Expect better phones, greater control over data : ஒரு புதிய டெக்னாலஜியின் பெயரை எழுதி வைப்பதற்குள் அதில் ஒரு அப்டேட் வந்துவிடுகிறது அல்லது மாறிவிடுகிறது. 2020ம் ஆண்டில் இந்தியாவில் தொழில்நுட்பம் எப்படி இருக்கும்? குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதனை சுற்றியிருக்கும் தொழில்நுட்பங்கள் 2020ல் எப்படி இருக்கும்? ஒரு சில தொழில்நுட்பங்கள் நம்முடைய வாழ்க்கையையே மாற்றும் அளவில் இருக்கும்.
5ஜி தொழில்நுட்பம் பெரிய மாற்றத்தை உருவாக்குமா?
இந்த வருடம் 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வருமா என்ற வலுத்த சந்தேகம் நிலவி வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே வருவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம். அப்படியே 5ஜி தொழில்நுட்பம் வந்தாலும், நம்முடைய வாழ்வில் உடனே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறிவிட இயலாது. ஏன் என்றால் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை. அனைவராலும் இதை வாங்க இயலுமா என்ற சந்தேகம் இருக்கிறது. மேகும் 4ஜி டேட்டாவே மிகவும் வேகமாக செயல்படுவதால் எடுத்தவுடன் அடுத்த மாற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனாலும் ஆன்லைன் வீடியோக்கள் பயன்பாடு மற்றும் அதனை பார்க்கும் அனுபவம் முற்றிலும் மாறுபடும்.
ஸ்மார்ட்போன்களின் நிலை என்ன?
தற்போது மார்க்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்களே நல்ல நிலையில் இருக்கிறது. நிறைய கேமராக்கள், நிறைய ஸ்டோரேஜ் மற்றும் அதிக மெமரி, ஸ்கிரீன்கள் என்று நிறைய புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி உங்களை ஸ்மார்ட்போன்கள் வாங்க வைக்க நிறுவனங்கள் முயற்சி செய்யும். ஆனால் உண்மையான கண்டுபிடிப்பு என்னவென்றால் மடக்கு ஸ்மார்ட்போன்கள் தான். அவற்றின் பயன்பாடு அதிக அளவில் வரும் போது தற்போது இருக்கும் ஃபீச்சர் போன்களை காட்டிலும் மிகவும் குறைவான திரை அளவில் ஸ்மார்ட்போன்கள் வெளி வரலாம்.
To read this article in English
வேறென்ன கேட்ஜெட்கள் புது தொழில்நுட்பத்தை பெறுகிறது?
ஒரு டிவைஸில் 'சிப்’ இருந்தாலே அது ஸ்மார்ட் டிவைஸ் ஆகிவிடுகிறது. 2020ம் ஆண்டில் கேட்ஜெட்களில் மிக முக்கியமான சில கேட்ஜெட்கள் தன்னிச்சையாக இயங்கும் நிலையை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது. பயனாளர்களின் செயல்பாட்டினை அறிந்து இணையத்தில் தேடுவது, இ.மெயிலில் துவங்கி அனைத்து ஆப்களிலும் அப்டேட்களை செக் செய்து சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடும் இந்த டிவைஸ்கள் ஈடுபடலாம்.
நம்முடைய கமெண்ட்ஸினை கேட்கும் டிவைஸ்கள் என்னென்ன?
தற்போது அலேக்ஸா அப்ளிகேசன் ப்ரோகிராமிங் இண்டெர்பேஸில் இயங்கி வருகிறது. வாய்ஸ் கமெண்ட்ஸில் செயல்படும் எந்த டிவைஸ்களுடன் வேண்டுமானாலும் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். கார்கள், இயர்போன்கள் என எதில் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். கூகுள் அலெக்ஸா மற்றும் சிரி மேலும் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை பெற்று வளர்ந்து வரும். ஆனால் இந்த டிவைஸ்கள் எதை கேட்கலாம், எதை கேட்க கூடாது என்பது தான் தற்போது எழும் கேள்வியாக உள்ளது.
உங்களின் டேட்டா பயன்பாடு?
இந்த ஆண்டு, உங்கள் உடல்நலம், உங்கள் செலவு மற்றும் தொழில்நுட்பத்துடனான உங்கள் தொடர்புகள் குறித்து மேலும் சிறப்பான முடிவுகளை எடுக்க முடியும், ஏனென்றால் மேலே உள்ள அனைத்து விசயங்கள் குறித்தும் உங்களிடம் கூடுதல் தகவல்கள் இருக்கும். ஸ்மார்ட் பேண்டுகள் மற்றும் கைக்கடிகாரங்கள் பதிவுகளின் படி காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள பயனர்களுக்கு வெகுமதி கூட அளிக்கலாம்.
ஆனால் நிறைய நபர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறார்கள். அவர்களின் அடிப்படை தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் அறிந்தவுடன், சமூக வலைதளங்களில் மிகவும் குறைவான தகவல்களை மட்டுமே பகிர்கின்றார்கள்.