திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை சுற்றியுள்ள விதிமுறைகள் மற்றும் மதிப்புகள் மாறி வருகிறது. மாறிவரும் இந்த சமீபத்திய போக்குகளால் இந்திய இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் உள்ள நிலையை ஒப்பிடும்போது, இளைஞர்கள் இப்போது வாழ்க்கையின் பிற்பகுதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள். லோக்னிட்டி-சி.எஸ்.டி.எஸ் இளைஞர் ஆய்வுகள் 2016 மற்றும் 2007 தரவுகளின் படி திருமணமான இளைஞர்களின் விகிதம் 2007 ல் 55% ஆக இருந்தது, 2016 ல் எட்டு சதவீத புள்ளிகள் குறைந்து 47% ஆக குறைந்துள்ளது.
பெண்களுடன் (41%) (அட்டவணை 1) ஒப்பிடும்போது இளைஞர்களில் அதிகமானோர் திருமணமாகாதவர்கள் (61%) என்பதை தரவுகள் எடுத்துக்காட்டுகிறது. கல்வி தகுதி திருமணத்துடன் தொடர்புடைய ஒரு முக்கிய காரணியாகும். திருமணமான இளைஞர்களின் விகிதாச்சாரத்தில் அடுத்தடுத்த அளவிலான கல்வியின் வீழ்ச்சியை ஒருவர் கவனிக்கிறார். (படம் 1).
திருமண விருப்பத்தேர்வுகள்
ஆன்லைன் டேட்டிங், சமூக வலைப்பின்னல் மற்றும் திருமண தளங்கள் போன்றவற்றின் வளர்ச்சி கணிசமான அளவு இருந்தாலும் குடும்பங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் தற்போதும் அதிக அளவில் நடக்கின்றன: 2016 ஆம் ஆண்டில் திருமணமான இளைஞர்களில் 84% பேர் தங்கள் திருமணத்தை குடும்பங்களால் தீர்மானிக்கப்பட்டதாகவும் 6% மட்டுமே சுய தேர்வு தெரிவித்ததாகவும் தரவுகள் காட்டுகின்றன(படம் 2) .
திருமணமாகாத இளைஞர்களும் குடும்பங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை விரும்புகின்றனர். 50% பேர் இந்த வகையான திருமணத்தைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறினர். 12% மட்டுமே சுய தேர்வு திருமணத்தை தேர்வு செய்வதாகக் கூறினர். ஆச்சரியம் என்னவென்றால், 2016 ஆம் ஆண்டில் ஆய்வு வெறும் 3% இளைஞர்கள் மட்டுமே திருமண தளங்களில் விளம்பரம் செய்ததாக குறிக்கிறது.
31% இளைஞர்கள் தங்கள் திருமண முடிவில் தங்கள் பெற்றோர் அதிக செல்வாக்கு செலுத்துவார்கள் அல்லது முழுமையான செல்வாக்கு செலுத்துவார்கள் என்று கூறியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெற்றோரின் இந்த செல்வாக்கு ஆண்களை (28%) விட பெண்களுக்கு (35%) அதிகமாக இருந்தது. மேலும், ‘அரசியல் மற்றும் சமூகத்திற்கு இடையிலான தேர்தல்’ என்ற சமீபத்திய ஆய்வின் தரவு, திருமணத்தில் பெண்களுக்கு என முடிவெடுக்கும் போது அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் இருப்பதைக் காட்டுகின்றன. அவை நடைமுறையில் இல்லையென்றாலும் கூட. பெண்களில் 72% பேருக்கு எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்றும் மற்றும் 74% பேருக்கு யாரை திருமணம் செய்ய வேண்டும் என்றும் அவர்களது பெற்றோர் முடிவெடுக்கிறார்கள்.
திருமணம் பற்றியதன் முக்கியத்துவத்தில் ஒரு அணுகுமுறை மாற்றம் ஏற்பட்டுள்ளது, இதனால் பெரும்பாலானோர் திருமண விருப்பம் இல்லாமல் உள்ளனர். இந்திய இளைஞர்களில் 10 பேரில் 5 பேர் திருமணம் செய்வது முக்கியம் என்று கூறினாலும், இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு 10 ல் 8 ஐ விட மிகக் குறைவு (படம் 3, மேலே). கல்வியறிவு இல்லாதவர்களைத் தவிர, மற்ற அனைத்து குழுக்களும் இந்த உணர்வை வெளிப்படுத்த ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக வெளிப்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டது.
சாதி & மதம்
குடும்பங்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமண அமைப்பில் சாதி மற்றும் மதங்களை கடந்த திருமணம் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை இளைஞர் ஆய்வு 2016 காட்டுகிறது. திருமணமான இளைஞர்களில், மிகச் சிலரே வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் (4%) அல்லது தங்கள் மதத்திற்கு வெளியே (3%) திருமணத்தைத் தேர்ந்தெடுத்தனர். காதல் திருமணங்களில் இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை (சாதிகளுக்கு இடையேயான திருமணங்கள் 34%; மதங்களுக்கு இடையிலான திருமணங்கள் 12%). இருப்பினும், அதன் ஏற்றுக்கொள்ளல் நடைமுறையில் இருந்ததை விட தற்போது மிக அதிகமாக இருப்பதாக ஆய்வு காட்டுகிறது. 2007 ஆம் ஆண்டில் 31% முதல் 2016 இல் 56% வரை வேறு சாதியினருக்கு இடையிலான திருமணங்களை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு உயர்ந்த போக்கு நிலவி வருகிறது.
மாறாக, மதங்களுக்கு இடையிலான திருமணத்தை ஏற்றுக்கொள்வது மிகவும் குறைவு, 47% பேர் அதை ஏற்றுக்கொள்கிறார்கள், 45% பேர் அதை தவறாக கருதுகின்றனர். இளைஞர்கள், சுயமாக திருமணம் செய்தவர்களை தவிர, குடும்பங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சாதி மற்றும் மதங்களுக்கு இடையிலான திருமணங்களின் யோசனைக்கு அதிக எதிர்ப்பைக் காட்டினர்.
இரண்டு சிறுவர்களுக்கோ அல்லது இரண்டு சிறுமிகளுக்கிடையேயான காதல் விவகாரம் சரியானதாக, (முறையே 24% மற்றும் 26%) இளைஞர்களில் கால் பங்கிற்கும் குறைவானவர்களே கருதுகின்றனர். 2016 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (53%) திருமணத்திற்கு முன்பு டேட்டிங் செய்வதை எதிர்த்தனர், ஆனால் இதுவும் 2007 (60%) இலிருந்து குறைந்துள்ளது. இருப்பினும், 67% இளைஞர்கள் திருமணத்திற்கு முன் லிவ்-இன் என்ற எண்ணத்தை தவறாக கருதுகின்றனர்.
வாழ்க்கை துணைப் பற்றிய கருத்து
ஒருவரின் வாழ்க்கைத் துணையிடம் அவர் தேடும் குணாதிசயங்களைப் பார்க்கும்போது, இளைஞர்கள் தெளிவற்று இருப்பதாகத் தெரிகிறது. பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை. பதிலளித்தவர்களில், 14% பேர் வாழ்க்கைத் துணைக்கு நல்ல இயல்பு மற்றும் எளிமையான ஆளுமை இருக்க வேண்டும் என்பதே அவர்களின் மிகப்பெரிய கருத்தாகும்; 8% பேர் கல்விக்கு முன்னுரிமை அளித்தனர், மேலும் 5% பேருக்கு மரியாதைக்குரியவர்களாகவும் புரிந்துகொள்ளுபவர்களாகவும் பாரம்பரியமாகவும், பண்பட்டவர்களாகவும், தார்மீக விழுமியங்களைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது விருப்பம். மற்றொரு 5% பேர் தோற்றம் மற்றும் தோல் நிறம் அவர்களின் மிகப்பெரிய கருத்தாகும் என்று கூறினார். மனைவியின் தொழில் மற்றும் சம்பளம் சுமார் 4% பேருக்கு முக்கியமானதாக உள்ளது.
ஆண்களின் அதிகமானோர் விகிதம் கல்வி மற்றும் தோற்றம், குறிப்பாக தோல் நிறம் போன்ற குணங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக தெரிகிறது.
மறுபுறம், இளம் பெண்கள், இளைஞர்களுடன் ஒப்பிடும்போது தொழில் மற்றும் சம்பளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. மற்ற அளவுருக்களில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை.
மொத்தத்தில், இளைஞர்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறார்கள்; ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிறுவனம் இன்னும் அப்படியே உள்ளது; சாதி அல்லது மதம் கடந்து திருமணம் செய்வது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை; ஒட்டுமொத்தமாக, திருமணத்திற்கான அணுகுமுறைகள் பாரம்பரிய சிந்தனையின் எல்லைக்குள் இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil