Advertisment

கொரோனாவுக்கு மத்தியிலும் கொள்முதல் மற்றும் ஏற்றுமதியில் சாதனை படைத்த உணவு தானியங்கள்

Explained: In Covid-19 pandemic, four food records: கொரோனா தொற்றுக்கு மத்தியிலும், விற்பனை, கொள்முதல், கையிருப்பு மற்றும் ஏற்றுமதியில் சாதனை படைத்த உணவு தானியங்கள்

author-image
WebDesk
New Update
கொரோனாவுக்கு மத்தியிலும் கொள்முதல் மற்றும் ஏற்றுமதியில் சாதனை படைத்த உணவு தானியங்கள்

விற்பனையில் சாதனை, கொள்முதல் சாதனை, அரசு கிடங்குகளில் கையிருப்பு சாதனை மற்றும் ஏற்றுமதி சாதனை. இது கொரோனா தொற்றுக்கு மத்தியிலும், கடந்த ஒரு வருடத்தில் நடந்த நான்கு சாதனைகளின் கதையாகும். “உணவு” - இன்னும் குறிப்பாக, பொது விநியோக முறை (பி.டி.எஸ்) மூலம் அனுப்பப்படும் அரிசி மற்றும் கோதுமை, என்டிஏ அரசாங்கத்தின் முக்கிய சமூக பாதுகாப்பு நிகர திட்டமாக மாறியது.

Advertisment

விற்பனை

2019-20 வரை, இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்.சி.ஐ) கோடவுன்களில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 62 மில்லியன் டன் தானியங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2012-13 மற்றும் 2017-18க்கு இடையில் கிட்டத்தட்ட 66 மில்லியன் டன்னிலிருந்து 60 மில்லியன் டன்னாக வீழ்ச்சியடைந்தது. இதில் பெரும்பாலானவை 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஃப்எஸ்ஏ) கீழ் பி.டி.எஸ் ரேஷன்கள் மூலம் வழங்கப்பட்டவை. முந்தைய யுபிஏ ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் 81.35 கோடி இந்தியர்களுக்கு மாதத்திற்கு குறைந்தது 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை ஒரு கிலோவிற்கு முறையே ரூ .2 மற்றும் ரூ .3 க்கு வழங்க வழிவகை செய்தது. என்.எஃப்.எஸ்.ஏ இன் கீழ் வருடாந்திர உணவு தானிய ஒதுக்கீட்டில் அந்தியோதயா அண்ணா யோஜனாவின் கீழ் 2.37 கோடி “ஏழ்மையிலும் ஏழ்மையான” குடும்பங்களுக்கு 35 கிலோ மாதாந்திர ரேஷன் திட்டமும் அடங்கும். இது கிட்டத்தட்ட 55 மில்லியன் டன் ஆகும்.

கடந்த ஆண்டு, நாடு தழுவிய ஊரடங்கின் போது, ​​என்.டி.ஏ அரசாங்கம் புதிய பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனாவை (பி.எம்.ஜி.கே.ஏ) அறிமுகப்படுத்தியது. இதன் கீழ், 2020 ஏப்ரல்-நவம்பர் மாதங்களுக்கு என்எஃப்எஸ்ஏ பயனாளிகளுக்கு மாதத்திற்கு 5 கிலோ கூடுதல் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன, இது 32 மில்லியனுக்கும் அதிகமான கூடுதல் ஒதுக்கீடாக உள்ளது. முடிவுகளை விளக்கப்படம் 1 இல் காணலாம். மத்திய தொகுப்பில் இருந்து அரிசி மற்றும் கோதுமையை எடுத்து கொள்வது மற்ற எல்லா ஆண்டுகளையும் விட 2020-21 ஆம் ஆண்டில் 93 மில்லியன் டன் ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 50% அதிகமாகும். இவற்றில் பெரும்பகுதி PMGKAY, ஆத்மனிர்பர் பாரத் தொகுப்பு (புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு) மற்றும் ஊரடங்கு தொடர்பான திட்டங்களுக்கு வழங்கப்பட்டது. இது மொத்தம் சுமார் 31.5 மில்லியன் டன் ஆகும்.

publive-image

தொற்றுநோயின் இரண்டாவது அலையை அடுத்து, இந்த ஆண்டு PMGKAY மீண்டும் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், அரசாங்கம் மாதத்திற்கு 5 கிலோ கூடுதல் இலவச தானியத்தை என்எஃப்எஸ்ஏ பயனாளிகளுக்கு 2021 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு மட்டுமே ஒதுக்கியது. ஆனால் ஜூன் 7 அன்று பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வரை அதன் நீட்டிப்பை அறிவித்தார், அதாவது நவம்பர் மாதம் வரை கூடுதல் தானியங்கள் வழங்கப்படும். இது, மீண்டும், 2021-22 ஆம் ஆண்டில் விற்பனை அளவு 28 மில்லியன் டன் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் இருக்கும்.

கொள்முதல்

பி.டி.எஸ் மூலம் தானியங்களை விற்பனை செய்வதற்கான கொள்முதல் மட்டுமல்லாமல் எல்லா நேரங்களிலும் கொள்முதல் அளவு உயர்ந்துள்ளது. அரசு நிறுவனங்கள், ஜூன் 11 நிலவரப்படி, 2020-21 ஆண்டில் 42.3 மில்லியன் டன் கோதுமை மற்றும் 55.4 மில்லியன் டன் அரிசியை வாங்கியுள்ளன. இது முந்தைய ஆண்டில் (விளக்கப்படம் 2) வாங்கிய 39 மில்லியன் டன் மற்றும் 51.8 மில்லியன் டன் சாதனையை கூட முறியடித்தது. தொற்றுநோய்க்கு பிந்தைய காலகட்டத்தில், அரசாங்கம் முன்பை விட அதிகமான தானியங்களை விநியோகித்துள்ளது.

publive-image

விற்பனையின் உயர்வு என்பது தொற்றுநோயின் விளைவாகும். இலவச உணவு என்பது மார்ச் 2020 க்குப் பிறகு பொருளாதார சீர்குலைவுகளால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய நிவாரண நடவடிக்கையாகும். இது எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ (மற்றொரு யுபிஏ மரபுத் திட்டம்) விட சிறப்பான திட்டமாகும். கொள்முதல் அதிகரிப்பு அநேகமாக மத்திய அரசின் வேளான் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிரான இயக்கத்தின் வீழ்ச்சியாக கருதப்படுகிறது. அக்டோபர் 2020 முதல் அரசு நிறுவனங்கள் வாங்கிய நெல் மற்றும் கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மதிப்பு சுமார் 238,250 கோடி ரூபாய். மூன்று வேளான் சட்டங்களும் இதற்கு முந்தைய மாதம் தான் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தொகையில் 38.5% பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்குச் சென்றுள்ளன, அதன் விவசாயிகள் போராட்டங்களில் முன்னணியில் உள்ளனர். வேளான் சீர்திருத்தச் சட்டங்கள் எம்எஸ்பி அடிப்படையிலான கொள்முதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதை விவசாயிகளை நம்ப வைக்க அரசாங்கம் எல்லாவற்றையும் மேற்கொள்கிறது. இதற்கு உதாரணமாக, 2020-21 ஆண்டில் பஞ்சாபிலிருந்து நெல் மற்றும் கோதுமை கொள்முதலின் புதிய உயர்வை குறிப்பிடுகிறது. விவசாயிகளுக்கு எதிரான அரசு என்ற குற்றச்சாட்டுகளுக்கு கொள்முதல் சாதனை அரசுக்கு வலுவான பாதுகாப்பாகும்.

உணவு தானிய இருப்புகள்

இது மூன்றாவது சாதனை. தொற்று நோயால் ஏற்பட்ட எதிர்பாராத சூழ்நிலையிலும் 93 மில்லியன் டன் மேலான உணவு தானிய விற்பனை நடந்துள்ளது. இதற்கு பி.எம்.ஜி.கே.ஏ-க்கு நன்றி. ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி மத்திய தொகுப்பில் அரிசி மற்றும் கோதுமை கையிருப்பு 109.44 மில்லியன் டன் ஆகும். இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் 97.27 மில்லியன் டன்னை விட அதிகம். முந்தைய நான்கு ஆண்டுகளின் (விளக்கப்படம் 3) வீழ்ச்சியடைந்த போக்கை மாற்றியமைத்து, கையிருப்பு அளவுகள் 2017 முதல் உயர்ந்து வருகின்றன.

publive-image

எம்.எஸ்.பி அடிப்படையிலான கொள்முதல் அரசியல் பொருளாதார கட்டாயங்களுடன் தொடர்புடையதாக இருந்தாலும், அதிகப்படியான கொள்முதலை விற்பனை செய்யும் வாய்ப்பை கொரோனா தொற்று வழங்கி,  எஃப்.சி.ஐ.யின் தானிய மலையை வீழ்த்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் தானியங்களை கொள்முதல் செய்தல், கையாளுதல், கொண்டு செல்வது, சேமித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றின் எஃப்.சி.ஐ யின் “பொருளாதார செலவு” ஒரு கிலோ அரிசிக்கு ரூ. 39.99 ஆகவும், ஒரு கிலோ கோதுமைக்கு ரூ .27.40  ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. பி.எம்.ஜி.கே.ஏ மற்றும் பிற சிறப்பு நிவாரண திட்டங்களின் கீழ் இலவசமாக விநியோகிக்கப்படும் 31.5 மில்லியன் டன் தானியங்களின் (20.8 மில்லியன் டன் அரிசி மற்றும் 0.7 மில்லியன் டன் கோதுமை) மானியம் மொத்தம் சுமார் 112,500 கோடி ரூபாய். இருப்பினும், உண்மையான செலவு குறைவாக இருந்திருக்கும், ஏனென்றால் எஃப்.சி.ஐ அதன் கோடவுன்களில் அதிகப்படியான கையிருப்புகள் வைத்திருப்பதன் மூலம் வட்டி மற்றும் சேமிப்பு செலவுகளைச் செய்கிறது. 2020-21 ஆம் ஆண்டில் கிலோ ரூ .5.40 என நிர்ணயிக்கப்பட்ட இந்த “இடையகச் செலவு” தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்போது கூட சேமிக்கப்படுகிறது. 31.5 மில்லியன் டன் மீதான வருடாந்திர சேமிப்பு ரூ .17,000 கோடிக்கு அதிகமாக இருந்திருக்கும். 2021-22 ஆம் ஆண்டிற்கான PMGKAY இன் கீழ் 28 மில்லியன் டன் கூடுதல் தானிய ஒதுக்கீட்டில் இதே போன்ற சேமிப்பு கிடைக்கும்.

ஏற்றுமதி

இப்போது இறுதி சாதனை: 2020-21 ல் இந்தியாவில் இருந்து 19.8 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது (விளக்கப்படம் 4). இந்த முழு அளவும் திறந்த சந்தையில் இருந்து வாங்கப்பட்ட தானியமாகும். 2020-21 ஆம் ஆண்டில் மத்திய தொகுப்பில் இருந்து வெறும் 75,000 டன் கோதுமை மற்றும் 4,000 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. இது முற்றிலும் வெளிவிவகார அமைச்சகத்தின் மூலம் “மனிதாபிமான அடிப்படையில்” இருந்தது.

publive-image

சர்வதேச விலைகள் கடினப்படுத்தப்படுவதால் ஏற்றுமதியின் அதிகரிப்பு கணிசமாக உதவுகிறது. ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தானிய விலைக் குறியீடு மே மாதத்தில் 95 என்ற அளவிற்கு மாத உயர்வை எட்டியது. ஆனால் உலகளாவிய விலைகளைத் தாண்டி, இந்திய அரிசி மற்றும் கோதுமையின் போட்டித்தன்மை பி.டி.எஸ்ஸிலிருந்து மறுசுழற்சி அல்லது வீணான தானியங்களால் ஏற்பட்டிருக்கலாம். PMGKAY / NFSA இன் கீழ் இலவசமாக அல்லது பகுதி இலவசமாக வழங்கப்படும் பாரிய அளவுகளைப் பொறுத்தவரை, இந்த தானியங்கள் சில திறந்த சந்தைக்கு அல்லது ஏற்றுமதிக்கு திருப்பி விடப்பட்டிருந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

எவ்வாறாயினும், நாளின் முடிவில், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் ஏராளமான தானியங்கள், பி.டி.எஸ் விற்பனை, கொள்முதல், கையிருப்பு மற்றும் ஏற்றுமதிகள் ஆகிய நான்கிலும் சாதனை படைத்துள்ளது. மோசமான தொற்றுநோய்களுக்கு மத்தியில் கூட இது சாத்தியமாகி உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Rice
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment