டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று (மே 19) வெப்ப அலைகள் வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ரெட் அலர்ட் விடுத்திருந்த நிலையில், இந்த பகுதிகளில் நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு வெப்ப அலைகள் மற்றும் கடுமையான வெப்ப அலை நிலைமைகள் நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி, சண்டிகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ள பிற முக்கிய நகரங்களில் சமீபத்தில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. வெப்ப அலை என்றால் என்ன? இந்தியாவின் எந்தப் பகுதிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன, கடுமையான மற்றும் சிவப்பு வெப்ப அலை எச்சரிக்கைகள் என்ன? இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளயாக என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
வெப்ப அலை எச்சரிக்கை என்றால் என்ன, அது எவ்வாறு வழங்கப்படுகிறது?
இந்திய வானிலை மையத்தின் வலைத்தளத்தின்படி, “தர ரீதியாக, வெப்ப அலை என்பது காற்றின் வெப்பநிலையின் ஒரு நிலை, இது வெளிப்படும் போது மனித உடலுக்கு ஆபத்தானது. அளவுரீதியாக, இது ஒரு பிராந்தியத்தில் உள்ள வெப்பநிலை வரம்புகளின் அடிப்படையில் உண்மையான வெப்பநிலை அல்லது இயல்புநிலையிலிருந்து அதிகளவு வெப்பம் வெளியேறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது.
எனவே, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும், அதன் வழக்கமான வெப்பநிலையிலிருந்து வேறுபடும் வெப்பத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு வெப்ப அலை தீர்மானிக்கப்படுகிறது. "ஒரு நிலையத்தின் அதிகபட்ச வெப்பநிலை சமவெளிகளுக்கு குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாகவும், மலைப்பகுதிகளில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாகவும் இருந்தால் வெப்ப அலை கருதப்படுகிறது" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடலோரப் பகுதிகளுக்கு, அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கும் போது வெப்ப அலை ஏற்படும். இத்தகைய வெப்பநிலைகள் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு வானிலை துணைப் பிரிவில் குறைந்தபட்சம் இரண்டு நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி பதிவாகும்போது இரண்டாவது நாளில் வெப்ப அலை அறிவிக்கப்படுகிறது.
கடுமையான வெப்ப அலை என்றால் என்ன?
வழக்கமான வெப்பநிலையை விட 4.5°C முதல் 6.4°C வரை அதிகமாக இருந்தால், அது வெப்ப அலையாக வகைப்படுத்தப்படும். 6.4°C க்கும் அதிகமாக இருந்தால் அது கடுமையான வெப்ப அலையாகக் கருதப்படுகிறது. மே மாதம் இந்தியாவில் வெப்ப அலைகளின் உச்ச மாதமாக கணக்கிடப்படுகிறது.
பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் வெப்ப அலைகள் உள்ளடக்கியது. சில சமயங்களில் தமிழகம் மற்றும் கேரளாவிலும் வெப்ப அலை நிகழ்கிறது. முக்கியமாக ராஜஸ்தான் மற்றும் விதர்பா பகுதியில் மே மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 45°Cக்கு மேல் காணப்படுகிறது.
வெப்ப அலை சிவப்பு எச்சரிக்கை என்றால் என்ன?
சிவப்பு எச்சரிக்கை என்பது தீவிர வெப்ப அலை எச்சரிக்கையைக் குறிக்கிறது. கடுமையான வெப்ப அலை இரண்டு நாட்களுக்கு மேல் நீடிப்பது அல்லது மொத்த வெப்பம்/கடுமையான வெப்ப அலை நாட்கள் ஆறு நாட்களுக்கு மேல் இருக்கும்போது இந்த வெப்ப அலை சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்படும்.
இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, "எல்லா வயதினருக்கும் வெப்ப நோய் மற்றும் வெப்ப பக்கவாதம் ஏற்படுவதற்கு மிக அதிக வாய்ப்பு உள்ளது". முதியவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு இந்த வெப்ப அலை சமயத்தில் மிகுந்த கவனிப்பு தேவை. இந்த நிபந்தனைகளை கருத்தில் கொண்டு பள்ளிகளை மதியத்திற்குள் மூட சண்டிகர் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலநிலை விஞ்ஞானிகள் குழுவான ‘க்ளைமேட் சென்ட்ரல்’ மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் இந்த தீவிர வெப்பத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 1998 மற்றும் 2017 க்கு இடையில் 1,66,000 க்கும் அதிகமானோர் வெப்ப அலைகளின் பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.
வெப்ப அலைகளில் இருந்து தப்பிக்க விழிப்புணர்வுகள்.
வெப்ப அலைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA)கூற்றுப்படி, வெப்ப அலை தாக்கத்தை குறைக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்:
வெயிலில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், குறிப்பாக மதியம் முதல் 3 மணி வரை.
நீங்கள் வெளியில் வேலை செய்தால், தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்தி, உங்கள் தலை, கழுத்து, முகம் மற்றும் கைகால்களில் ஈரமான துணியைப் பயன்படுத்துங்கள்.
தாகம் இல்லாவிட்டாலும் கூடுமானவரை போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
இலகுவான, வெளிர் நிற, தளர்வான மற்றும் நுண்துளைகள் நிறைந்த பருத்தி ஆடைகளை அணியுங்கள். சூரிய ஒளியில் செல்லும்போது பாதுகாப்பு கண்ணாடிகள், குடை/தொப்பி, காலணிகள் அல்லது சேப்பல்களை அணியுங்கள்.
உடலை நீரிழப்பு செய்யும் மது, டீ, காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்கவும். அதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களான லஸ்ஸி, தோரணி (அரிசி தண்ணீர்), எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்கவும்.
வெப்பத் தாக்குதலுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும்?
ஒரு நபர் சூரிய ஒளியால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் செய்ய வேண்டியது:
கூடியமானவரை குளிர்ந்த இடத்தில், நிழலின் கீழ் படுக்க வைக்கவும். ஈரமான துணியால் அவரது உடலை துடைக்கவும்/உடலை அடிக்கடி கழுவவும். சாதாரண வெப்பநிலை தண்ணீரை தலையில் ஊற்றவும். முக்கிய நோக்கம் உடல் வெப்பநிலையைக் குறைப்பதாகும்.
ஓஆர்எஸ்/எலுமிச்சை சர்பத்/தோராணி அல்லது உடலை நீரேற்றம் செய்ய பயனுள்ள பிற திரவங்களை நபருக்கு கொடுங்கள்.
உடனடியாக அந்த நபரை அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். வெப்பப் பக்கவாதம் மரணத்தை விளைவிக்கும் என்பதால் மருத்துவ கவனிப்பு தேவை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.