SARS-CoV-2 கொரோனா வைரஸின் எப்சிலான் மாறுபாட்டில், ஸ்பைக் புரதத்தில் உள்ள மூன்று மியூடேஷன்கள் தடுப்பூசிகள் அல்லது நோய் தொற்றால் தூண்டப்பட்ட ஆன்டிபாடிகளின் நடுநிலையான ஆற்றலைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மியூடேஷன்கள் தடுப்பூசி போட்டவர்களின் பிளாஸ்மாவிலிருந்து ஆன்டிபாடிகளின் செயல்திறனைக் குறைக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் எப்சிலான் பாதிப்பு பரவலாக உள்ளது . மேலும் 34 நாடுகளில் இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது.
சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் Vir பயோடெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, கொரோனா வைரஸ் அசல் வடிவத்திலிருந்து எவ்வாறு வேறுபட்டது, இந்த மாற்றங்களின் தாக்கங்கள் என்ன என்பதைக் காண தொற்று மாறுபாட்டை ஆய்வு செய்தனர்.
வைரஸ் பாதித்தவர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவின் எப்சிலான் மாறுபாட்டிற்கு எதிரான பின்னடைவை ஆராய்ச்சியாளர்கள் சோதித்தனர். எப்சிலன் மாறுபாட்டிற்கு எதிரான பிளாஸ்மாவின் நடுநிலைப்படுத்தும் திறன் சுமார் 2 முதல் 3.5 மடங்கு குறைந்தது.
ஸ்பைக் புரதத்தின் முக்கியமான பகுதிகளில் மறுசீரமைப்பிற்கு எப்சிலான் மியூடேஷன் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எலக்ட்ரான் கிரையோமிக்ரோஸ்கோபி ஆய்வுகள் இந்த பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை காட்டுகின்றன.
எப்சிலான் மாறுபாட்டில் உள்ள மூன்று மியூடேஷன்களில் ஒன்று ஸ்பைக் கிளைகோபுரோட்டினில் ஏற்கக்கூடிய பைன்டிங் டொமைனை பாதித்தது. பைன்டிங் டொமைன் என்பது கால்சியம் அல்லது டி.என்.ஏ போன்ற ஒரு குறிப்பிட்ட அணு அல்லது மூலக்கூறுடன் இணைக்கும் ஒரு புரத களமாகும். இந்த மியூடேஷன் மருத்துவ ஆன்டிபாடிகள் உட்பட, அந்த டொமைனுக்கு குறிப்பிட்ட 34 நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளில், 14ல் நடுநிலைப்படுத்தும் செயல்பாட்டைக் குறைத்தது.
மற்ற இரண்டு மியூடேஷன்களின் ஸ்பைக் கிளைகோபுரோட்டினில் N-டெர்மினல் டொமைனை பாதித்தன. இதன் விளைவாக N-டெர்மினல் டொமைனுக்கு குறிப்பிட்ட சோதனை செய்யப்பட்ட 10 ஆன்டிபாடிகளில் 10ல் நடுநிலைப்படுத்தலின் இழப்பை ஏற்படுத்தின என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வின் விவரங்கள் வாஷிங்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் (UW மெடிசின்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சர்வதேச ஆய்வை சியாட்டிலிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் டேவிட் வீஸ்லரின் ஆய்வகமும் லூகா பிக்கோலி மற்றும் வீர் பயோடெக்னாலஜியின் டேவிட் கோர்டியும் வழிநடத்திலின் பேரில் நடைபெற்றது.
பல ஆண்டுகளாக, வீஸ்லர் ஆய்வகமும் அதனை சார்ந்தவர்களும் SARS போன்ற கொரோனா வைரஸ்களின் மூலக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர். UW மெடிசின் படி, ஆன்டிபாடிகள் எவ்வாறு நோய்த்தொற்று வழிமுறைகளைத் தடுக்க முயற்சிக்கின்றன, மேலும் மாறுபாடுகள் எவ்வாறு வருகின்றன என்பதையும் அவை ஆராய்ந்து வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil