scorecardresearch

ஒரே ஒரு மின்னல்கற்றை 18 யானைகளை கொல்ல முடியுமா? அறிவியல் உண்மைகள் கூறுவது என்ன?

Explained: Can a single lightning flash kill 18 elephants? Science says yes, in various possible ways: மின்னலின் ஒரே ஒரு மின்னல்கற்றையால் 18 யானைகளைக் கொல்ல முடியுமா? அறிவியல் மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பதில் ஆம்

ஒரே ஒரு மின்னல்கற்றை 18 யானைகளை கொல்ல முடியுமா? அறிவியல் உண்மைகள் கூறுவது என்ன?

அஸ்ஸாமின் ஒரு மலை உச்சியில் புதன்கிழமை இரவு 18 யானைகள் இறந்து போயின. முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை யானைகள் மின்னல் தாக்கி இறந்து போனதைக் குறிக்கிறது. மாநில அரசு இறுதி அறிக்கைக்காகக் காத்திருக்கும் அதே வேளையில் சாத்தியமான பிற காரணங்களை ஆராய வேண்டும. ஆனால் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை ஒரு கேள்வியை எழுப்புகிறது. மின்னலின் ஒரே ஒரு மின்னல்கற்றையால் 18 யானைகளைக் கொல்ல முடியுமா? அறிவியல் மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பதில் ஆம்.

மின்னல் விலங்குகளை எவ்வாறு கொல்கிறது?

மின்னல் பல வழிகளில் விலங்குகளை காயப்படுத்தலாம் அல்லது கொல்லக்கூடும் என்று இயற்பியலாளரும் பொறியியலாளருமான சண்டிமா கோம்ஸ் 2012 ஆம் ஆண்டில் சர்வதேச பயோமெட்டாலஜி ஜர்னலில் எழுதினார். ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் உயர் மின்னழுத்த பொறியியல் பேராசிரியரான கோம்ஸ் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு ஒரு மின்னஞ்சலில். , மேலும் சில  வழிகளில் மின்னல் விலங்குகளை கொல்வதை பற்றி கூறியுள்ளார்.

நேரடி ஃப்ளாஷ்: திறந்தவெளியில் உள்ள ஒரு விலங்கு அதன் உடலின் ஒரு பகுதி அருகிலுள்ள மற்ற பொருட்களின் மீது தொட்டுக் கொண்டிருந்தால் மின்னலால் நேரடியாக தாக்கப்படலாம். இந்த தாக்குதலில் உயரமான விலங்குகள் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.

சைட் ஃப்ளாஷ்: மரம் போன்ற உயரமான பொருளை மின்னல் தாக்கும்போது, ​​ ஒரு சைட் ஃபிளாஷ் உருவாகி அது மரத்தின் அடியில் நிற்கும் ஒரு விலங்கைத் தாக்கும்.

தொடுதல் ஆற்றல்: உயரமான விலங்கின் உடலின் ஒரு பகுதி தரையுடன் தொடர்பு கொண்டிருக்கும் போது, மற்றொரு பகுதி, அதிக உயரத்தில், மின்னல் தாக்கிய பொருளுடன் தொடர்பு கொண்டால், ஒரு பகுதி அளவு மின்னோட்டம் அதன் உடலின் வழியாக செல்லக்கூடும்.

ஸ்டெப் ஆற்றல்: இது நான்கு கால் விலங்குகளிடையே மிகவும் பொதுவான மின்னல் ஆபத்து. ஒரு விலங்கின் முன் மற்றும் பின் பாதங்கள் வெகு தொலைவில் இருக்கும்போது, ​​ஒரு குறிப்பிட்ட மின்னோட்டம் சில சூழ்நிலைகளில் உடலின் வழியாக செல்லக்கூடும்.

அஸ்ஸாமில் யானைகளைக் கொன்றது உண்மையில் மின்னல் என்று கருதினால் மேற்கண்ட எந்த வழிகளில் மின்னல் தாக்குதல் நடந்திருக்கும்?

பிரேத பரிசோதனை நடத்திய குழுவின் உறுப்பினரின் கூற்றுப்படி, ஸ்டெப் ஆற்றல் எனப்படும் தரையில் ஓடும் மின்னோட்டத்தால் யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், மே 15).

மின்னல் தாக்குதலைத் தொடர்ந்து தரையில் மின்னோட்டம் பாயும் போது, ​​தாக்குதலின் உச்ச கட்டத்தில் மின்சார ஆற்றல் (மின்னழுத்தம்) மிக அதிகமாக இருக்கும், மேலும் ஓட்டத்தின் திசையில் தூரம் செல்ல செல்ல குறைகிறது. ஒரு யானை உச்ச கட்ட தாக்குதலின் புள்ளியை எதிர்கொண்டால், மின்னோட்டம் முன் கால்களிலிருந்து (அதிக ஆற்றல்) பின்னங்கால்களுக்கு (குறைந்த ஆற்றல்) பாயும், இந்த செயல்பாட்டில் மின்னாற்றல் வெளிப்படும்.

ஆனால் மின்னலின் ஒரே ஒரு மின்னல்கற்றை பல யானைகளை கொன்றதா?

இது நிகழலாம், ஏனெனில் ஒரு மின்னலின் ஒரே ஒரு மின்னல்கற்றை மூலம், மின்னோட்டம் பல முறை தரையில் பாய்கிறது. “இவை அடுத்தடுத்த சைட் ஃப்ளாஷ் தாக்குதல் என்று அழைக்கப்படுகின்றன. இதனால்தான் மின்னலின் மின்னல்கற்றைகளை காண்கிறோம். இயற்பியலில் விளக்கக்கூடிய சில காரணங்களால் ஒவ்வொரு அடுத்தடுத்த சைட் ஃப்ளாஷ் தாக்குதலும் அருகிலுள்ள வெவ்வேறு பொருள்களுடன் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது, ”என்று கோம்ஸ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

” ஸ்டெப் ஆற்றல் தாக்குதலைத் தவிர ஒரே நேரத்தில் பல இறப்புகளுக்கு வேறு இரண்டு சாத்தியங்கள் உள்ளன,”. இவற்றில் ஒன்று முதல் யானை சைட் ஃப்ளாஷ் தாக்குதலுக்கு உள்ளாகும் போது மற்ற யானைகளும் தாக்கப்படலாம். “அதனால்தான் கோவிட் -19 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, இடியுடன் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 2 மீ தொலைவில் இருக்குமாறு மக்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம் -,” கோம்ஸ் கூறினார். மற்றொரு சாத்தியம் அருகிலுள்ள மரத்திலிருந்து பல சைட் ஃப்ளாஷ் தாக்குதல்கள் மூலம் நிகழலாம்.

குறிப்பாக மின்னல் தாக்குதலுக்கு யானைகள் பாதிக்கப்படக்கூடியவையா?

யானையின் முன் மற்றும் பின் பாதங்கள் அகலமாக இருப்பதால், எலி போன்ற சிறிய விலங்குகளை விட இது மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக தோன்றுகிறது.

“இரண்டு கால்களுக்கு இடையில் அதிகமான தூரம் உள்ளதால் ஆற்றல் இடைவெளியும் அதிகரிக்கிறது. இந்த பெரிய ஆற்றல் இடைவெளியால், உடலின் வழியாக அதிக மின்னோட்டம் பாயும், ”என்று கோம்ஸ் கூறினார்.

“வழக்கமாக, ஒரு பெரிய உடல் எடை கொண்ட ஒரு விலங்கு ஸ்டெப் ஆற்றலின் மூலம் ஏற்படும் ஒரு பெரிய மின்னோட்டத்தைத் தாங்கும். எனவே, ஒரு யானை ஒரு பெரிய ஸ்டெப் திறனுக்கு உட்படுத்தப்படலாம் என்றாலும், அதன் உடலின் வழியாக செல்லும் மின்னோட்டம் ஆபத்தானதாக மாறும் வாய்ப்பு குறைவு, ”என்று கோம்ஸ் ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

மற்றொரு நாளிதழின் ஆசிரியர், மறுபுறம், அவற்றின் உயரம் காரணமாக யானைகள் உண்மையில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்று கருதுகிறார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த மின்னல் தாக்குதலில் இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் இறந்ததைத் தொடர்ந்து, கிம்பர்லியில் உள்ள ராக்வுட் பாதுகாப்பு நிதியத்தின் பாதுகாப்பு விஞ்ஞானி சிஸ்கா பி.ஜே.சீஜென், ஆப்பிரிக்க ஜர்னல் ஆஃப் சூழலியல் பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதினார். அதில் ஒட்டகச்சிவிங்கிகள் மின்னலின் நேரடி தாக்குதலுக்கு பாதிக்கப்படக்கூடியவை. மேலும் யானைகளும் உயரமான விலங்குகள் அதனால் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

“ஆமாம், யானைகளின் உயரம் காரணமாக மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது மின்னல் தாக்க அதிக வாய்ப்புள்ளது என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.

ஆனால் யானைகள் ஒரு நேரடி ஃபிளாஷ் மூலம் தாக்கப்பட்டிருக்க முடியுமா?

“மின்னலால் யானைகள் நேரடியாகத் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அருகிலுள்ள இடத்தைப் பொறுத்தது. மிக உயரமான பொருள்கள் மின்னலை ஈர்க்கின்றன. எனவே உயரமான மரங்கள் இருந்தால் (யானைகளை விட உயர்ந்தவை) மின்னல் நேரடியாக யானைகளைத் தாக்கும் வாய்ப்பு குறைவு. ஆனால் யானைகள் திறந்த புல்வெளியில் இருந்தால் அதற்கான வாய்ப்புகள் அதிகம் ”என்று ஸ்கீஜென் கூறினார்.

யானைகள் இறந்த அஸ்ஸாமில் உள்ள பாமுனி மலையில், மின்னல் தாக்குதலின் தாக்கத்தை எடுக்கக்கூடிய உயரமான மரங்கள் இல்லை. பல சிறிய மரங்கள் எரிக்கப்பட்டு நடுவில் பிளவுபட்டுள்ளன, இது அந்த பகுதி உண்மையில் மின்னலால் தாக்கப்பட்டதைக் குறிக்கிறது. சில யானைகளிலும், காதுகள், வயிறு, மற்றும் ஸ்கேபுலர் பகுதியில் எரிந்து போன அடையாளங்கள் இருந்தன.

இது போன்ற ஒரே நேரத்தில் பல விலங்குகளின் மரணங்கள் பொதுவானதா?

2007 ஆம் ஆண்டில், மேற்கு வங்காளத்தின் பக்ஸா புலிகள் காப்பகத்தில் இதேபோன்ற சம்பவத்தில் ஐந்து யானைகள் கொல்லப்பட்டன.

2016 ஆம் ஆண்டில், இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து நோர்வேயின் ஹார்டங்கெர்விடா பீடபூமியில் 300 க்கும் மேற்பட்ட கலைமான் கொல்லப்பட்டன.

1972 இல், அலாஸ்காவில் நடந்த மின்னல் தாக்குதலில் 53 கலைமான் கொல்லப்பட்டன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Explained can a single lightning flash kill 18 elephants science says yes in various possible ways