Advertisment

ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கைகளை வங்கிகள் ரகசியமாக வைக்க விரும்புவது ஏன்?

Explained: Why banks want inspection reports by RBI to be kept confidential: ஆர்பிஐ அறிக்கைகளில் வங்கிகள் அதிக (மோசமான) கடன் வாங்குபவர்கள் மற்றும் அவை வங்கி அதிகாரிகளால் எவ்வாறு கையாளப்பட்டன என்பது பற்றிய விவரங்கள் இருப்பதால், வங்கிகள் அவற்றை மறைத்து வைக்க விரும்புகின்றன.

author-image
WebDesk
New Update
ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கைகளை வங்கிகள் ரகசியமாக வைக்க விரும்புவது ஏன்?

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வு அறிக்கைகளை வங்கிகள் வெளியிட வேண்டுமா என்ற சர்ச்சைக்குரிய பிரச்சினையில், செவ்வாய்க்கிழமை வங்கிகள் தாக்கல் செய்த ரிட் மனுக்களை உச்சநீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் நீதிபதி எல்.நாகேஸ்வரா ராவ்தலைமையிலான பெஞ்சிற்கு பரிந்துரைத்த பிறகு, இந்த விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisment

ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட தகவல் அறியும் உரிமை (RTI) அறிவிப்புகளை எதிர்த்து பல்வேறு வங்கிகள் ரிட் மனுக்களை தாக்கல் செய்தன.

பிரச்சினை என்ன?

2015 ஆம் ஆண்டில், ஆய்வு அறிக்கைகள் மற்றும் தவறிழைத்தோர் பட்டியலை ரகசியமாக வைத்திருக்க முயற்சித்ததற்காக, ரிசர்வ் வங்கியை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. இது வங்கி துறையின் விருப்பங்களுக்கு எதிராக, ரிசர்வ் வங்கியின் இத்தகைய அறிக்கைகளை பகிரங்கமாக வெளிப்படுத்த வழிவகை செய்கிறது.

எந்தவொரு பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கியின் நன்மையை அதிகரிக்க ரிசர்வ் வங்கிக்கு எந்த சட்ட கடமையும் இல்லை, எனவே அவர்களுக்கு இடையே 'நம்பிக்கையான' உறவு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஆர்.டி.ஐ-யின் கீழ் இந்த விவரங்களை வெளிப்படுத்துவதன் மூலம் பொது நலனை நிலைநாட்ட ஆர்பிஐ கடமைப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இத்தகைய அறிக்கைகளை பொதுவில் வெளியிட அனுமதித்தது.

ஆய்வு அறிக்கையின் முழு வெளிப்பாட்டை உச்சநீதிமன்றம் விரும்பியது. இருப்பினும், மோசமான கடன்கள் மற்றும் கடன் வாங்குபவர்களின் சில பகுதிகள் மட்டுமே பகிரங்கப்படுத்தப்படும் என்று கூறப்பட்டதை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. ஆனால், வங்கிகள் ஆய்வு அறிக்கைகள் மற்றும் தவணைப் பட்டியல்களை வெளியிட மறுத்து வருகின்றன.

வங்கிகள் வழங்கிய வாதம் என்ன?

வங்கிகள் பணத்தை கையாளும் பணியில் ஈடுபடுவதால், எந்தவிதமான எதிர்மறையான கருத்துக்களும், குறிப்பாக ஒழுங்குபடுத்தும் ஆர்பிஐ-யிடம் இருந்து வரும் எதிர்மறை கருத்துக்கள், வங்கிகளின் செயல்திறனை பாதிக்கும் மற்றும் வாடிக்கையாளர்களை ஒதுக்கி வைக்கும். என எஸ்.பி.ஐ. தலைமையிலான வங்கிகள் வாதாடின. மேலும் வாடிக்கையாளர்களுடான உறவு நம்பிக்கை மற்றும் உண்மை அடிப்படையிலான செயல்பாடுகள் என்பதால் பொது வெளியில் வெளிப்படுத்த முடியாது என கூறின.

மறுபுறம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியார் வங்கிகளுக்குப் பொருந்தாது என்று தனியார் வங்கிகள் வலியுறுத்தின.

தனியுரிமை ஒரு அடிப்படை உரிமை என்றும், எனவே வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதன் மூலம் அதனை மீறக்கூடாது என்றும் வங்கிகள் வாதிட்டன.

இந்த பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் பல முறை வந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 10 வங்கிகளின் மறுபரிசீலனை செய்யக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 2 ம் தேதி, தவறிழைத்தவர்களின் பட்டியல் மற்றும் ஆய்வு அறிக்கைகள் தொடர்பான தகவல்களை வெளியிட ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட ஆர்டிஐ நோட்டீஸ்களை நிறுத்தி வைக்க, இரண்டு வங்கிகள் முறையிட்டப்போது உச்ச நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் மறுத்துவிட்டது.

ஆய்வு அறிக்கைகளை வெளியிட வங்கிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றன?

பல்வேறு வங்கிகளில் உள்ள ரிசர்வ் வங்கியின் ஆய்வு அறிக்கைகள், முறைகேடுகள் மற்றும் தவறான நிர்வாகம் பற்றிய விவரங்களுடன், பல்வேறு முறைகேடுகளை வெளிக்கொண்டு வரலாம் என்று பலர் கருதுகின்றனர்.

இந்த அறிக்கைகளில் வங்கிகள் அதிக (மோசமான) கடன் வாங்குபவர்கள் மற்றும் அவை வங்கி அதிகாரிகளால் எவ்வாறு கையாளப்பட்டன என்பது பற்றிய விவரங்கள் இருப்பதால், வங்கிகள் அவற்றை மறைத்து வைக்க விரும்புகின்றன.

"வெளிப்படையாக, வங்கிகள் ஆய்வு அறிக்கைகள் மற்றும் தவறிழைத்தவர்களின் பட்டியல்களை பொதுவில் வெளியிட விரும்புவதில்லை, ஏனெனில் அது அவர்களின் இமேஜை பாதிக்கிறது. வாடிக்கையாளர்கள், வங்கிகளின் மோசமான செயல்பாடுகளால் வங்கிகளை விட்டு வெளியேறலாம். முழு ஆய்வு அறிக்கை மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியல் பொதுவில் வெளியிடப்பட்ட பிறகு பல உண்மைகள் வெளிவரும், ”என்று வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வங்கிகள் தற்போது தாமாகவே கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களின் பட்டியலையும், கடன் மீட்புக்காக வழக்குகள் தாக்கல் செய்த தவறிழைத்தவர்களின் பெயர்களையும் வெளியிடுகின்றன.

ஒரு தசாப்த காலமாக நடந்து வரும் சட்டப் போராட்டம் என்ன?

ஆர்டிஐ ஆர்வலர் ஜெயந்திலால் மிஸ்திரி ஆர்டிஐ சட்டம் -2005-ன் கீழ் ஆர்பிஐ-யிலிருந்து 2005-ல் குஜராத் சார்ந்த கூட்டுறவு வங்கி பற்றி தகவல் கேட்டபோது ஆய்வு அறிக்கைகள் மற்றும் தவணைகள் பட்டியலை வெளிப்படுத்தும் சட்டப் போராட்டம் தொடங்கியது. ஆர்டிஐ கேள்விக்கு பதில் கிடைக்காததால் மிஸ்திரி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும் நீதிபதி ராவ், ஆர்.பி.ஐ.க்கு எதிரான 2015 தீர்ப்பை ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று சில தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் செய்த பல விண்ணப்பங்களை முன்பு தள்ளுபடி செய்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment