Advertisment

மூன்றில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு; 4 ஆம் கட்ட செரோ ஆய்வில் கண்டுபிடிப்பு

Explained: ICMR’s fourth serosurvey and its findings: கணக்கெடுப்பின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் 6 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு SARS-CoV-2 ஆன்டிபாடிகள் இருப்பதாகக் கூறுகின்றன

author-image
WebDesk
New Update
மூன்றில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு; 4 ஆம் கட்ட செரோ ஆய்வில் கண்டுபிடிப்பு

6 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் SARS-C0V-2 ஆன்டிபாடிகளைக் கொண்டிருந்தனர் என்று ஜூன்-ஜூலை மாதங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய நான்காவது நாடு தழுவிய செரோலாஜிகல் கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகள் காட்டுகிறது. மேலும், சுமார் 40 கோடி மக்கள் அல்லது நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Advertisment

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாடு முழுவதும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன் கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கவை, ஏனென்றால் முதல் முறையாக 6-17 வயதுடைய குழந்தைகள் இந்த தேசிய செரோசர்வேயில் சேர்க்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பின் முடிவுகளை ஐ.சி.எம்.ஆர், பொது இயக்குனர், டாக்டர் பால்ராம் பார்கவா வெளியிட்டார்.

செரோ கணக்கெடுப்பு என்றால் என்ன?

ஐ.சி.எம்.ஆர் நான்காவது சுற்று தேசிய இரத்த சீரம் கணக்கெடுப்பை நடத்தியது. செரோசர்வே என்பது கொரோனா வைரஸூக்கான ஆன்டிபாடிகள் சோதனையாகும். SARS-C0V-2 ஆன்டிபாடிகளின் செரோ-பரவலை மதிப்பிடுவதே கணக்கெடுப்பின் நோக்கம்.

21 மாநிலங்களின் 70 மாவட்டங்களில் 2021 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மே-ஜூன் (2020) ஆகஸ்ட்-செப்டம்பர் (2020); மற்றும் டிசம்பர்-ஜனவரி (2020-2021) ஆகிய கால கட்டத்தில் முந்தைய மூன்று சுற்று சர்வே நடத்தப்பட்ட அதே மாவட்டங்களில் தற்போதும் சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பில் கலந்துக் கொண்டவர்கள் யார்?

7,252 சுகாதார ஊழியர்கள் உட்பட மொத்தம் 28,975 பேர் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முதல் முறையாக 6-17 வயதுடைய குழந்தைகள் இந்த கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டனர்.

தேசிய செரோசர்வேயின் நான்காவது சுற்றின் முக்கிய கண்டுபிடிப்புகள் யாவை?

ஐ.எம்.சி.ஆரின் நான்காவது சுற்று தேசிய செரோசர்வேயின் முடிவுகள், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாட்டில் ஒட்டுமொத்த செரோ பாதிப்பு 67.6% ஆக இருந்தது, இது முந்தைய மூன்று ஆய்வுகளின் போது பதிவு செய்யப்பட்ட செரோ-பரவல் விகிதத்தை விட அதிகமாகும். மே-ஜூன் மாதங்களில் 0.7 சதவீதம் (2020); ஆகஸ்ட்-செப்டம்பர் (2020) காலத்தில் 7.1 சதவீதம்; மற்றும் டிசம்பர்-ஜனவரி (2020-2021) காலத்தில் 24.1 சதவீதம்.

எனவே, கணக்கெடுப்பின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் 6 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு SARS-CoV-2 ஆன்டிபாடிகள் இருப்பதாகக் கூறுகின்றன, அதாவது மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் கொரோனா வைரஸுக்கு ஆளாகியுள்ளனர். மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு ஆன்டிபாடிகள் இல்லை என்பதையும் இது காட்டுகிறது, அதேநேரம், இது கொரோனா வைரஸ்க்கு சுமார் 40 கோடி மக்கள் இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதைக் குறிக்கிறது.

முடிவில், ஆறு வயதிற்கு மேற்பட்ட பொது மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு SARS-CoV-2 நோய்த்தொற்று இருந்தது. மிக முக்கியமாக, மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் எந்த ஆன்டிபாடிகளையும் கொண்டிருக்கவில்லை… இந்த நாட்டின் 40 கோடி மக்கள் இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்கள் ”என்று டாக்டர் பார்கவா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

"ஆன்டிபாடிகள் இல்லாத மாநிலங்கள் அல்லது மாவட்டங்கள் அல்லது பகுதிகள் தொற்று அலைகளின் அபாயத்தை இயக்குகின்றன" என்று டாக்டர் பார்கவா கூறினார்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் செரோ பாதிப்பு ஒத்திருந்தது என்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது. 85 சதவீத சுகாதாரப் பணியாளர்களுக்கு SARS-CoV-2 க்கு எதிராக ஆன்டிபாடிகள் இருந்தன என்றும் அது அறிவுறுத்துகிறது.

குழந்தைகளைப் பற்றி கணக்கெடுப்பு என்ன கூறுகிறது?

பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் (6 -17 வயது) செரோபோசிட்டிவ் என்று கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன. அதாவது அவர்கள் கடந்த மாதங்களில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகளிடையே செரோ பாதிப்பு 6-9 வயதுக்குட்பட்டவர்களில் 57.2 சதவீதமும், 10-17 வயதுக்குட்பட்டவர்களில் 61.6 சதவீதமும் ஆகும்.

செரோசர்வேயின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின் தாக்கங்கள் என்ன?

"நம்பிக்கையின் கதிர்" இருப்பதாக கூறும் டாக்டர் பார்கவா, ஆனால் "மனநிறைவுக்கு இடமில்லை" என்கிறார். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும், சமூக ஈடுபாட்டைத் தடுப்பதையும் அவர் வலியுறுத்தினார். மேலும், சமூக, பொது, மத மற்றும் அரசியல் கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Explained Covid 19 Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment