தடுப்பூசி பதிவு: கோவின் வெப்சைட்டில் பாதுகாப்புக்கு புதிய குறியீடு எண்

கோவின் போர்ட்டல் மூலம் முன்பதிவு செய்தவர்கள் திட்டமிடப்பட்ட தேதியில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற செல்லவில்லை எனில், அவர்களுக்கான தடுப்பூசி டோஸ் ஒதுக்கப்பட்டுள்ளதை எஸ்.எம்,எஸ் மூலம் தெரிந்துக் கொள்ள வசதி ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோவின் போர்ட்டல் மூலம் முன்பதிவு செய்வது கட்டாயம் என மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் பல கோடி பேர் தடுப்பூசிக்காக கோவின் போர்ட்டல் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சிலருக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக, சான்றிதழ் பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொது மக்களின் குற்றச்சாட்டுகளை அடுத்து, கோவின் போர்ட்டலில் மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில், கோவின் போர்ட்டலில் தடுப்பூசிக்காக பதிவு செய்து, தடுப்பூசி உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, தங்களது தடுப்பூசி குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொள்வதற்காக நான்கு இலக்கு பாதுகாப்பு குறியீட்டு எண்ணை, அவர்களது தொலைப்பேசி எண்ணுக்கு அனுப்பும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சில சந்தர்ப்பங்களில் கோவின் -19 தடுப்பூசிக்கான நியமனத்தை கோவின் போர்ட்டல் மூலம் முன்பதிவு செய்தவர்கள் திட்டமிடப்பட்ட தேதியில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற செல்லவில்லை எனில், அவர்களுக்கான தடுப்பூசி டோஸ் ஒதுக்கப்பட்டுள்ளதை எஸ்.எம்,எஸ் மூலம் தெரிந்துக் கொள்ள வசதி ஏற்பட்டுள்ளது.

சிக்கலை எதிர்கொள்ள கோவின் போர்ட்டலின் திட்டம் என்ன?

இன்று முதல், கோவின் போர்ட்டலில் கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்வோருக்கு, நான்கு இலக்க பாதுகாப்பு குறியீடு எண் அவரக்ளது தொலைப்பேசிக்கு எண்ணுக்கு அனுப்பப்படும். அந்த எண்ணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொது மக்களின் விவரங்கள் சரிபார்ப்பிற்கு பின், தடுப்பூசியை செலுத்தும் போது மருத்துவப் பணியாளர்கள் கேட்பார்கள். அப்போது, பயனாளி தகுதியுள்ளவர் எனக் கண்டறியப்பட்டால், 4 இலக்கக் குறியீட்டு எண்ணை பயனாளிகளிடம் கேட்பார்கள். மேலும், தடுப்பூசி நிலையை சரியாகப் பதிவுசெய்ய கோவின் போர்ட்டலில் உள் நுழையவும் 4 இலக்க குறியீட்டு எண் வழங்கப்பட்டு வருகிறது.

இது, ஆன்லைன் சந்திப்பை முன்பதிவு செய்பவர்களுக்கு உறுதி செய்யும். மேலும், இந்த வசதியின் மூலம், தடுப்பூசி செலுத்திக் கொள்வதை எளிதாக்குவதற்காக கோவின் போர்ட்டலில் வழங்கப்பட்ட ஓர் அம்சமாகும். இதனால், ஆள்மாறாட்டம் அல்லது தடுப்பூசியின் தவறான பயன்பாடு வாய்ப்புகளை குறைக்கலாம்.

இந்த அம்சம் பிற தளங்களால் முன்னர் பயன்படுத்தப்பட்டதா?

இது போன்ற பாதுகாப்பு அம்சங்கள், பொதுவாக சேவை வழங்குவோர்களால் தங்கள் தளத்தை துஷ்பிரயோகம் செய்வதை குறைக்க பயன்படுத்தப்படுகின்றன. ஓலா போன்ற பயன்பாடுகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வண்டிகளை முன்பதிவு செய்யும் போது நான்கு இலக்க கடவுச்சொல்லை வழங்குகின்றன.

இந்த கடவுச்சொல் டாக்ஸி-டிரைவருக்கு தெரியாது. மேலும், அவர்கள் காரில் ஏறியதும் பயணிகள் அவர்களுக்கு வழங்க வேண்டும். இதேபோல், சில உயர் மதிப்புடைய பொருட்களுக்கு, ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு குறியீட்டு எண்ணை அனுப்புகின்றன. அவை சரிபார்க்கப்பட்ட நபரிடம் அவர்களுக்கான பொருள் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, விநியோக முகவருக்கு அளிக்கப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Explained cowin portal gets new security code feature after user complaints

Next Story
தடுப்பூசிகளுக்கு காப்புரிமம் நீக்குவதால் ஏழை, நடுத்தர வருமான நாடுகள் எவ்வாறு பயனடையும்?Intellectual property waiver for Covid-19 vaccines
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com