Advertisment

தேர்தல் பத்திரங்கள்; மேட்சிங் குறீயிடு மிஸ்ஸிங்… பரிவர்த்தனைகளை தொடர்புபடுத்த முடியும் என மனுதாரர்கள் நம்பிக்கை

தேர்தல் பத்திரங்களின் தனித்துவ குறியீட்டை நன்கொடையாளர் மற்றும் அரசியல் கட்சியுடன் பொருத்துவது கடினம் என எஸ்.பி.ஐ தகவல்; விவரங்களை வெளியிட்டால் மக்கள் பொருத்திக் கொள்வார்கள் என மனுதாரர்கள் வாதம்

author-image
WebDesk
New Update
money exp

தேர்தல் பத்திரங்களின் தனித்துவ குறியீட்டை நன்கொடையாளர் மற்றும் அரசியல் கட்சியுடன் பொருத்துவது கடினம் என எஸ்.பி.ஐ தகவல்; விவரங்களை வெளியிட்டால் மக்கள் பொருத்திக் கொள்வார்கள் என மனுதாரர்கள் வாதம்

Listen to this article
00:00 / 00:00

Damini Nath , Ritu Sarin

Advertisment

இந்தியத் தேர்தல் ஆணையம், பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளைத் தொகுத்து மார்ச் 15 அன்று வெளியிடும் போது, ​​ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை வழங்கப்பட்ட பத்திரங்கள் பற்றிய விவரங்கள் இரண்டு தனித்தனி பட்டியல்களில் பொதுக் களத்தில் கிடைக்கும். ஒரு பட்டியலில் பத்திரங்கள் வாங்கிய தேதி, வாங்குபவரின் பெயர் மற்றும் ஒவ்வொரு பத்திரத்தின் மதிப்பும் இருக்கும்; மற்றொன்று அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் ஒவ்வொரு பத்திரத்தின் விவரங்கள் அடங்கிய, பணமாக்கப்படும் தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்பையும் வழங்கும்.

ஆங்கிலத்தில் படிக்க: Electoral bonds: ‘Matching’ code may be missing, but petitioners hope for ‘quid pro quo’ trends

குறிப்பிட்ட ஒளியின் கீழ் மட்டுமே தெரியும், ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும் அச்சிடப்பட்ட தனித்துவமான எண்ணெழுத்து குறியீடு, பொதுவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை. இது, கணினியில் பதிவு செய்யப்படவில்லை என எஸ்.பி.ஐ கூறுகிறது. 2017 ஆம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டம் உருவாக்கப்பட்ட போது பொருளாதார விவகாரத்துறை செயலாளராக இருந்த முன்னாள் நிதி செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனிப்பட்ட குறியீடு பாதுகாப்பு அம்சம் என்றும், விற்பனை செய்யும் நேரத்திலோ அல்லது அரசியல் கட்சியால் டெபாசிட் செய்யும் நேரத்திலோ பதிவு செய்யப்படாது என்றும் தெரிவித்தார். இது இல்லாமல், எந்தக் கட்சிக்கு யார் நன்கொடை கொடுத்தது என்பதை பொருத்துவது சாத்தியமில்லை, என்றும் அவர் கூறினார்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை வாதாடும் மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பரிவர்த்தனைகளை நிறுவ போதுமான ஆதாரங்கள் தரவுத்தொகுப்பில் இருக்கும் என்று நம்புகின்றனர். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தை (ADR) பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், தரவுகளின் (நன்கொடையாளர் விவரங்கள் மற்றும் வாங்குபவர் விவரங்கள்) இரண்டு பக்கத்திலும் எஸ்.பி.ஐ (SBI) வங்கியால் ஒதுக்கப்பட்ட தனித்துவமான எண் பொதுவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

யார் யாருக்கு நிதியளிக்கிறார்கள் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த கோரிக்கையின் முழு நோக்கமாகும். எஸ்.பி.ஐ இரண்டு தனித்தனி எண்களைக் கொண்டுள்ளது, மேலும் அவை நன்கொடையாளர் மற்றும் வாங்குபவர் தரவுத் தாள்களுடன் கொடுக்க வேண்டும். இல்லையெனில் எஸ்.பி.ஐ.,க்கு எதிராக மீண்டும் அவமதிப்பு மனு தாக்கல் செய்வோம்என்று பிரசாந்த் பூஷன் கூறினார். "பொருத்துதல் பயிற்சி செய்யவோ" அல்லது "வாங்குபவர் மற்றும் அரசியல் கட்சியுடன் தொடர்புபடுத்தவோ" எஸ்.பி.ஐ.,க்கு அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது, தகவல்கள் வெளியிட்டப் பின்னர் பின்னர் இதை எளிதாக மற்றவர்கள் செய்யலாம் என்பது அவரது விளக்கம்.

தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மைக்காக பிரச்சாரம் செய்து வரும் ADR அமைப்பின் நிறுவன உறுப்பினர் மற்றும் அறங்காவலர் ஜக்தீப் சோக்கர், இது மிகவும் கவனமாக இருந்தது, ஆனால் இது "வெளிப்படையான பரிவர்த்தனைகளை" நிறுவ போதுமானதாக இருக்கும் என்று கூறினார்.

வெளியிடப்படும் தகவல்கள் என்ன என்பதைப் பொறுத்து, எஸ்.பி.ஐ தரவுகளில் தடயவியல் ஆய்வு நடத்துவதற்கு அவர்கள் தயாராகி வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். "நாங்கள் மூடிமறைக்கப்பட்ட ஆதாரத்தை எதிர்பார்க்கவில்லை ஆனால் ஆம், நிதியில் பரந்த போக்குகள் வெளிப்படும். தரவுகளில் பெரிய தடைகள் மற்றும் சாலைத் தடைகள் எதுவும் இல்லை அல்லது அதில் உருவாக்கப்படாமல் இருந்தால் ஓரளவு பொருத்தம் சாத்தியமாகும் என்று நான் நம்புகிறேன். அப்படியானால், நமக்கு கிடைக்கக்கூடிய அரசியலமைப்பு நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்,” என்று ஜக்தீப் சோக்கர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, ஒரு நன்கொடையாளரால் தேர்தல் பத்திரத்தை வாங்கிய தேதி கிடைத்தவுடன் (15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக்க வேண்டும் என்பதால்) ஒரு அரசியல் கட்சியால் பணமாக்கப்படும் தேதியுடன், "பல இணை உறவுகளை ஏற்படுத்த முடியும்". உதாரணமாக, தேர்தல் பத்திரங்கள் வாங்கப்படுவதற்கு முன்னர், விசாரணை மற்றும் அமலாக்க முகமைகள் மூலம் அரசாங்கக் கொள்கை மற்றும் நன்கொடைகள் அல்லது நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புகளைப் பெறலாம் என்று ஜக்தீப் சோக்கர் கூறினார்.

ஏப்ரல் 12, 2019க்கு முன் விற்கப்பட்டு பணமாக்கப்பட்ட பத்திரங்களின் விவரங்கள், 2019 ஆம் ஆண்டு இடைக்கால உத்தரவின்படி, உச்ச நீதிமன்றத்திற்கு சீலிடப்பட்ட கவரில் கொடுக்கப்பட்டன. திங்களன்று, உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் முந்தைய தரவுகளையும் பொதுவில் வைக்குமாறு கேட்டுக் கொண்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் பத்திரங்களைப் பெறுவது பற்றிய தகவல்கள், தேர்தல் ஆணையத்திடம் சீல் வைக்கப்பட்ட பெட்டியிலும், பின்னர் உச்ச நீதிமன்றப் பதிவேட்டில் வைக்கப்பட்டும், திங்கள்கிழமை நீதிமன்றத்தில் திறக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டது.

மனுதாரர்கள் அதிகமாகப் பயன்படுத்திய தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுப் பெற்ற சமூக ஆர்வலர் கமாண்டர் லோகேஷ் பத்ரா (ஓய்வு) கூறுகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வழங்கிய ரசீதுகளை வெளியிட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் தந்திரோபாய ரீதியாக சரியானநடவடிக்கையாகும்.

அரசியல் கட்சிகள் சமர்ப்பித்தவை மற்றும் எஸ்.பி.ஐ என்ன கொடுக்கிறது என்பதை எளிதாகப் பொருத்த முடியும். முரண்பாடுகள் இருக்கக்கூடாது. இந்தத் தரவுகளும் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதால் அவர்களும் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று எஸ்.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது,” என்று லோகேஷ் பத்ரா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Bank Electoral Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment