Advertisment

இந்தியாவின் தனித்துவமான வேலைவாய்ப்பு நெருக்கடி

இன்று விவசாயத்தில் குறைந்த அளவான மக்கள் வேலை செய்கிறார்கள், ஆனால் மாற்றம் பலவீனமாக உள்ளது. விவசாயத்தில் இருந்து வெளியேறுபவர்கள் தொழிற்சாலைகளை விட கட்டுமான தளங்களிலும் முறைசாரா பொருளாதாரத்திலும் அதிகமாக வேலை செய்கிறார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவின் தனித்துவமான வேலைவாய்ப்பு நெருக்கடி

Harish Damodaran

Advertisment

Explained: India’s unique jobs crisis: இந்தியாவில் விவசாயத்தில் "அதிகமான மக்கள்" ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விவசாயத்தில் இருந்து தேவைக்கு அதிகமாக உள்ள உழைப்பாளர்களை மாற்று பணிகளுக்கு கொண்டு செல்ல இயலாமை என்பது அடுத்தடுத்த அரசாங்கங்களின் ஒரு பெரிய கொள்கை தோல்வியாகும். அது சரியா?

உண்மையில் இல்லை. பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலைவாய்ப்பு மையத்தின் தலைவரான அமித் பாசோலின் கூற்றுப்படி, கடந்த மூன்று தசாப்தங்களில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் உழைக்கும் மக்களின் பங்கு கணிசமாகக் குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஆபத்தான வைரஸ்களின் பிறப்பிடமாக ஆசியா, ஆப்பிரிக்கா; காரணம் என்ன?

1993-94 ஆம் ஆண்டில், நாட்டின் வேலைவாய்ப்பில் 62% விவசாயம் இருந்தது. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் காலமுறை தொழிலாளர் படை (முன்பு 'வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை' என அறியப்பட்டது) கணக்கெடுப்புகளின் தரவுகளின் அடிப்படையிலான இந்த விகிதம், 2004-05 இல் கிட்டத்தட்ட ஆறு சதவீத புள்ளிகள் குறைந்து, அடுத்த ஏழு ஆண்டுகளில் இன்னும் அதிகமாக (9 சதவீத புள்ளிகள்) குறைந்துள்ளது. சரிவு போக்கு குறைந்த வேகத்தில் இருந்தாலும், அடுத்தடுத்த ஏழு ஆண்டுகளிலும் தொடர்ந்தது.

ஒட்டுமொத்தமாக, 1993-94 மற்றும் 2018-19 க்கு இடையில், இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் விவசாயத்தின் பங்கு 61.9% இலிருந்து 41.4% ஆகக் குறைந்துள்ளது (விளக்கப்படத்தைப் பார்க்கவும்). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. அது அற்பமானதல்ல. 2018 ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவைக் கொண்டு, அதே வருமான வரம்பில் உள்ள மற்ற நாடுகளின் சராசரியுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் விவசாயத் துறையில் மொத்த பணியாளர்களில் 33-34% பேர் பணியாற்ற வேண்டும் என்று அமித் பாசோல் மதிப்பிடுகிறார். தற்போதைய 41.4% என்பது சராசரியிலிருந்து கணிசமான விலகலாக இருக்காது.

publive-image

பலவீனமான கட்டமைப்பு மாற்றம்

இருப்பினும், இது ஒரு உறுதியான கதையை உருவாக்கவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு தலைகீழ் போக்கு உள்ளது, அதாவது விவசாயத்தில் வேலை செய்பவர்களின் பங்கு 44-45% ஆக உயர்ந்துள்ளது. இது முதன்மையாக கொரோனாவால் தூண்டப்பட்ட பொருளாதார சீர்குலைவுகளுடன் தொடர்புடையது. காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு ஆண்டு என்பது ஜூலை முதல் ஜூன் வரையிலான காலகட்டமாகும். எனவே, 2019-20 கணக்கெடுப்பு முடிவுகள் என்பது மார்ச் மாத இறுதியில் இருந்து ஜூன் 2020 இறுதி வரையிலான முதல் ஊரடங்கு காலத்தையும் உள்ளடக்கும். 2021-22 வரையிலான கணக்கெடுப்பின் முடிவுகள், நீண்ட கால போக்கின் மறுசீரமைப்பை வெளிப்படுத்தும் விதமாக இருப்பினும், மக்கள் மீண்டும் விவசாய வேலைகளுக்குத் திரும்புவது ஒரு தற்காலிகப் பின்னடைவாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, கடந்த மூன்று தசாப்தங்களாக அல்லது அதற்கும் மேலாக இந்தியாவில் விவசாய வேலைகளிலிருந்து தொழில் சார்ந்த வேலைகளுக்கு மாறிய நிலை கூட பொருளாதார வல்லுநர்களால் "கட்டமைப்பு மாற்றம்" என்று அழைக்கப்படுவதற்கு தகுதி பெறவில்லை. இத்தகைய மாற்றமானது, உற்பத்தி, மதிப்புக் கூட்டல் மற்றும் சராசரி வருமானம் அதிகமாக உள்ள துறைகளுக்கு, குறிப்பாக உற்பத்தி மற்றும் நவீன சேவைகளுக்கு, தொழிலாளர்களை விவசாயத்திலிருந்து மாற்றுவதை உள்ளடக்கும்.

இருப்பினும், மொத்த வேலைவாய்ப்பில் உற்பத்தி (மற்றும் சுரங்கம்) பங்கு உண்மையில் விவசாயத்துடன் சேர்ந்து குறைந்துள்ளது (அட்டவணையைப் பார்க்கவும்). விவசாயத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி உழைப்பாளர்கள் கட்டுமானம் மற்றும் சேவை துறைகளால் பெருமளவில் உறிஞ்சப்படுகின்றனர். தகவல் தொழில்நுட்பம், வணிக செயல்முறை அவுட்சோர்சிங், தொலைத்தொடர்பு, நிதி, சுகாதாரம், கல்வி மற்றும் பொது நிர்வாகம் போன்ற ஒப்பீட்டளவில் நல்ல ஊதியம் தரும் தொழில்களை சேவைத் துறை உள்ளடக்கியிருந்தாலும், இந்த விஷயத்தில் பெரும்பாலான வேலைவாய்ப்புகளை குட்டி சில்லறை விற்பனை, சிறு உணவகங்கள், வீட்டு உதவி சுகாதாரம், பாதுகாப்பு பணியாளர்கள், போக்குவரத்து மற்றும் இது போன்ற பிற முறைசாரா பொருளாதார நடவடிக்கைகள் வழங்குகின்றன. 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்பின் பங்கு குறைவாக இருந்தாலும் சரிவு இல்லாவிட்டாலும் இது தெளிவாகிறது.

எளிமையாகச் சொன்னால், இந்தியாவில் கட்டமைப்பு உருமாற்ற செயல்முறை பலவீனமாகவும் குறைபாடுடையதாகவும் உள்ளது. ஆம், தற்காலிகமாக ஸ்தம்பித்திருந்தாலும் கூட, விவசாய வேலைகளிலிருந்து தொழில் சார்ந்த வேலைகளுக்கு நகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அந்த உபரி உழைப்பாளர்கள் அதிக மதிப்பு கூட்டப்பட்ட விவசாயம் அல்லாத செயல்பாடுகளுக்கு, குறிப்பாக உற்பத்தி துறை மற்றும் நவீன சேவைகளுக்கு நகரவில்லை (அமெரிக்க பொருளாதார நிபுணர் மற்றும் 1971 நோபல் நினைவு பரிசு வென்ற சைமன் குஸ்நெட்ஸ் பெயரிடப்பட்ட பழக்கமான 'குஸ்நெட்ஸ் செயல்முறை'). மாறாக, அமித் பாசோலின் ஆய்வு நிரூபிப்பது போல், குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட முறைசாரா பொருளாதாரத்தில் தொழிலாளர் பரிமாற்றம் நடக்கிறது. விவசாயத்திற்கு வெளியே உருவாக்கப்படும் வேலைகள் பெரும்பாலும் குறைந்த ஊதிய சேவைகள் மற்றும் கட்டுமான துறையில் உள்ளன; வேலைவாய்ப்பில் கட்டுமானத்துறையின் பங்கு உற்பத்தி துறையை விட அதிகமாக உள்ளது.

பலவீனமான கட்டமைப்பு மாற்றம் மற்றும் முறைசாரா நிலைத்தன்மை ஆகியவை, குறிப்பாக கிராமப்புற குடும்பங்கள் உள்ளிட்ட பலவேறு தரப்பினரை தொடரும் போக்கை விளக்குகின்றன. அவர்களில் பலர் விவசாயம் அல்லாத ஆதாரங்களில் இருந்து முழுமையாகவோ அல்லது முக்கியமாகவோ வருமானம் ஈட்டும்போது கூட, தங்களின் சிறிய நிலங்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனாவுக்குப் பிந்தைய பொருளாதாரச் சரிவின் போது, ​​அரசாங்கத்தின் இலவச உணவுப் பொருட்களுடன் இந்த மிகச்சிறிய இருப்புக்கள்தான் அவர்களின் நாட்களைக் காப்பாற்றியது.

மாறாக ஒரு படம்

மார்ச் 31, 2020 முதல் ஜூன் 30, 2022 வரை, இந்தியாவின் முதல் ஐந்து ஐ.டி நிறுவனங்களில் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் டெக் மஹிந்திரா) ஊழியர்களின் எண்ணிக்கை 11.55 லட்சத்தில் இருந்து 15.69 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 4.14 லட்சம் அல்லது கிட்டத்தட்ட 36% அதிகரிப்பாகும். தொற்றுநோய்க்குப் பிந்தைய காலகட்டத்தில், விவசாயத்தைத் தவிர, பிற துறைகள் வேலைகளை நீக்கி, சம்பளத்தைக் குறைத்துக்கொண்டிருந்த நிலையில், இந்த அதிகரிப்பு உள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறை என்பது இந்தியப் பொருளாதாரத்தின் தனிமைப்படுத்தப்பட்ட தீவாகும், இது தொற்றுநோய்களின் போது வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தியது மற்றும் தொடர்ந்து செய்து வருகிறது. மேலே உள்ள ஐந்து நிறுவனங்களின் ஊழியர்களை ஒன்றாக சேர்த்தால், இந்திய ரயில்வே மற்றும் மூன்று பாதுகாப்பு சேவைகளில் முறையே 12.5 லட்சம் மற்றும் 14.1 லட்சம் ஊழியர்களை விட அதிகமான பணியாளர்கள் உள்ளனர். மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த ஆண்டில் ஐந்து பெரிய நிறுவனங்களுக்கான ஒரு பணியாளரின் சராசரி வருவாய் ரூ. 34.5 லட்சம் என்பது, நியாயமான நல்ல சம்பளத்தை வழங்கக்கூடிய உயர் உற்பத்தித் துறையாக ஐ.டி துறையைக் காட்டுகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் சமீபத்திய வெற்றிகளில் பெரும்பாலானவை ஏற்றுமதியின் உபயம். உண்மையில், கொரோனா தூண்டுதலால், இதுவரை ஏற்றுக்கொள்வதில் மெதுவாக இருந்த வணிகங்களிடையே கூட டிஜிட்டல் மயமாக்கலுக்கான தேவை அதிகரித்தது: இந்தியாவின் மென்பொருள் சேவைகளின் நிகர ஏற்றுமதி 2019-20ல் 84.64 பில்லியன் டாலரிலிருந்து 2021-22ல் 109.54 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஆனால் எல்லோரும் ஐ.டி நிபுணராக இருக்க முடியாது. உற்பத்தி துறையில் வேலைகள் இல்லாத நிலையில், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வேலை வழங்கும் சிறந்த இடமாக ஐ.டி துறை இருக்கும்போது, கிராமப்புற தொழிலாளர்களின் பெரும்பகுதி கட்டுமானத்துறை மற்றும் முறைசாரா சேவைகள் பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ளது. காரணம் ஓரளவு நன்றாகப் படித்தவர்கள் கூட புரோகிராமர்களாகவோ அல்லது மென்பொருள் குறியீட்டை எழுதவோ போதுமான தகுதி பெறவில்லை. அதனால், அவர்கள் ஆயுதப்படையில் சேர அல்லது என்.டி.பி.சி பதவிகளுக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் தேர்வுகளை எழுத விரும்புகிறார்கள்.

இந்தத் துறைகளில் இப்போதெல்லாம் அதிக ஆட்சேர்ப்பு நடப்பதில்லை என்பது வேறு விஷயம். இது, பல்வேறு திறன் தொகுப்புகள் தேவைப்படும் தொழில்களில் அதிக வேலைகள் உருவாக்கப்பட்டாலும், கிராமப்புறங்களில் இருந்து உபரி உழைப்பாளர்களுக்கு வேலை வழங்கும் நிலையில் இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment