Advertisment

பிரேசிலில் 'எக்ஸ்' தள செயல்பாடுகள் நிறுத்தம்: எலான் மஸ்க் அறிவிப்பின் பின்னணி என்ன?

சில கணக்குகளை தணிக்கை செய்ய நிறுவனம் மறுத்ததால், பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் எங்கள் சட்டப் பிரதிநிதியை கைது செய்யப் போவதாக மிரட்டியதாக எக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
X Brazil

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான எக்ஸ் பிரேசிலில் தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துவதாக கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அறிவித்தது. 

Advertisment

பிரேசில் நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ், எக்ஸ் நிறுவனம் தணிக்கை உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்றால், அதன் சட்டப் பிரதிநியை கைது செய்யப் போவதாக மிரட்டியதாக 'எக்ஸ்' தளம் கூறியுள்ளது.

இதே நீதிபதி முன்பு பிரேசிலில் போலிச் செய்திகளைப் பரப்புவது தொடர்பான விசாரணையில் எலான் மஸ்க் நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றம் சாட்டினார்.. இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிரேசிலின் அரசியலமைப்பிற்கும் அதன் மக்களுக்கும் நீதிபதி துரோகம் செய்ததாக மஸ்க் குற்றம் சாட்டினார் மற்றும் அவரை பதவி நீக்கம் செய்ய ஒரு அழைப்பையும் விடுத்தார். என்ன நடந்தது என்று பார்ப்போம். 

பிரேசிலில்  'எக்ஸ்' தளம் செயல்பாடுகள் நிறுத்தம் ஏன்? 

குளோபல் அரசு விவகாரக் கணக்கு அதன் பதிவில்,  ஒரு சட்ட ஆவணத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டது, இது நீதிபதியின் "ரகசிய உத்தரவு" என்று கூறுகிறது. 

அதில் தினசரி 20,000 ரைஸ் ($3,653) அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது, மேலும் மொரேஸின் உத்தரவுகளுக்கு எக்ஸ் தளம் முழுமையாக இணங்கவில்லை என்றால் 'எக்ஸ்' தளம் பிரதிநிதி ரேச்சல் நோவா கான்சிகாவோவுக்கு எதிராக கைது ஆணை விதிக்கப்படும் என்று கூறியது.

"உச்சநீதிமன்றத்தில் எங்களின் பல முறையீடுகள் விசாரணைக்கு வரவில்லை... மேலும் எங்கள் தளத்தில் உள்ளடக்கம் தடுக்கப்பட்டுள்ளதா என்பதில் எங்கள் பிரேசிலிய ஊழியர்களுக்கு எந்தப் பொறுப்போ அல்லது கட்டுப்பாட்டோ இல்லை என்றாலும், சட்டத்தை மதிக்காமல் எங்கள்  ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் மோரேஸ் செய்துள்ளார்" என்று கூறியது.

உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

பிரேசிலின் உச்ச நீதிமன்றம் 'எக்ஸ்' தளம் மீதான உத்தரவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. இருப்பினும், இது 'எக்ஸ்' தளம் மீதான குற்றச்சாட்டு இது முதல் முறை அல்ல.

பொய்யான தகவல்கள், போலிச் செய்திகள் மற்றும் ஆன்லைனனில் தவறான தகவல்கள் பரவுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் போன்ற ஊடகங்கள் மூலம் அரசியலில் அவர்களின் தாக்கம் பிரேசிலில் பல ஆண்டுகளாக கவலையாக உள்ளது. இது தொடர்பாக நீதிபதி டி மோரேஸ் சில 'எக்ஸ்' தள கணக்குகளை முடக்க உத்தரவிட்டார்.

'எக்ஸ்' தளம் பதில் என்ன?

"பிரேசிலில் உள்ள சில பிரபலமான கணக்குகளை"  முடக்க நீதிமன்றம் கட்டாயப்படுத்தியதாகவும் அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் 'எக்ஸ்' தள அரசாங்க விவகார கணக்கு ஏப்ரல் 7 அன்று கூறியது.

அதே நாளில் உத்தரவை ஏற்கமாட்டோம் என்று மஸ்க் தனது நோக்கத்தை தெளிவுபடுத்தினார். அவர் ஒரு பதிவில், “இந்த நீதிபதி துணிச்சலுடன் மீண்டும் மீண்டும் பிரேசிலின் அரசியலமைப்பிற்கும் மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார். அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவமானம் @அலெக்ஸாண்ட்ரே என்று கூறினார். 

ஆங்கிலத்தில் படிக்க:    Why Elon Musk’ X announced it will shut down operations in Brazil

மஸ்க் ஏன் உத்தரவை ஏற்க மறுத்தார்?

சுதந்திரமான பேச்சு வேண்டும் என்று மஸ்க் கூறினார். அரசாங்கங்கள் கணக்குகளைத் தடுப்பது மக்களின் உரிமைகளை மீறுவதாகக் கூறினார். ஆனால் ட்விட்டரைப் போலவே எக்ஸ் சில அரசாங்க கோரிக்கைகளுக்கு இணங்கியது.

ஜனவரியில் பல ஊடகவியலாளர்களின் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டபோது மஸ்க் தனது தளத்தில் விமர்சகர்களை அமைதிப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்த விவரங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று பலர் கூறினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment