ஒன்றா..இரண்டா…: காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் சொல்ல!!!

ரபேல், வேலையில்லா திண்டாட்டத்தை சிறந்தமுறையில் கையாண்டு அதனை வாக்குகளாகவும் மற்றும் வெற்றியாகவும் மாற்ற தெரியாததால், படுதோல்வி பரிசாக கிடைத்துள்ளது.

loksabha election results2019, congress, rahul gandhi, modi, PM, election, results, priyanka gandhi, லோக்சபா தேர்தல், மக்களவை தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தி, தோல்வி
loksabha election results2019, congress, rahul gandhi, modi, PM, election, results, priyanka gandhi, லோக்சபா தேர்தல், மக்களவை தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தி, தோல்வி

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி, ராகுல் காந்தியின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது எனில் அது மறுப்பதற்கில்லை. ரபேல், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மக்களின் பிரச்னைகளை சிறந்தமுறையில் கையாண்டு அதனை வாக்குகளாகவும் மற்றும் வெற்றியாகவும் மாற்ற தெரியாததால், காங்கிரஸ் கட்சிக்கு இந்த படுதோல்வி பரிசாக கிடைத்துள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராக, சரியான நிர்வாகத்திறன் கொண்ட போட்டியாளரை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இனங்காணும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார்.
ராகுலுக்கு மாற்றாக மற்றொருவர் அறிவிக்கப்படாதது, பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக அமைந்தது. காங்கிரஸ் கட்சிக்கோ, கையை கட்டிக்கொண்டு தோல்வி எனும் பிடியில் சிக்கிய கதையாகிவிட்டது.

பிரம்மாஸ்திரமான பிரியங்கா : இந்த தேர்தலின் மூலம் தெரியவந்துள்ள மற்றொரு உண்மை யாதெனில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, மக்களிடையே நன்கு பழகி, வாக்குகள் பெறும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காகவே, அவர் பயன்படுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலின், வாக்குகள் அள்ளும் முயற்சியில், பிரியங்கா காந்தியை பெரிய பிரம்மாஸ்திரமாகவே பயன்படுத்திக்கொண்டது.

பிரியங்கா காந்தி, மக்களுடன் நன்கு பழகினார். அனைவரும் எளிதாக சந்திக்கும்படியாக திகழ்ந்தார். தந்தை ராஜிவ் காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தியின் அழகும், அறிவும் பிரியங்கா காந்தியிடம் அதிகமாகவே இருந்தது. ஆனால், இது 1970 மற்றும் 80ம் காலகட்டம் இல்லையே….நாம் இப்போது 2019ல் அல்லவா இருக்கிறோம்!!!

எங்களுக்கு இந்த தோல்வி மிகப்பெரிய ஆச்சரியத்தை தரவில்லை . காங்கிரஸ் கட்சி இத்தோல்வியை கண்டு சுதாரித்துக்கொண்டு , தவறுகளை திருத்திக்கொண்டால், எதிர்காலத்திலாவது சிறந்த கட்சியாக இருக்கமுடியும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Election results reveals rahul gandhi and congress partys future

Next Story
வரலாறு படைக்கும் பாஜக… வெற்றியை நோக்கி நகரும் மோடியின் அணி!General Election 2019 Results BJP Historical Victory, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், நரேந்திர மோடி,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com