Advertisment

மதுக்கடைகள் வழங்கும் தள்ளுபடிகளை டெல்லி அரசு தடை செய்தது ஏன்?

மதுபானங்களுக்கான தள்ளுபடிக்கு தடை விதித்த டெல்லி அரசு; வலுக்கும் எதிர்ப்புகள்; காரணம் என்ன?

author-image
WebDesk
New Update
மதுக்கடைகள் வழங்கும் தள்ளுபடிகளை டெல்லி அரசு தடை செய்தது ஏன்?

Gayathri Mani 

Advertisment

Explained: Why the Delhi government banned discounts being given by liquor shops: டெல்லியின் புதிய மதுபானக் கொள்கை அமலுக்கு வந்ததில் இருந்தே சர்ச்சைகளின் மையமாக உள்ளது, எதிர்க்கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் காங்கிரஸ், இது தொடர்பாக வழக்கமான போராட்டங்களை நடத்தி வருகின்றன.

எவ்வாறாயினும், மதுபானக் கடைகளால் வழங்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் விலை குறைப்புகளுக்கு அரசாங்கம் தடை விதித்த பிறகு, கொள்கையை அமல்படுத்திய ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அரசாங்கத்திற்கும், மதுபான கடை உரிமம் வைத்திருப்பவர்களுக்கும் இடையே ஒரு புதிய மோதல் உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 17 மதுபான நிறுவனங்கள் அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளன.

தள்ளுபடிகள் பற்றி புதிய மதுக் கொள்கை என்ன சொல்கிறது?

புதிய கொள்கையின் ஷரத்து 3.5.1 இன் கீழ், அனைத்து L-72 உரிமதாரர்களும் கலால் கமிஷனரால் நிர்ணயிக்கப்பட்ட மதுபானங்களின் MRP விலையில் தள்ளுபடிகள், விலை குறைப்புகள் மற்றும் சலுகைகள் வழங்க அனுமதிக்கப்பட்டனர். விற்பனையாளர்களின் கூற்றுப்படி, புதிய பாலிசியின் கீழ் உரிமக் கட்டணத்தைத் தவிர, கலால் வரி மற்றும் 10 சதவீதம் கூடுதலாக செலுத்துகிறோம், இது எங்கள் மதுபான கடைகள் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்பைப் கொடுத்தது என்கின்றனர்.

தள்ளுபடித் திட்டத்தின் கீழ், சில சில்லறை விற்பனையாளர்கள் ஒன்-பிளஸ்-ஒன் (ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்) சலுகையும் 40-50 சதவீத தள்ளுபடியும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது, மேலும், டூ-பிளஸ்-ஒன் (இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்) சலுகை மற்றும் 40-50 சதவீதம் தள்ளுபடி, மற்ற சலுகைகளுடன் எம்ஆர்பிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்திய மதுபான நிறுவனங்களின் கூட்டமைப்பு (CIABC) படி, ஏல முறையிலேயே தள்ளுபடிகள் முன்மொழியப்பட்டு அனுமதிக்கப்பட்டன. பீர் வெண்டிங் மெஷின்கள் மற்றும் டெட்ரா பேக்குகளில் மதுபானங்களை விற்பனை செய்யவும் கொள்கை முன்மொழியப்பட்டது. தள்ளுபடியை தடை செய்வதற்கான நடவடிக்கை மதுக்குடிப்பவர்களின் கூட்டத்தை குறைத்திருக்கலாம், ஆனால் யாரும் குடிப்பதை நிறுத்தவில்லை என்று விற்பனையாளர்கள் கூறுகிறார்கள். மக்கள் மலிவான மதுபானங்களுக்காக குர்கானுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், நகர அரசும் இந்தக் கொள்கையின் கீழ் பல மாற்றங்களைச் செய்தது, அனைத்து அரசுக் கடைகளையும் மூடுவது மற்றும் டெல்லியில் சில்லறை விற்பனையை தனியார் துறைகள் கையகப்படுத்த வழிவகை செய்தன. இது ஷோரூம்களைப் போலவே குளிரூட்டப்பட்ட பிரீமியம் விற்பனைகளையும் வாக்-இன் வசதியுடன் அறிமுகப்படுத்தியது, ஆனால் எதுவும் இன்னும் தொடங்கவில்லை. அண்டை மாநிலங்களுக்கு இணையாக மது அருந்துவதற்கான வயது வரம்பை 25ல் இருந்து 21 ஆக குறைக்கவும் பரிந்துரைத்தது. ஆனால், இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வ உத்தரவு இன்னும் வரவில்லை. பஞ்சாப் மற்றும் ஹரியானாவைப் போலவே கடை மூடப்படும் நாட்களும் 21 இல் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டது.

அரசாங்கம் ஏன் தள்ளுபடியை தடை செய்தது?

மதுக்கடைகளுக்கு வெளியே மக்கள் கூட்டம் மற்றும் நீண்ட வரிசையில் நிற்பதைத் தடுக்க, டெல்லி அரசு பிப்ரவரி 28 அன்று அனைத்து உரிமம் வைத்திருப்பவர்களுக்கும் தள்ளுபடிகள், விலை குறைப்புகள் மற்றும் MRP யில் வழங்கப்படும் சலுகைகளை நிறுத்த உத்தரவு பிறப்பித்தது. சமீபத்தில், உரிமம் வைத்திருக்கும் சில்லறை விற்பனையாளர்கள் அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்தபோது, ​​​​தள்ளுபடியால் நகரில் மது தொடர்பான பிரச்சினை ஏற்படுகிறது என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

“அவர்களின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் உரிமதாரர்கள் வழங்கும் தள்ளுபடியின் விளைவாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மதுபானக் கடைகளுக்கு வெளியே அதிக மக்கள் கூடும் நிகழ்வுகள் உள்ளன என்பது துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா நிலைமை இன்னும் முடிவடையவில்லை என்பதையும், கொரோனா ஆபத்து இன்னும் நீடிக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும், எனவே அதிக மக்கள் கூட்டம் நகரத்தில் கொரோனா பாதிப்புகளின் அதிகரிப்பை மோசமாக்க வாய்ப்புள்ளது, ”என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: உத்தர பிரதேச தேர்தலில் ஒபிசி வாக்குகள் யாருக்கு?

சில உரிமதாரர்களால் குறுகிய கால வணிக ஆதாயங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் ஆரோக்கியமற்ற சந்தை நடைமுறைக்கு தள்ளுபடி செய்வதும் வழிவகுக்கிறது, இது சந்தையில் சிதைவை ஏற்படுத்துகிறது என்று அரசாங்கம் மேலும் கூறியது.

மேலும், தள்ளுபடிகளை அனுமதிப்பதில் அதன் நோக்கம் நுகர்வோர் தேர்வு மற்றும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதே தவிர, சந்தை சக்திகளால் விலையை நிர்ணயிப்பதல்ல என்றும் அரசாங்கம் கூறியது.

மூத்த கலால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கொள்கையில் புதுப்பிக்கவும், திருத்தவும் மற்றும் மாற்றங்களை செய்யவும் அரசுக்கு உரிமை உள்ளது" என்றார். எவ்வாறாயினும், வரவிருக்கும் டெல்லி மாநகராட்சி (எம்சிடி) தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, RWAக்கள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமான மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளைத் திறப்பது குறித்து மக்கள் புகார் தெரிவித்ததால், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. பாஜக மற்றும் காங்கிரஸும் போராட்டத்தை உயர்த்தியுள்ளன, புதிய மதுபானக் கொள்கையை தங்கள் எம்சிடி தேர்தல் பிரச்சாரத்திற்கான முக்கிய நிகழ்ச்சி நிரலாக மாற்றியுள்ளன.

வணிகர்கள் ஏன் அதிக தள்ளுபடியை வழங்குகிறார்கள்?

விற்பனையாளர்களின் கூற்றுப்படி, புதிய கொள்கை செயல்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஒரு மாதத்திற்கும் மேலாக கடைகள் மூடப்பட்டிருந்தபோது, ​​​ஊரடங்கின் போது அவர்கள் சந்தித்த இழப்புகளை மீட்டெடுக்க அவர்கள் தள்ளுபடிகளை வழங்கினர். குர்கான் போன்ற பக்கத்து நகரங்களுக்குச் சென்று வாடிக்கையாளர்கள் மதுபானம் வாங்குவதைத் தடுக்க இந்த தள்ளுபடிகள் உதவியது என்றும், தேசிய தலைநகரை ஒப்பிடும்போது அங்கு அவை மலிவானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

"நாங்கள் கலால் வரி செலுத்தினோம் மற்றும் தள்ளுபடி வழங்க உரிமை பெற்றுள்ளோம். இது கடந்த ஒரு மாதத்தில் எங்கள் வணிகத்தை அதிகரிக்க உதவியது. ஜனவரி மாதத்தில் கூட, கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக மதுபானக் கடைகள் நஷ்டத்தை எதிர்கொண்டன. மாற்றங்களைச் செய்ய அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது, ஆனால் உரிமம் பெற்றவர்கள் கோடிக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர், எனவே இறுதியில் அவர்கள் நஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு முன், அவர்கள் குறைந்தபட்சம் அவர்களிடம் ஆலோசனை செய்திருக்க வேண்டும், ”என்று ஒரு சில்லறை விற்பனையாளர் கூறினார்.

ஆதாரங்களின்படி, மதுபானங்களின் விலையில் தள்ளுபடியானது மதுபானத் தொழிலின் வணிகத்தை உயர்த்தியது, மேலும் விற்பனை கிட்டத்தட்ட 200 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Delhi Explained Liquor Shops
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment