கொரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கை சுழற்சியை மாற்றியுள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது. இதுவரையிலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையானது, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரையிலும், 3 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளாக உருமாறி வரும் நிலையில், அவற்றின் வேகமான பரவலை தடுக்க, உலக நாடுகள் முடிந்த வரையில், தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போட முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இறப்போரின் எண்ணிக்கையானது வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 28 வரை உலகம் முழுவதும் ஒரு மில்லியன் இறப்புகளைப் பதிவு செய்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 க்குள் இரண்டு மில்லியனைப் பதிவு செய்தது. இந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஒரு மில்லியன் உயிரிழப்புகளை இரண்டு மாதங்களுக்குள் பதிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே, தொற்றுக்கு உள்ளாகி இறப்போரின் எண்ணிக்கையானது, அமெரிக்கா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோவில் அதிகமாக இருந்து வந்தன. ஆனால், இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தினசரி இறப்பு விகிதமானது உயர்ந்துக் கொண்டே செல்வதால், இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
கொரோனா தொற்றால் அதிகம் உயிரிழப்பை கொண்டிருக்கும் நாடுகளின் நிலையை காணலாம்.
அமெரிக்கா :
உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிய போது, அமெரிக்காவின் அணு அச்சுறுத்தல் முயற்சி மற்றும் சுகாதார பாதுகாப்புக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையம், 195 நாடுகளை மதிப்பீடு செய்தது. அதில், கொரோனா தொற்று நெருக்கடியை அமெரிக்கா சிறப்பாக நிர்வகிக்கும் என கூறியது. ஆனால், அமெரிக்காவின் நிலைமை அதற்கு நேர்மாறானதாகவே இருக்கிறது.
அமெரிக்காவில், இதுவரையில் 5,64,800 க்கும் மேற்பட்ட இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 567 பேர் பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பல வாரங்களாக, கொரோனா தொற்றை எதிர்கொள்ள மறுத்துவிட்டார். பின்னர், அவர் தொற்று நோய் குறித்தான பீதியை மக்களிடையே உருவாக்க விரும்பாததால், தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர, பல்வேறு செயல்களை மேற்கொள்ள தொடங்கினார். அப்போது, அமெரிக்காவில் கொரோனா உறுதிப் பரிசோதனை மற்றும் தொற்றுக்கு உள்ளானோரின் தொடர்பு தடமறிதல் குறைபாடுகள் இருந்து வந்தன.
ஜூலை 11 வரை , அதிபர் டிரம்ப் பொது வெளியில் முகமூடியை அணியவில்லை. அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஆராய்ச்சி முடிவில், ட்ரம்ப் உள்ளிட்ட 29% குடியரசுக் கட்சியினர் மட்டுமே தேர்தல் பிரசாரங்களின் போது, முகக்கவசங்களை பயனபடுத்தினர் என கண்டறிந்துள்ளது. ஆரம்ப நாட்களில் ட்ரம்ப் கூறியது போல், “நாங்கள் கொரோனா சோதனை செய்யவில்லை என்பதால், எங்களுக்கு தொற்று யாருக்கும் எற்படவில்லை என்ற எண்ணம் இருந்ததாக ஆய்வில் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப காலங்களில், தொற்றுக்கு உள்ளானவர்களை மட்டுமே சோதித்துப் பார்த்ததால், வைரஸ் பரவுவதை அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரேசில் :
பிரேசிலில் இதுவரையில், 3,68,749 இறப்புகளை கொரோனா தொற்று ஏற்படுத்தி உள்ளது. இது, தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையில், உலகின் இரண்டாவது நாடாக பிரேசிலை உயர்த்தி உள்ளது. தற்போது, பிரேசிலில் உள்ள தொற்றின் வேகமான பரவல், பல வாரங்களுக்கு தொடரக்கூடாது என, அந் நாட்டின் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமீபத்திய வாரங்களில், உலகளவில் பதிவான கோவிட் இறப்புகளில் நான்கில் ஒன்று, பிரேசில் உயிரிழப்புகளாகும்.
பிரேசிலில், அரசியல் மோதல்களும் அறிவியலின் மீதான அவநம்பிக்கையும் பெரும்பாலான மரணங்களுக்கு வழிவகுத்தன. அமெரிக்காவில் டிரம்ப்பைப் போலவே, பிரேசிலில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவும் பெரும்பாலான கட்டுப்பாடுகளை நிராகரித்து, நாட்டில் முழு ஊரடங்குக்கான அழைப்புகளை எதிர்த்தார்.
போல்சனாரோ கோவிட்டை “ஒரு சிறிய காய்ச்சல்” என்றே அழைத்து வந்தார். நாடு தழுவிய ஊரடங்கை நிராகரித்தார். அவரின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஏழை மக்களை மட்டுமே பாதிப்புக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று, ஜூலை மாதத்திற்குள் பிரேசில் மொத்தம் 500,000 க்கும் அதிகமான இறப்புகளைக் காணக்கூடும் என்று கணித்துள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் முழு அளவையும் எட்டியுள்ளதோடு, பற்றாக்குறை நிலவி வருகிறது.
மார்ச் மாத இறுதி வரை 46 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதற்கான பாதி இலக்கைக் கொண்ட பிரேசிலில், மோசமான தடுப்பூசி திட்ட நடைமுறைகளே இருந்து வருகிறது. இருப்பினும், பிரேசில் இப்போது நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதுமான தடுப்பூசி டோஸ்களை ஆர்டர் செய்திருந்தாலும், விமர்சகர்கள் கூறுகையில், இதேபோன்று மொத்தமாக வாங்கும் திறன் கொண்ட பிற பெரிய நாடுகள் வரிசையில் முன்னணியில் இருப்பதால், இது அரசின் மிகவும் தாமதமான நடவடிக்கை என தெரிவித்து வருகின்றனர்.
மெக்ஸிகோ :
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வறிக்கை, மெக்ஸிக்கோவின் சான் பிரான்சிஸ்கோ, கொரோனா தொற்று தொடர்பாக, அதிகப்படியான சோதனைகளை நடத்த, பணத்தை செலவழிக்க தயங்குவதாக தெரிவித்துள்ளது.
126 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் இதுவரையில், 211,693 இறப்புகள் பதிவாகி உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் மிகக் குறைந்த சோதனை செய்யப்படுவதால், உண்மையான எண்ணிக்கை 330,000 என்று அந்நாட்டு அரசு தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் சுயாதீன குழுவினால் உலக சுகாதார நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட அறிக்கையால் மேற்கோள் காட்டப்பட்ட தவறுகளில் முகக்கவசங்கள், பயணக் கட்டுப்பாடுகள், போதுமான சோதனை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல் மற்றும் சமூக தொலைதூர நடவடிக்கைகளை வழங்க மெக்ஸிகோவின் அதிகாரிகள் தவறிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், சுகாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்க அதிகாரிகள் தவறி உள்ளதாக அந்த அறிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா :
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறப்போரின் விகிதமானது இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து 175,649 இறப்புகளைப் பதிவு செய்துள்ள இந்தியா, பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தாலும், பல நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இந்தியாவில் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, இறப்பு விகிதத்தை மதிப்பிட்டாலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் இறப்புகள் குறைவாக உள்ளதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொத்த நோய்த்தொற்றுகளின் விகிதமாக மரணங்களை அளவிடுகிறது. மொத்த நோய்த்தொற்றுகள் செரோசர்வேஸ் மூலம் மதிப்பிடப்படுகின்றன. ஆரம்ப அரசாங்க ஆய்வுகள் படி இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதமானது 0.08% ஆகவே உள்ளது. அமெரிக்காவின் இறப்பு மதிப்பீடானது, சுமார் 0.6%, இது இந்தியாவை காட்டிலும் எட்டு மடங்கு அதிகம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil