பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் அதீத வெப்பத்தினால், இந்தியாவில் மட்டும் 2100ம் ஆண்டில் 1.5 மில்லியன் (15 லட்சம்) பேர் மரணமடையும் அபாயம் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைழகத்தின் டாடா சென்டர் பார் டெவலப்மென்ட், கிளைமேட் இம்பாக்ட் லேப் உடன் இணைந்து பருவநிலை மாற்றம் மற்றும் இந்தியாவில் வெப்பத்தினால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான ஆய்வினை நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பருவநிலை மாற்றத்தின் மூலம் ஏற்படும் அதீத வெப்பத்தின் காரணமாக, 2100ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 1.5 மில்லியன் பேர் மரணம் அடைவர். இந்தியாவின் படிம எரிபொருள்களின் மூலமான ஆற்றல் பயன்பாடு, அடுத்த 20 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும். இந்தியாவில் வாகனங்களின் இயக்கம், தொழிற்சாலைகளின் மூலம் வெளியாகும் புகை மூலமான காற்று மாசுபாடு அதிகளவில் உள்ளது. இதேநிலை நீடித்தால், 2100ம் ஆண்டுக்குள், மரண விகிதம் 60 வரை அதிகரிக்கும். வாய்ப்புற்றுநோயால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
நாட்டின் சராசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலிருந்து 28 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கும். கோடை காலத்தின் சில தினங்களில் 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை நிலவும். அத்தகைய நாட்களின் எண்ணிக்கை 2100ம் ஆண்டுக்குள் 8 மடங்கு அதிகரிக்கும். அதாவதுல 2010ம் ஆண்டில் 5.1 நாட்களாக இருந்த நிலை 2100ம் ஆண்டில் 42.8 நாட்களாக அதிகரிக்கும். 2050ம் ஆண்டில், அதிக வெப்பநிலை நாட்கள் 15.8 என்ற அளவில் இருக்கும்.
என்சிஆர் என்றழைக்கப்படும் நேசனல் கேப்பிடல் ரீஜன் பகுதியில், அதிக வெப்பநிலை நிலவும் நாட்களின் எண்ணிக்கை 22 மடங்கு அதிகரித்து, வாகனப்புகை உள்ளிட்ட காற்று மாசுபாடு காரணமாக 2100ம் ஆண்டில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைவர். அதிக வெப்பநிலை கொண்ட நாட்களில் நாட்டிலேயே, பஞ்சாப் மாநிலம் 85 நாட்களுடன் முன்னணி இடத்தில் இருக்கும்.
அதீத வெப்பத்தால் அதிக மரணம் நிகழும் மாநிலங்களின் பட்டியல்
/tamil-ie/media/media_files/uploads/2019/11/water-300x200.jpg)
அதீத வெப்பத்தால் அதிக மரணம் நிகழும் மாநிலங்களின் பட்டியலில், உத்தரபிரதேசம் முதலிடத்திலும், பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, மத்தியபிரேதசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நகரங்களின் அதிக வெப்பநிலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக, அந்த நாட்டின் வளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தில், ஒரே நாளில் அதிக , இதுவே டில்லியில் 0.8 சதவீத அளவிற்கு மரணங்களும் ஏற்படும் என்று அந்த ஆய்வுமுடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது