முதலாளிகள் கோவிட்-19 தடுப்பூசியை கட்டாயமாக்க முடியுமா?

விதிகள் நாட்டுக்கு நாடு மாறுபடக் கூடும். ஆனால், அமெரிக்க சம வேலை வாய்ப்பு ஆணையம் காய்ச்சல் மற்றும் பிற தடுப்பூசிகளை கட்டாயமாக்க நிறுவனங்களை அனுமதித்துள்ளது. மேலும், அவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசிகள் தேவைப்படலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

employers make COVID-19 vaccination mandatory, COVID-19 vaccination mandatory, employees, covid 19 vaccin3, முதலாளிகள் கோவிட்-19 தடுப்பூசியை கட்டாயமாக்க முடியுமா, கொரோனா தடுப்பூசி, கோவிட் 19, COVID-19 vaccine, covid 19 vaccine in india

தடுப்பூசி விதிகள் நாடு வாரியாக மாறுபடும். ஆனால், அமெரிக்காவின் சம வேலை வாய்ப்பு ஆணையம் காய்ச்சல் மற்றும் பிற தடுப்பூசிகளை கட்டாயமாக்க நிறுவனங்களை அனுமதித்துள்ளது. மேலும் அவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் தேவைப்படலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஆம், சில விதிவிலக்குகளுடன் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும்.

அமெரிக்க முதலாளிகளுக்கு தங்களின் ஊழியர்கள் தடுப்பூசி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தேவைப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தடுப்பூசி போட மறுத்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அர்த்தமல்ல, ஆனால், பணியாளர் அல்லது மற்றவர்களுக்கு அந்த பணியாளர் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அபாயத்தையும் கட்டுப்படுத்த அந்த பணியாளர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் அல்லது குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் வேலை செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும்.

பணியிட விதிகளை உருவாக்குவதற்கு முதலாளிகளுக்கு பொதுவாக பரந்த நோக்கம் உள்ளது என்று கலிபோர்னியா பல்கலைக்கழக ஹேஸ்டிங்ஸ் சட்டக் கல்லூரியில் தடுப்பூசி கொள்கைகளில் நிபுணத்துவம் பெற்ற சட்ட பேராசிரியர் டோரிட் ரைஸ் கூறினார். அவர், இது அவர்களின் வேலை என்று கூறினார்.

விதிகள் நாட்டுக்கு நாடு மாறுபடும். ஆனால், அமெரிக்க சம வேலை வாய்ப்பு ஆணையம் காய்ச்சல் மற்றும் பிற தடுப்பூசிகளை கட்டாயமாக்க நிறுவனங்களை அனுமதித்துள்ளது. மேலும், அவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசிகள் தேவைப்படலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் சில விதிவிலக்குகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மருத்துவ அல்லது மத காரணங்களுக்காக மக்கள் விலக்கு கோரலாம். சில மாநிலங்கள் அவற்றின் அவசரகால பயன்பாடு நிலை காரணமாக தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதை தடைசெய்யும் சட்டங்களை முன்மொழிந்துள்ளன. ஆனால், ஃபைசர் முழு ஒப்புதலுக்காக விண்ணப்பித்ததால் மற்றவர்கள் அதைப் பின்பற்ற வாய்ப்புள்ளது.

முதலாளிகள் இந்த சிக்கலை அணுகுவதில் எப்படியும் மாறுபடுவார்கள். தடுப்பூசி போடுவதில் இணக்கத்தைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பூசி விலக்கு கோரிக்கைகளை நிர்வகித்தல் ஆகியவற்றின் நிர்வாகச் சுமை காரணமாக பலர் தடுப்பூசி தேவைப்படாமல் இருக்கலாம் என்று மெக்டெர்மொட் வில் & எமெரியில் வேலைவாய்ப்பு ஆலோசகரும் வழக்கறிஞருமான மைக்கேல் எஸ். ஸ்ட்ரோஹிரோ குறிப்பிட்டார். சட்ட ரீதியான உரிமைகோரல்களும் எழும் என்று தெரிவித்தார்.

இதன் விளைவாக, பல முதலாளிகள் தடுப்பூசியை கட்டாயமாக்காமல் வலிமையாக ஊக்குவிப்பார்கள், ஸ்ட்ரோஹிரோ கூறினார். எடுத்துக்காட்டாக, வால்மார்ட் தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரத்தை வழங்கும் ஊழியர்களுக்கு 75 டாலர் போனஸ் வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Employers can make covid 19 vaccination mandatory

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com