Advertisment

ட்விட்டர் நிறுவனத்தில் இணைந்த எலான் மஸ்க்; என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

எலான் மஸ்க் வாங்கிய கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9.2 சதவீத பங்குகள், அவை ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக ஆக்கியுள்ளது. இது வான்கார்ட் குழுமத்தின் 8.8 சதவீத பங்குகளை விடவும், 8.4 சதவீத பங்குகளை வைத்துள்ள மோர்கன் ஸ்டான்லியை விடவும், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி 2.2 சதவீத பங்குகளையும் விட அதிகமாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Elon Musk joins twitter board, Elon Musk joins Twitter, Elon Musk purchase 9 2 percent shares, Tesla, SpaceX, எலான் மஸ்க், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் இணைந்தார், ட்விட்டர் நிறுவனத்தில் இணைந்த எலான் மஸ்க்; என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம், Elon Musk joins Twitter, Twitter, Social media

எலான் மஸ்க் வாங்கிய கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9.2 சதவீத பங்குகள், அவை ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக ஆக்கியுள்ளது. இது வான்கார்ட் குழுமத்தின் 8.8 சதவீத பங்குகளை விடவும், 8.4 சதவீத பங்குகளை வைத்துள்ள மோர்கன் ஸ்டான்லியை விடவும், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி 2.2 சதவீத பங்குகளையும் விட அதிகமாக உள்ளது.

Advertisment

ட்விட்டரைப் பொறுத்தவரை, டெஸ்லா இணை நிறுவனர் ட்விட்டர் பங்குகளை வாங்குவது டிசம்பர் 2021 நிலவரப்படி அதன் ஆண்டு வருமானம் 5 பில்லியன் டாலராக இருந்தது. 2023 ஆம் ஆண்டுக்குள் 7.5 மில்லியன் டாலர் வருவாயை எட்ட இலக்கு வைத்துள்ளது. ட்விட்டரில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியதாக அறிவித்த ஒரு நாள் கழித்து, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா இணை நிறுவனர் எலான் மஸ்க் செவ்வாய்க்கிழமை ட்விட்டர் நிறுவனத்தின் குழுவில் நியமிக்கப்பட்டார்.

ஒரு புதிய சமூக ஊடக தளத்தை உருவாக்குவது குறித்து எலான் மஸ்க் தீவிரமாக சிந்தித்து வருவதாக கூறிய சில நாட்களுக்குப் பிறகுதான் இந்த பங்குகள் கொள்முதல் செய்யப்பட்டது வெளி வந்துள்ளது.

ட்விட்டர் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்; என்ன காரணம்?

9.2 சதவீத பங்குகள் என்பது கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் மதிப்புடையது. இது எலான் மஸ்க்கை நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக ஆக்குகிறது. வான்கார்ட் குழுமத்தின் 8.8 சதவீத பங்குகளை விடவும், மார்கன் ஸ்டான்லி வைத்திருக்கும் 8.4 சதவீத பங்குகளை விடவும் ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சியின் 2.2 சதவீத பங்குகளை விடவும் இது அதிகமாக உள்ளது.

பங்கு மற்றும் போர்டு இருக்கை ஆகியவை மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் மாற்றங்கள் செய்ய மற்றும் மாற்றங்களை முன்மொழிய எலான் மஸ்க்கிற்கு அதிக சுதந்திரத்தை அளிக்கும். எடுத்துக்காட்டாக, மார்ச் 25-ம் தேதி அவர் ஏற்கனவே பங்குகளை வாங்கிய கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு, எலான் மஸ்க் முதலில் ஒரு கருத்துக் கணிப்பை ட்வீட் செய்தார். ட்விட்டர் சுதந்திரமான பேச்சுக் கொள்கைகளை ட்விட்டர் கடுமையாகக் கடைப்பிடிக்கிறதா என்று கேட்டார். ஜனநாயகம் செயல்படுவதற்கு அவசியம் என்று அவர் கூறினார்.

வாக்கெடுப்பு முடிவுகள் முக்கியமானதாக இருக்கும் என்பதால், மக்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும் என்று அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.

70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள், ட்விட்டர் பேச்சு சுதந்திரக் கொள்கைகளை கடுமையாகச் செயல்படுத்துகிறது என்று நாங்கள் நம்பவில்லை என்று கூறிய பிறகு, மார்ச் 26-ம் தேதி எலான் மஸ்க், மீண்டும் ட்விட்டரில் தீர்வு கோரி ஒரு ட்வீட்டை வெளியிட்டார். பொதுத் தளம் சுதந்திரமான பேச்சுக் கொள்கைகளை கடைப்பிடிக்க தவறிவிட்டது, இது ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தியுள்ளது ந்று பதிவிட்டார்.

அடுத்த ட்வீட்டில், புதிய தளம் தேவையா என்று தன்னைப் பின்தொடர்பவர்களிடம் கேட்டார். செவ்வாய்க்கிழமை மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் எடிட் பட்டன் வேண்டுமா என்று எலான் மஸ்க் கேட்டார்.

ட்விட்டரின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், வாக்கெடுப்பின் விளைவுகள் முக்கியமானதாக இருக்கும் என்பதால் கவனமாக வாக்களிக்க வேண்டும் என்ற ட்வீட்டிற்கு பதிலளித்தார். அந்த நாளின் பிற்பகுதியில், அகர்வால் ட்விட்டர் குழுவில் எலான் மஸ்க்கை நியமிப்பதாக அறிவித்தார்.

ட்விட்டருக்கு என்ன பயன்?

ட்விட்டரைப் பொறுத்தவரை, பங்குகளை வாங்குவது டிசம்பர் 2021 நிலவரப்படி அதன் ஆண்டு வருமானம் 5 பில்லியன் டாலராக இருந்தது. மேலும், 2023-ம் ஆண்டுக்குள் 7.5 மில்லியன் வருவாயை எட்ட இலக்கு வைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் முறையாகக் குழுவில் நியமிக்கப்பட்டார். எலான் மஸ்க் மிகப்பெரிய பங்குதாரர். இது மைக்ரோ பிளாக்கிங் தளத்திற்கு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிற தளங்களுடன் போட்டியிட அதிக நிதி வசதியை அளிக்கும்.

ட்விட்டர் ஆடியோ ட்வீட்கள் மற்றும் ஸ்பேஸ் மீட்டிங் போன்ற புதிய தயாரிப்புகளுடன் விரிவடைந்துள்ளது. பங்குகளை வாங்கும் நிதியானது தளத்தை விரிவுபடுத்தவும் இந்த சேவைகளின் தரத்தை மேலும் மேம்படுத்தவும் உதவும்.

ட்விட்டர் பங்குகளை வாங்குவது என்பது, ட்வீட்கள் மற்றும் இடது-சார்ந்த சித்தாந்தங்களைக் கொண்ட உள்ளடக்கத்திற்கு சார்புடையது, சுதந்திரமான பேச்சை நசுக்குகிறது என்று பயனர்களாலும் அரசாங்கங்களாலும் விமர்சிக்கப்பட்ட தளத்திற்கு செல்வாக்கை உயர்த்துவதைக் குறிக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Twitter Elon Musk Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment