Electronics maker Foxconn electric vehicles plan : தைவான் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஃபாக்ஸ்கானின் வாடிக்கையாளர்களாக ஆப்பிள் மற்றும் சியோமி உள்ளது. இந்நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரானிக் கார்கள் உற்பத்தி திட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், உலக அளவில் தங்களின் திறமையை நிரூபிக்கும் வகையில் ஃபாக்ஸ்கான் மூன்று வெள்ளை-லேபிள் எலெக்ட்ரிக் கார்களை திங்கள் அன்று அறிமுகம் செய்துள்ளது.
ஃபாக்ஸ்கானின் அறிவிப்பு
உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரானிக்ஸ் ஒப்பந்த நிறுவனமான ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமம் அக்டோபர் 18ம் தேதி அன்று தங்களின் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்தனர்.
Advertisment
Advertisement
மூன்று வாகனங்களில் இந்த அறிமுகம் உலக அளவில் உள்ள ஒரிஜினல் எக்யூப்மெண்ட் மெனுஃபேக்ச்சர்ஸ் (original equipment manufacturers (OEMs)) நிறுவனங்களை, தங்களின் உற்பத்தி திறன் குறித்து அறிந்து கொள்ள விடுத்த அழைப்பு போன்றே உள்ளது.
ஃபாக்ஸ்கான் வெளியிட்ட இந்த செடான் மற்றும் எஸ்.யூ.வி. வகை கார்களை தங்களின் சொந்த பிராண்டின் கீழ் விற்பனை செய்வதற்கு பதிலாக தங்களின் வாடிக்கையாளர்களுக்கு, வாகனப் பிரிவில் உருவாக்கப்படும்.
வாகன உற்பத்தி திட்டங்கள்
தைவானின் யோலோன் மோட்டர்ஸ் தான், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் தங்களின் முதல் வாடிக்கையாளராக இருக்கும் என்றும் ஃபாக்ஸ்கான் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் ஃபாக்ஸ்கானின் வாகன உற்பத்தியில் நுழையும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
கடந்த மாதம், இந்த நிறுவனம் ஒஹையாவில் உள்ள ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலைக்காக 230 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை லார்ட்ஸ்டவுன் மோட்டர்ஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்டது. இது ஆட்டோமொபைல் அசெம்பிளி திறன், உபகரணங்கள் மற்றும் திறமை ஆகிய பகுதிகளில் ஒரு பூஸ்டர் ஷாட் கொடுத்தது. இந்த ஆலை முன்பு ஜெனரல் மோட்டார்ஸால் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, தாய்லாந்தில் மற்றொரு உற்பத்தி நிலையத்தையும் தைவானில் ஒரு சிப்மேக்கிங் ஆலையையும் கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது ஃபாக்ஸ்கான். ஏற்கனவே அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிஸ்கர் மற்றும் சீனாவின் ஜீலி உள்ளிட்ட ஆட்டோ வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டணி நிறுவனங்களுக்கு தேவையான சேவையை வழங்குவதை நோக்கமாக இது கொண்டுள்ளது.
அறிவிப்பு வெளியான நேரம்
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மிகப்பெரிய வாடிக்கையாளரான, ஐபோன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள், ப்ரோஜெக்ட் டைட்டன் என்று பெயரிட்ட முழுமையான தானியங்கி வாகன திட்டம் ஒன்றை ரகசியமாக நிறைவேற்றி வருகிறது.
ஆப்பிள் இன்னும் இந்த திட்டத்தை முறையாக அறிவிக்கவில்லை அல்லது உற்பத்தி கூட்டாளரை இன்னும் முழுமையாக முடிவு செய்யவில்லை. தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் நிறுவனம் தானியங்கி தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலாக, சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி கார்ப்பரேசனின் தலைவர் லேய் ஜுன் செவ்வாய்கிழமை அன்று, 2024ம் ஆண்டின் முதல் பகுதியில் நிறுவனம், தனது சொந்த கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் என்று கூறியுள்ளது. மார்ச் மாதத்தில், Xiaomi ஒரு புதிய மின்சார கார் பிரிவில் அடுத்த 10 ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதியளித்தது.
எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்திக்குள் கால்பதிக்கின்றோம் என்று ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அறிவித்திருந்தாலும் கார் முழுமையாக சுயதீனமாக உருவாக்கப்படுமா அல்லது மற்ற நிறுவனங்களுடன் கூட்டாக உருவாக்குமா என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil