அரசுகள், இந்த நடைமுறையின் மூலம், முறைகேடுகளில் ஈடுபட்டு தங்களுக்கு சாதகமாக வாக்காளர்களை வாக்கு அளிக்கும் நிலை உருவாக்கப்படும் அபாயம் உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையால், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும். இது இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.