/tamil-ie/media/media_files/uploads/2019/12/template-2019-12-10T145852.806.jpg)
மத்திய அரசின் Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) மற்றும் Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) திட்டங்கள், நாட்டு மக்களுக்கு விபத்து காப்பீடு வசதிளை அளித்து வருகின்றன.
இதில்,PMSBY திட்டத்தில் 18 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் இணையலாம். விபத்தில் சிக்கி மரணமடைந்துவிட்டாலோ அல்லது நிரந்தரமான ஊனங்கள் ஏற்பட்டுவிட்டாலோ ரூ.2 லட்சம் வரை இழப்பீடு பெற திட்டம் உதவுகிறது.
விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்த தமிழக இஞ்ஜினியர்
PMJJBY திட்டத்தில் 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம். மரணம் எந்தவகையில் ஏற்பட்டாலும், அவர்கள் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு பெற திட்டம் உதவுகிறது.
2019ம் ஆண்டின் மார்ச் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், மத்திய அரசின் விபத்து காப்பீடு திட்டங்களான PMSBYல் 15.47 கோடி பேரும், PMJJBY திட்டத்தில் 5.91 கோடி பேரும் இணைந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல், வங்கி விபரங்களின் மூலம் திரட்டப்பட்டதாக அரசு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த திட்டங்களில் அதிகம் பேர் இணைந்த மாநிலங்களின் பட்டியல்
PMSBY திட்டத்தின் கீழ், 32,176 பேர் இழப்பீடு கோரி விண்ணப்பித்ததாகவும் அவர்களுக்கு ரூ. 643.52 கோடியும், PMJJBY திட்டத்தின் கீழ் 1,35,212 பேர் இழப்பீடு கோரி விண்ணப்பித்திருந்ததாகவும், அவர்களுக்கு ரூ.2,704.24 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.
உரிமை கோரல்களின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையில் முன்னணியில் உள்ள மாநிலங்களின் பட்டியல்
தமிழகத்தை பொறுத்தவரை, இந்த இரு திட்டங்களிலும் சேர்த்து 1,11,20,273 பேர் இணைந்துள்ளனர். இவர்களில், ரூ.180.10 கோடி அளவிற்கு இழப்பீடு வங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.