Advertisment

'யூஸ்லெஸ், கெட் லாஸ்ட்'; இஸ்ரோவில் வேலை தேடி சென்ற போது... மாணவர்களிடையே மனம் திறந்த சிவன்

தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள், சந்திரயான்-2 தோல்வியடைந்த அடுத்த நாள் சந்திரயான்-3 பணிகள் தொடங்கப்பட்டது என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Sivan.jpg

மாணவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று கூறிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.சிவன், சந்திரயான்-2 தோல்வியடைந்த மறு நாள் சந்திரயான்-3 பணிகள் தொடங்கப்பட்டது என்று கூறினார். 

Advertisment

கோவாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி) பட்டமளிப்பு விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "சந்திரயான்-2 திட்டம் தோல்வியடைந்தது.  நாங்கள் வருத்தப்பட்டோம். ஆனால் அப்படியே விட்டுவிட வில்லை. அடுத்த நாளே சந்திரயான்-3 பணிகளைத் தொடங்கினோம். இந்தத் திட்டத்தை முன்னெடுக்க அப்போதே பிரதமரிடமிருந்து ஒப்புதல் பெற்றேன்.

சந்திரயான்-2 இல் என்ன தவறு நடந்தது என்பதை நாங்கள் கற்றுக் கொண்டோம். அதற்காக அமைதியாக உட்காரவில்லை. அதுபோல் நீங்களும் அடுத்த கணத்தில், அதிலிருந்து மீண்டு வர வேண்டும். எழ வேண்டும்... இப்போது நீங்கள் சந்திரயான்-3 இன் வெற்றியைக் காணலாம். எனவே, இது நாங்கள் கற்றுக்கொண்ட ஒரு பெரிய பாடம். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், தோல்வியை வெல்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார் சிவன்.

தான் உண்மையில் ஒரு பள்ளி ஆசிரியராக ஆக விரும்பியதாக கூறிய  சிவன், இஸ்ரோவின் செயற்கைக் கோள் மையத்தில் தனக்கு வேலை கிடைக்காமல் போனதை பற்றி கூறினார். 'கெட் லாஸ்ட்' (Get Lost) என்று கூறினார்கள் என்றார்.  

நான் விரும்பியது எனக்கு கிடைக்கவில்லை

"பி.ஏ படித்ததற்குப் பிறகு வேலைக்கு செல்ல நினைத்தேன். ஆனால் அப்போது வேலை பெறுவது எளிதான காரியம் அல்ல. முதுகலைப் படிப்பில் ஆர்வமாக இருந்த நான், முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, வேலை தேடி இஸ்ரோவின் செயற்கைக் கோள் மையத்திற்குச் (ISRO’s satellite centre) சென்றேன். அப்போது என்னை யூஸ்லெஸ் பெல்லோ. உனக்கு இங்கு வேலை கிடையாது. கெட் லாஸ்ட் என்று சொன்னார்கள். ஆனால் இறுதியாக, நான் அதே அமைப்பின் தலைவராக ஆனேன். செயற்கைக் கோள் மையத்தில் வேலை கிடைக்கவில்லை. ராக்கெட் மையத்தில் வேலை கிடைத்தது,” என்றார்.

“எனது வாழ்க்கையில், நான் விரும்பியது எனக்கு கிடைக்கவில்லை. ப்ரீ-யுனிவர்சிட்டி படிப்புக்குப் பிறகு, நான் BE [degree] இன்ஜினியரிங் படிக்க விரும்பினேன், ஆனால் என் தந்தை அதற்கு நோ சொன்னார். பி.இக்கு படிக்க வைக்க பணம் பணம் இல்லை என்று கூறி, BSc படிக்க சொன்னார். BSc -க்குப் பிறகு நான் எம்.எஸ்.சி படிக்க விரும்பினேன், ஆனால் என் தந்தை மீண்டும் மறுத்தார்" என்றார். 

ஜி.எஸ்.எல்.வியின் திட்ட இயக்குநராக வெற்றி பெற்ற பிறகு, திட்டத்தின் தலைவராக அவர் எடுத்த ரில்ஸ்களுக்குப் பிறகு இஸ்ரோ சமூகத்திற்கு தன் மீது பார்வை திரும்பியதாக சிவன் கூறினார்.

“ஜி.எஸ்.எல்.வி தொடர்ந்து தோல்வியடைந்த போது, என்னை ஓரங்கட்டினார்கள். 4 முறை தோல்வியடைந்த திட்டத்தின் திட்ட இயக்குநராக என்னைப் பார்த்தார்கள்.  எனது நண்பர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும், என்னை வாழ்த்துவதற்குப் பதிலாக, அவர்கள்  என்னை அழைத்து ஆறுதல் கூறினார்கள். திட்ட தோல்வியை ஏற்க மறுக்கும் நீங்கள். நம்பர் ஒன் முட்டாள் என்றார்கள். பின்னர் நான் அந்த திட்டத்தை வெற்றியடையச் செய்தேன்”என்று சிவன் கூறினார்.

இந்த 3 விஷயங்கள்

“என் வாழ்நாளில் நான் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். உங்களுக்கு ஏதாவது ஒன்று மறுக்கப்பட்டால், அதைவிட பெரிய மற்றும் சிறந்த ஒன்று உங்களுக்காக காத்திருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். 

இப்போது நம் இந்தியா, நாட்டின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யானுக்கு தயாராகி வருகிறது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டும். பட்டம் பெறும் மாணவர்கள் விண்வெளித் துறையில் தொழில்முனைவோராக ஆக வேண்டும் என்று வாழ்த்திக் கூறினார். 

“இளைய தலைமுறையினர் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைகளை உருவாக்குபவர்களாக மாற வேண்டும். இந்தியா இப்போது விண்வெளித் துறை சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது... விண்வெளித் துறை இப்போது பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. இப்போது, ​​இஸ்ரோ மட்டுமல்ல, தனியார் ஆட்களும் ராக்கெட்டுகளை உருவாக்கலாம், செயற்கைக்கோள்களை உருவாக்கலாம், ஏவலாம்...இஸ்ரோ ஒரே மாதிரியாக வளருவதை நாங்கள் விரும்பவில்லை. பல தரப்பட்ட வளர்ச்சியை நாங்கள் விரும்புகிறோம்”என்று அவர் கூறினார்.

ஒரு சவால்களை சந்திக்கும் போது 3 விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். 1. தோல்வி பயத்தை எவ்வாறு வெல்வது 2. குறிப்பிட்ட அளவிலான ரிஸ்க் எடுப்பது 3.  புதுமை மற்றும் முன்னோடி சிந்தனை ஆகியவை 3 முக்கிய விஷயங்கள் ஆகும் என்றார்.  

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/when-ex-isro-chief-was-told-to-get-lost-by-isro-satellite-centre-8982010/

"நீங்கள் கடலில் நீந்த விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் குதித்து விட வேண்டும். அலைகள் போகும் வரை காத்திருக்க கூடாது என்று அவர் கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Isro K Sivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment